விருதுநகர் மாவட்டத்தின் FORUM மீட்டிங் தோழர் R சக்கணன் ,(NFTE ) தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது .வர உள்ள 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தின் அவசியத்தையும் , விருதுநகர் மாவட்டத்தில் போராட்டத்தை 100% அளவில் வெற்றி பெற செய்ய வேண்டிய கட்டாயத்தையும் BSNLEU மாவட்ட செயலர் தோழர் S ரவீந்திரன் , AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் , SNEA மாவட்ட உதவி செயலர் தோழர் ராமசாமி , AIBSNLOA மாவட்ட செயலர் தோழர் முருகேசன் ஆகியோர் பேசினர் .SNATTA மாவட்ட செயலர் தோழர் கோபிநாத் ,TEPU மாவட்ட செயலர் தோழர் ஜேசுராஜா சேவா BSNL தோழர் அழகு கார்த்திகேயன் எழுப்பிய சந்தேகங்களுக்கு தோழர் ராதாகிருஷ்ணன் உரிய விளக்கம் அளித்தார் .கீழ் கண்ட முடிவுகள் இன்றைய கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்டன .
1)மாவட்ட FORUM சார்பாக துண்டு பிரசுரம் வெளியிடுவது .
2)கோரிக்கைகளை விளக்கி ப்ளெக்ஸ் பேனர்களை அனைத்து ஊர்களிலும் வைப்பது
3) அனைத்து மாவட்ட செயலர்களும் உள்ளடக்கிய குழு மாவட்டம் முழுவதும் 3 நாட்கள் சுற்றுபயணம் செய்வது .
16-04-2015 காலை 10 மணிக்கு -------------ராஜபாளையம்
16-04-2015 காலை 11.30 மணிக்கு -------ஸ்ரீவில்லிபுத்தூர்
17-04-2015 காலை 10 மணிக்கு -----------சிவகாசி
17-04-2015 காலை 11.30 மணிக்கு ------- சாத்தூர்
18-04-2015 காலை 10 மணிக்கு ------------அருப்புகோட்டை
18-04-2015 காலை 12.30 மணிக்கு -------- விருதுநகர்
தோழர் கோபிநாத்,மாவட்ட செயலர் SNATTA நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது .
தோழர் கோபிநாத்,மாவட்ட செயலர் SNATTA நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது .
No comments:
Post a Comment