Saturday, October 18, 2014

சபாஷ் ! ஆந்திரா மாநில BSNL ஊழியர்கள்

       ஹூத் ஹூத் புயலால் ஆந்திரா மாநில கடற்கரையோர பகுதிகளில் உள்கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. அங்கு இன்னமும் தொலைத்தொடர்பு சேவைகள் சீரடையவில்லை.இது தொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் கோபமாகப் பேசிய சந்திரபாபு நாயுடு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வணிக நோக்கத்தோடு மட்டுமே செயல்படுகின்றன. மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை, தகவல் தொடர்பு சீரடையாததால் அரசின் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன, என்று கடிந்து கொண்டார்.இதே நேரத்தில் அரசுத்துறை நிறுவனமான BSNL நிறுவனம் தனது 85% நெட்வொர்க் ஐ சரிசெய்து உள்ளதை ஆந்திரா மாநில முதல் அமைச்சர் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்கள் பாராட்டி நமது ஆந்திரா மாநில தலைமை பொதுமேலாளர் உயர்திரு ஸ்ரீனிவாசன் அவர்களிடம் நமது சேவையை பாராட்டி உள்ளார் .நமது தொலை தொடர்பு சேவை விரைந்து சரி செய்யப்பட்டதால் மாநிலத்தில் நிவாரண பணிகளும் ,புனரமைப்பு பணிகளும் விரைந்து செயல்பட உதவி புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது .ஊடகங்களும் நமது பணியை பாராட்டி உள்ளன.நாமும் பாராட்டுவோம் ஆந்திர மாநில BSNL ஊழியர்களை !.இது விசயமாக நமது ஆந்திரா மாநில செயலருக்கு அம் மாநில தலைமை பொது மேலாளர் அனுப்பிய குறுந்தகவல் படிக்க :-Click Here

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...