நிலம் கையகப்படுத்தும் மசோதாவால் நிலமற்ற 30 கோடி மக்கள் வேலை வாய்ப்பு பெற முடியும் என அமைச்சர் அருண் ஜெட்லி சொல்வது எந்த அளவுக்கு உண்மை?
'நான் தனியாக போனா கையேந்தி பவன்; நீ வாங்கி கொடுத்தா ஆரிய பவன்' அல்லது 'நான் தனியா போனா அரசு பஸ்; உன் செலவில வந்தா வால்வோ ஏசி' என தங்கள் நிறுவனங்களில் கடைபிடிக்கும் பொருளாதார சிக்கனங்களை, அரசிடம் சலுகைகளாக சுய நலத்துக்கு அனுபவிக்கின்ற போது வேறு நிலை எடுக்கின்றன. அரசிடம் அனைத்து சலுகைகளையும் பெறவே, பெரு நிறுவனங்கள் வேலை வாய்ப்பு என்ற ஏமாற்று வித்தையை அரசின் மூலமாக ஆடிக்காட்டுகின்றன.இதுவரை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (special economic zone) மூலம் இடம் இலவசம், தண்ணீர் இலவசம், 24 மணிநேர மின் வசதி, 10 வருடங்களுக்கு வரி விலக்கு என அனுபவித்து விட்டு எத்தனை பேருக்கு வேலை கொடுத்து வாழ வைத்தன? அப்படியே கொடுத்தாலும் வேலை நிரந்தரம் என்பது எட்டாக்கனி; hire and fire என்ற மேல்நாட்டு பொருளாதார சித்தாந்தப்படி எந்த நேரமும் வெளியே போ' என விரட்டும் கொள்கைகளைக் கொண்ட நிறுவனங்களே அதிகம்.

விகடன் வாசகர் பக்கம் ஷான், (மயிலாடுதுறை)
No comments:
Post a Comment