Thursday, August 6, 2015

எழுச்சிகரமாக நடைபெற்ற 6 வது மாவட்ட செயற்குழு

விருதுநகர் மாவட்ட சங்கத்தின் 6 வது மாவட்ட செயற்குழு 05-08-2015 அன்று விருதுநகர் எழுச்சிகரமாக நடைபெற்றது .தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் தோழர் வெங்கடேஷ் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி பேசினார் .அதன் மாவட்ட செயலர் சமர்பித்த ஆய்வறிக்கை மீது நடந்த விவாதத்தில் அனைத்து கிளை சங்க ,மற்றும் மாவட்ட சங்க , RGB மற்றும் LCM உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .ஒரு ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது .ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை   வழங்கினர் .மாநில செயலர் தோழர் A பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் பற்றியும் , FORUM சார்பாக நடைபெற உள்ள தபால் அட்டை அனுப்பும் இயக்கம் பற்றியும் விரிவாக பேசினார் .  மாவட்ட பொருளாளர் தோழர் வெங்கடப்பன் நன்றியுரை கூற மாவட்ட செயற்குழு இனிதே நிறைவுற்றது .
கீழ் கண்ட முடிவுகள் செயற்குழுவில் எடுக்கப்பட்டன :
1. செப்டம்பர் 2 வேலை  நிறுத்தத்தை ஒட்டி அனைத்து கிளைகளும் பொது குழு கூட்டங்களை நடத்துவது .
                   தேதி                      கிளை 
             11-08-2015                            ராஜபாளையம் 
             17-08-2015                            ஸ்ரீவில்லிபுத்தூர் 
             19-08-2015                            சிவகாசி 
             20-08-2015                            சாத்தூர் 
             22-08-2015                            விருதுநகர் 
             24-08-2015                            அருப்புகோட்டை      
                                 மாவட்ட உதவி செயலர்   தோழர் வெங்கடேஷ் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டத்திலும் , மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் மற்றும் LCM உறுப்பினர் தோழர் ஜெயக்குமார்  சாத்தூர் கிளை கூட்டத்திலும், மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி சிவகாசி கூட்டத்திலும், LCM உறுப்பினர் தோழர் தங்கதுரை மற்றும் கண்ணன் ராஜபாளையம் கூட்டத்திலும் அருப்புகோட்டை ,விருதுநகரில் தோழர் சந்திரசேகரன் அவர்களும் அவசியம் பங்கேற்க வேண்டும் அனைத்து பொது குழுவிலும் மாவட்ட செயலர் மற்றும் மாவட்ட தலைவர் கலந்து கொள்வர் .NFTE சங்கத்துடன் பேசி ஒரு இணைந்த பிரசார பயணத்தை மாவட்ட சங்கம் மேற்கொள்ளும் .
2.FORUM தலைவர்களுடன் பேசி தபால் அட்டை இயக்க பணிகள் தொடங்கப்படும் .
3. மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு சில பிரச்சனைகளை தீர்ப்பதில் கண்டும் காணாதது போல் செயல்படுவதை கண்டித்து மாவட்ட சங்கம் 18-08-2015 அன்று ஒரு பெரும் போராட்டத்தை நடத்தும் . 
4. மாவட்ட மாநாடு வரும் 2016 மார்ச் மாதம் 8, 9 தேதிகளில் சிவகாசியில் நடைபெறும் .நமது போசகர் மதிப்பிற்குரிய தோழர் நம்பூதிரி மாநில செயலர்  தோழர் பாபு ராதாகிருஷ்ணன் , அனைத்திந்திய உதவி பொது செயலர் தோழர் செல்லப்பா , மாநில உதவி செயலர் தோழர் முருகையா , தோழியர் பால பாரதி ,MLA  அவர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்வது .போதிய நிதி திரட்டுவது .உலக மகளிர் தினத்தை ஒட்டி மார்ச் 8 ஆம் தேதியே பொது அரங்கை நடத்துவது .
5. செப்டம்பர் 13 ஆம் தேதி ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட மாநாடு விருதுநகரில் நடைபெறும் .
6. நாகர்கோயிலில் நடைபெற உள்ள ஒப்பந்த ஊழியர்களின் அகில இந்திய மாநாடுக்கு உரிய நிதி திரட்டுவத்ர்க்கு BSNLEU சங்கம் முழு  ஒத்துழைப்பை கொடுப்பது .GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் உடனடியாக ரூபாய் 500/- நன்கொடை வழங்கினார் .
7.ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட மாநாடுக்கு நமது BSNLEU சங்கம் சார்பாக ரூபாய் 3000/- நன்கொடை வழங்கப்பட்டது .
8. ஜூலை மாதம் நடைபெற்ற மேளா மற்றும் ரோடு ஷோ களில் நமது ஊழியர்கள் பெரும் எடுப்பில் பங்கேற்றதை மாவட்ட சங்கம் பாராட்டியது .மேலும் சிம்  விற்பனையில் மாநில இலக்கு  5300 என்பதையும் தாண்டி 5720 சிம் விற்பனை செய்தது பாராட்டுக்குரியது .
9.14-08-2015 அன்று நடைபெற உள்ள விரிவடைந்த மாநில செயற்குழுவிற்கு அனைத்து கிளை செயலர்களும் பங்கேற்பது 10. வரும் நமது மாவட்ட மகாநாடுக்கு நமது மாவட்ட அமைப்பு செயலர் தோழர் ராஜ்மோகன் அவர்கள் ரூபாய் 8300/- தருவதாக செயற்குழுவில் அறிவித்ததை மாவட்ட செயற்குழு தன நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது .



No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...