பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீரழிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். செய்யும்பணித்தன்மைக்கேற்ப சம்பளம் வழங்கவேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம்ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கவேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திமதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்முன்னதாகநடைபெற்ற விளக்கக் கூட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மதுரைமாவட்டத் தலைவர் சி.செல்வின் சத்தியராஜ், மாவட்டச் செயலாளர் எஸ்.சூரியன், என்.சோனைமுத்து, விருதுநகர் மாவட்ட ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ஆர்.முனியசாமி,கே.அந்தோணிசாமி, சி.பழனிச்சாமி, எஸ்.மாயாண்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர்.பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மதுரை, விருதுநகர், காரைக்குடிமாவட்டங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் பிஎஸ்என்எல் உயரதிகாரியிடம் வழங்கினர். நமது விருதுநகர் மாவட்டம் சார்பாக 18 பெண் ஊழியர்கள் உட்பட 59 பேர் ஒப்பந்த ஊழியர் மாவட்ட சங்கம் சார்பாக பங்கேற்றனர் .
(கேமராவில் பிரச்சனை காரணமாக தேதி 25க்குப் பதிலாக 22 என உள்ளது)
No comments:
Post a Comment