விருதுநகர் : பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பி.எஸ்.என்.எல் சேவை விரிவாக்கத்திற்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கான நிதி உதவியை அரசு வழங்க வேண்டும். கிராமபுற தரைவழி தொலை பேசி சேவையில் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்பது உட்பட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் இந்தியா முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 546 ஊழியர்களில் 392 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 92 பேர் விடுப்பில் சென்றனர். இதனால் 62 பேரை கொண்டு நேற்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் இயங்கியது. நேற்று காலை விருதுநகர் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சக்கணன் தலைமை வகித்தார். கன்வீனர் ரவீந்திரன் உட்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் பழுதுகளை சரிபார்க்க முடியாமல் மக்கள் சிரமமப்பட்டனர். வேலைநிறுத்தம் இன்றும் நடக்கிறது.

No comments:
Post a Comment