BSNLEU சங்கத்தின் விருதுநகர் மாவட்ட 9வது மாநாடு ராஜபாளையம் நகரில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் R.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது .தேசிய கொடியை ராஜபாளையம் கிளை சங்க மூத்த தோழர் குட்டி ராஜா ஏற்றினார் .BSNLEU சங்க கொடியை மாவட்ட துணை தலைவர் தோழர் அனவரதம் கோஷங்கள் முழங்க அதிர் வேட்டுக்கள் வெடிக்க ஏற்றினார் .
தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானத்தை தோழர் ராதாகிருஷ்ணன் வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் மாவட்ட தலைவர் தலைமையுரை நிகழ்த்த ,மாவட்ட செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார் .அதன் பின் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் முறையாக மாவட்ட மாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் .சிறப்புரையாக நமது அனைத்திந்திய சங்கத்தின் உதவி பொது செயலர் தோழர் S .செல்லப்பா பேசியபோது இன்றைய BSNL எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள் மீது விரிவாக பேசினார் .அதன் பின் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் பணி நிறைவு பெற்ற 9 தோழர்கள் கவுரவிக்க பட்டனர் .
விருதுநகர் மாவட்டத்தில் சிம் விற்பனையில் ஈடுபட்ட தோழர்கள் மற்றும் தோழியர்கள் மாவட்ட மாநாட்டில் கவுரவிக்க பட்டனர் . அதன் பின் நமது மாவட்ட மாநாட்டில் தோழர்கள் செந்தில்குமார் ,மாவட்ட செயலர் SNEA, பிச்சைக்கனி,மாவட்ட செயலர்,AIBSNLEA மற்றும் அதன் மாவட்ட தலைவர் தோழர் A நாராயணன் , TNTCWU சங்க மாவட்ட செயலர் தோழர் N ராமசந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .பின்னர் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் R ஜெயக்குமார் தலைமை தாங்கினார் .இன்றைய சூழலில் தனியார் நிறுவன போட்டியை சமாளிக்க செய்யவேண்டிய யுக்திகளை பற்றி விரிவாக மாவட்ட செயலரும் ,மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் அவர்களும் விரிவாக பேசினர் .துணை பொது மேலாளர் கருத்துரை வழங்கினார் .அதன் பின் புதிய நிர்வாகிகள் தேர்வை மாநில செயலர் தோழர் A பாபு ராதாகிருஷ்ணன் நடத்தினார் ,தோழர்கள் A மாரிமுத்து முன் மொழிய , M.கருப்பசாமி வழிமொழிந்த நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது .வர உள்ள 2018-2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளாக தோழர்கள் R ஜெயக்குமார் ,S ரவீந்திரன் , S பாஸ்கரன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .ராஜபாளையம் தோழர்கள் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்ததை மாவட்ட சங்கம் விரிவாக பாராட்டியது .
No comments:
Post a Comment