விருதுநகர் BSNLEU சங்கத்தின் முதலாவது மாவட்ட செயற்குழு கூட்டம் 14/06/2018 அன்று மாவட்ட தலைவர் தோழர் R ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட அமைப்பு செயலர் தோழர் N ,ராதாகிருஷ்ணன் தியாகிகளுக்கு அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் .பின்னர் மாவட்ட தலைவர் தனது உரையில் 9 வது மாவட்ட மாநாட்டை ராஜபாளையம் தோழர்கள் மிக்க எழுச்சியுடன் நடத்தியதை மனதார பாராட்டினார் . புதிய மாவட்ட சங்க நிர்வாகிகள் ஒரு கட்டுப்பாட்டுடன் நடந்து ஒரு எழுச்சி மிகு வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என வலியுறுத்தினார் .அதன் பின் ஆய் படு பொருளை சமர்ப்பித்து மாவட்ட செயலர் உரை நிகழ்த்தினார் ,குறிப்பாக மாவட்ட முழுவதும் செல் சேவை மிகவும் மோசமாக உள்ளதை சுட்டி காட்டி அதை சரி பண்ணுவதற்கு எந்த முயற்சியும் நடைபெறாமல் இருப்பதையும் ,தரைவழி இணைப்புகள் சரிவதை தடுப்பதற்கு அக்கறையற்ற போக்கும் நிலவுவதை கூறினார் .அதே போல் மனிதவளத்தை முறையாக தேவைப்படும் இடங்களில் நியமிப்பதில் மாவட்ட நிர்வாகம் ஒட்டு மொத்த தோல்வி அடைந்துவிட்டதை அவர் சுட்டி காட்டினார் ,இலாகா விதிகளின் படி நடவடிக்கை எடுக்காமல் இரண்டு சங்கங்களும் ஒத்து கொண்ட விஷயங்களை மட்டும் அமல்படுத்துவோம் என்ற மாவட்ட நிர்வாகத்தின் போக்கு மாவட்டத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் நிர்மூலமாக்கிவிடும் என அவர் சுட்டி காட்டினார் .குறிப்பாக outdoor பகுதியில் பினாமிகளை வைத்து வேலை பார்க்கும் ஊழியர்களை indoor பணிக்கு பயன்படுத்தவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது என பல மாவட்ட சங்க நிர்வாகிகளின் கருத்தை மாவட்ட செயற்குழு கவனத்தில் எடுத்து கொண்டது .அதே போல் பினாமிகளை டெலிபோன் exchange வளாகத்தில் அனுமதிப்பது என்ற போக்கை GM அவர்களிடம் பலமுறை சுட்டி காட்டியும் இன்றுவரை தொடர்வதை மாவட்ட நிர்வாகம் கை கட்டி நிற்பதை நமது மாநில சங்கம் மூலம் circle விஜிலென்ஸ் செல்லுக்கு மாவட்ட சங்கம் கடிதம் அனுப்பும் . மாவட்ட செயலர் சமர்ப்பித்த ஆய் படுபொருள் மீது அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் விரிவான விவாதம் செய்தனர் ,மாநில உதவி பொருளாளர் தோழர் சுந்தரராஜன் அகர்தலா CEC முடிவுகளை விளக்கி பேசினார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் மாநில சங்க நிர்வாகிகள் கூட்ட முடிவுகளை விளக்கி உரை நிகழ்த்தினார் ,இன்றைய செயற்குழுவில் அனைவரும் பங்கேற்றது ஒரு நிறைவான விஷயமாகும் .மாவட்ட செயற்குழுவில் பங்கேற்ற அனைவர்க்கும் மாவட்ட பொருளர் தோழர் பாஸ்கரன் குளிர்பானமும் ,பிஸ்கட்டும் வழங்கி நன்றியுரை நிகழ்த்தினார் .மாவட்ட மாநாடு நடத்திய ராஜபாளையம் கிளை மாவட்ட சங்கத்திற்கு தன் பங்களிப்பாக ரூபாய் 20,000/- வழங்கியது அனைவராலும் பாராட்ட பட்டது .
மாவட்ட செயற்குழு முடிவுகள்
1.செப்டம்பர் 5 நடைபெற உள்ள டெல்லி பேரணிக்கு மாவட்டம் முழுவதும் கிளை கூட்டங்களை நடத்தி ஊழியர்களை திரட்டுவது .
2.இளந் தோழர்களுக்கான மாநில அளவில் நடைபெற உள்ள பயிலரங்கத்தை விருதுநகரில் நடத்துவது .அன்று மாலை நமது பொது செயலர் பங்கேற்க கூடிய ஒரு மாலை நேர கூட்டத்தை நடத்துவது ,
3.அத்தியாவசியமான இடங்களில் ஊழியர்களை நிரப்புவதில் உள்ள காலதாமதத்தை முதன்மை பொது மேலாளரிடம் விண்ணப்பிப்பது .தாமதம் தொடருமானால் அதை எதிர்த்தும் ,சேவை குறைபாட்டை சரி செய்வதில் அக்கறையற்ற தன்மையை கண்டித்தும் இயக்கங்கள் நடத்துவது .
4.நடைபெறும் ரோடு ஷோகளில் அனைவரும் முழுமையாக பங்கேற்பது ,
5.குடும்ப உறுப்பினர்களோடு பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியை ஆகஸ்ட் 11,12 தேதிகளில் கொடைக்கானலில் நடத்துவது . அதற்கு தோழர் நந்தலாலாவை அழைப்பது ,
6,இந்த மாதம் 23 ஆம் தேதி உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு விருதுநகர் மாவட்ட மாநாட்டை நடத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது
அதில் மாநில மாநாட்டுக்கு செல்ல வேண்டிய பிரதிநிதிகளை முடிவு செய்வது .
லோக்கல் கவுன்சில் பிரச்சனைகளை மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் அவர்கள் தொகுத்து வழங்குவதை மாவட்ட சங்கம் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கும் ,
லோக்கல் கவுன்சில் பிரச்சனைகளை மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் அவர்கள் தொகுத்து வழங்குவதை மாவட்ட சங்கம் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கும் ,
No comments:
Post a Comment