பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில், சங்க அங்கீகாரத் தேர்தலுக்கான தயாரிப்புக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, தர்மபுரி வழக்குநிதியாக ரூ.1 லட்சத்தை சங்கத்தின் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜிடம் வழங்கினார். இந்நிகழ்வில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்லப்பா, பழனிச்சாமி, பி.இந்திரா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஆர்.கிருஷ்ணன் (முன்னாள் எம்எல்ஏ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Friday, March 29, 2013
Thursday, March 28, 2013
பன்னாட்டு கம்பெனியின் பகாசுர வரி ஏய்ப்பு
வரி ஏய்ப்பு
நோக்கியா செல்போன் நிறுவனம் ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகக்கூறி, வருமான வரித்துறை நோக்கியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஃபின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையை நடத்திவருகிறது. அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ளது. நோக்கியா கடந்த சில ஆண்டுகளாக ஒழுங்காக வரி செலுத்தவில்லை என்று புகார் எழுந்ததையடுத்து, வருமானவரித்துறையினர் கடந்த ஜனவரி மாதம் நோக்கியா நிறுவன அலுவலகங்களில் ஆய்வில் ஈடுபட்டனர். செல்போன் விலைகளை குறைத்துகாட்டி, வரிஏய்ப்பு செய்யப்பட்டிருந்தது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை முழுதையும் விரைவில் செலுத்துமாறு கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் வரிஏய்ப்பு புகாரை நோக்கியா நிறுவனம் வழக்கம்போல் மறுத்துள்ளது.
இதனிடையே கடந்த 6 ஆண்டுகளாக சுமார் மூன்றாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. வோடபோன் நிறுவனத்தை தொடர்ந்து நோக்கியா நிறுவனத்தின் வரிஏய்ப்பைப் பார்க்கும்போது பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக இந்தியா மாறும் அவல நிலையை ஆளும் அரசாங்கம் திட்டமிட்டு செய்வதாகத் தெரிகிறது.
விருதுநகரில் BSNLEU தலைவர்கள் முழக்கம்
விருதுநகர் மாவட்ட சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் 28-03-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி தலைமை தாங்க தோழர் M.பெருமாள்சாமி, மாவட்ட உதவி செயலர் சங்கக் கொடி ஏற்ற செயற்குழு இனிதே துவங்கியது. அஞ்சலி தீர்மானத்தை தோழர் M.முத்துசாமி, மாவட்ட உதவி செயலர் வாசிக்க, தோழர் M.S.இளமாறன், GMO கிளைச் செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
செயற்குழுவை மாவட்டச் செயலர் தோழர் S.ரவீந்திரன் முறையாக தொடக்கி வைத்தார். SNEA, மாவட்டச் செயலர திரு. G.செல்வராஜ், SDE, திரு.T.ராதாகிருஷ்ணன், SR. AO, AIBSNLEA மாநில பொறுப்பாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தோழர் செல்லப்பாண்டியன், TEPU சங்க மாநிலச் செயலர் அவர்கள் பேசும் போது சரிபார்ப்பு தேர்தலில் நமது பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் எனப் பேசினார்.
நமது மாநில செயலர் தோழர் S .செல்லப்பாவும், நமது பொது செயலர் .P.அபிமன்யுவும் இன்றைய BSNL நிலைமைக்கு யார் கரணம் என்பது பற்றியும், நிதி பற்றாகுறை உள்ள சூழ்நிலையிலும் நாம் சாதித்த சாதனைகளை விளக்கி, 6ஆவது சரிபார்ப்புத் தேர்தலில் 50% வாக்குகள் பெற்று நாம் முழுமுதற் சங்கமாக வருவோம் என்று எழுச்சியுரையாற்றினர்.
வருகின்ற சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU சங்கம் 50% ஓட்டுகளுக்கு மேல் வாங்குவதற்கு வாய்புகள் பிரகாசமாய் உள்ளதை செயற்குழுவில் கலந்து கொண்ட பெரும் திரளான ஊழியர் கூட்டம் வெளிச்சமிட்டு காட்டியது. சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கில் கலத்து கொண்ட DGM (FIN &IFA ) திரு. S.ஆழ்வார்சாமி அவர்கள் BSNL நிறுவனத்தை முனனேற்ற நமது BSNLEU சங்கம் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார்.
மாவட்டம் முழுவதும் இருந்து 230க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டது பெருமைக்குரியது. இதற்காக பாடுபட்ட அனைத்து தோழர்களையும் மாவட்ட சங்கம் பாராட்டை உரித்தாக்குகிறது.
சில காட்சிப் பதிவுகள் இங்கே...
பதிவுகள் தொடரும்....
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...