நெஞ்சத்தை கிள்ளிய சிவகாசி கிளை பொது குழு கூட்டம்
19-08-2015 அன்று சிவகாசி கிளைகளின் கூட்டு பொது குழு கூட்டம் கிளை தலைவர்கள் தோழர்கள் கருப்பசாமி மற்றும் அழகுராஜ் அவர்களின் கூட்டு தலைமையின் கீழ் சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர்கள் தோழர் ஜெயபாண்டியன் மற்றும் M கருப்பசாமி அவரகள சமர்ப்பித்த ஆய்வறிக்கை மீது விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டிய அவசியத்தையும் , மாவட்ட மற்றும் விரிவடைந்த மாநில செயற்குழுவின் முடிவுகளை விளக்கி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி , மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி , ஒப்பந்த ஊழியர் சங்க கிளை செயலர் தோழர் ராமசந்திரன் ,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ஆகியோர் பேசினர் .மார்ச் 8,9 தேதிகளில் நாம் நடத்த உள்ள 8 வது மாவட்ட மாநாட்டுக்கு வரவேற்பு குழு செயலராக தோழர் ஜெயபாண்டியன் அவர்களும் வரவேற்பு குழு பொருளராக தோழர் A .இன்பராஜ் அவர்களும் நியமிக்க பட்டனர் .மாவட்ட மாநாட்டுக்கு நிதி தேவையின் அடிப்படையை மாவட்ட செயலர் விரிவாக கூறினார் .அதன் பின் பேசிய மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தன் பங்களிப்பாக ரூபாய் 5000/- ஐ அறிவித்தவுடன் ஒட்டு மொத்த பொது குழுவில் பெரும் எழுச்சி ஏற்பட்டது .அள்ளி தந்த பூமியாம் BSNLEU சங்கத்திற்கு நன்றி கடனாய் நன்கொடையை வாரி வழங்க உடனடியாக பெரும் பாலான தோழர்கள் அதில் தங்கள் நன்கொடையை அறிவித்தனர் .உணர்வு பூர்வமாக நம் சங்கம் அனைவரின் நெஞ்சத்தில் உள்ளதை கண் கூடாக பார்க்க முடிந்தது .மாவட்ட மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதற்கு ஒரு உற்சாகத்தை சிவகாசி கிளை பொது குழு கூட்டம் தந்தது என்றால் அது மிகை அல்ல .தோழர் ராஜு அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது .
No comments:
Post a Comment