நமது மத்திய சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் வாரங்கல் நகரில் மிகவும் சிறப்பாக 26-02-2013 முதல் 28-02-2013 வரை நடைபெற்றது. 28-02-2013 அன்று நடைபெற்ற பொது அரங்கில் 1500 தோழர்கள் கலந்து கொண்டனர்.பொது அரங்கை தலைவர் தோழர் நம்பூதிரி அவர்கள் தொடக்கி வைத்தார். ஆந்திர கலைக்குழு புரட்சிகர பாடல்களை தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பாடி சிறப்பித்தனர்.
பொது அரங்கில் நமது அனைத்து இந்திய செயலர் தோழர் P. அபிமன்யு, தோழர் அனிமேஷ் மிஸ்ரா, தோழர் P. அசோக பாபு, தோழர் M.N.ரெட்டி, திரு. K. சுரேஷ், மாநில செயலர், SNATTA, ஆந்திரா மாநிலம், திரு. விஸ்வநாத், மாநில செயலர், SNEA ஆகியோர் எழுச்சிமிகு உரையாற்றினர் .
வர இருக்கின்ற 6வது சரிபார்ப்பு தேர்தலில் நமது சங்கம் 50 சதவீததிற்கும் அதிக வாக்குகள் பெறும் என நமது தலைவர்கள் பிரகடனம் செய்தனர்.
பொது அரங்கில் நமது அனைத்து இந்திய செயலர் தோழர் P. அபிமன்யு, தோழர் அனிமேஷ் மிஸ்ரா, தோழர் P. அசோக பாபு, தோழர் M.N.ரெட்டி, திரு. K. சுரேஷ், மாநில செயலர், SNATTA, ஆந்திரா மாநிலம், திரு. விஸ்வநாத், மாநில செயலர், SNEA ஆகியோர் எழுச்சிமிகு உரையாற்றினர் .
No comments:
Post a Comment