Friday, October 31, 2014

ஆர்ப்பாட்டம்

     கேபிள் பகுதியில் டெண்டர் எடுத்துள்ள INNOVATIVE  நிறுவனம் கடந்த 4 மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு 20 தேதிக்கு மேல் சம்பளம் போடுவதையும் , EPF மற்றும் ESI சலுகைகளை வழங்காமலும் மற்றும் போனஸ் வழங்க மறுப்பதையும்  எதிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கடிதம் கொடுத்தும் , மாநில தலைமை   பொது மேலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பும் ஒரு முன்னேற்றமும் இல்லாததால்  INNOVATIVE நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்ய வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் கவனயிருப்பு   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மாநில சங்கத்திடம் ஆலோசனை செய்து அடுத்த கட்ட போராட்டம் நவம்பர் மாதம் 17 தேதி  நடைபெறும் .விருதுநகரில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தை தோழர் சந்திரசேகரன் தலைமை தாங்கி நடத்தினார் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் போராட்டத்திற்கான அவசியத்தை விளக்கி பேசினார் .தோழர் இளமாறன் கோஷங்கள் எழுப்ப தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட பொருளர் மாரிமுத்து நன்றி நவின்றார் .
             அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கிருஷ்ணசாமி மற்றும் தோழர் பெத்தணன் இருவரும் கூட்டுத் தலைமையேற்றனர். போராட்டத்தின் நோக்கங்களை வலியுறுத்தி தோழர் சோலை, தோழர் அஸ்ரப்தீன் ஆகியோர் பேசினர். தோழர் ஜெயக்குமார் கோஷங்களை முன்வைத்தார். தோழர் செந்தில்குமார் நன்றியுரை கூறினார்.
            இராஜபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் அனவரதன் தலைமை தாங்கினார். தோழர் முத்துராமலிங்கம் மற்றும் தோழர் வேல்ச்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார்கள். தோழர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
          மாவட்டம் முழுவதும் மொத்தம் 72 ஒப்பந்த ஊழியர்களும் 85 BSNLEU உறுப்பினர்களுமாக மொத்தம்157பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 









No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...