சிவகாசி
SDOP மற்றும் OCB கிளைகளின் கூட்டுக் கிளை மாநாடு 12-01-2013 அன்று சிவகாசி பழைய தொலைபேசி
நிலைய வளாகத்தில் தோழர் சிவபெருமான் தோழர் அழகுராஜ் அவர்களின் கூட்டுத் தலைமையின்
கீழ் நடைபெற்றது. தோழர் மணிவண்ணன் தேசியக் கொடியை ஏற்ற தோழியர் மதினா அவர்கள் சங்கக் கொடியை ஏற்ற மாநாடு இனிதே தொடங்கியது
.தோழர் ரசூல் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த, தோழர்கள் G.ராஜு மற்றும் A.ஜெயபாண்டியன் வரவேற்புரை
நிகழ்த்தினர். மாநாட்டை முறையாக மாவட்ட
செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கி வைத்து உரையாற்றினார். தோழர்கள் M.அய்யாசாமி, M .பெருமாள்சாமி, செல்வராஜ், முருகன் (CITU ), கோட்ட பொறியாளர் திரு. ராஜேந்திரன், துணை பொதுமேலாளர் திரு
.சொக்கலிங்கம், தோழர் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர், தோழர்M.முத்துசாமி, தோழர் M.S.இளமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழியர் மதினா அவர்களின் பணி ஒய்வுப் பாராட்டு விழாவும் இத்துடன் சேர்ந்து
நடைபெற்றது. தொழிற்சங்க இயக்கத்தில் தோழியரின் பங்கை அனைவரும் பாராட்டினர். SDOP கிளையில் தோழர் அழகுராஜ், தோழர் G.ராஜு, தோழர் இன்பராஜ் முறையே தலைவர், செயலர், பொருளாளர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். OCB கிளையில் தோழர் சிவபெருமான், தோழர் ஜெயபாண்டியன், தோழர் கணேசன் முறையே தலைவர், செயலர், பொருளாளர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் இருந்து பெருந்திரளாக ஊழியர்கள் கலந்துகொண்டனர் .
No comments:
Post a Comment