Monday, January 28, 2013

மிஸ்டு கால்' மகிமை


மொபைல் போன்கள் மூலம் பிறருக்கு, "மிஸ்டு கால்' அழைப்பு கொடுப்பதன் மூலம், 500 கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் நடக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது."மிஸ்டு கால்' என்ற வார்த்தையே பலருக்கு, வேம்பாக கசக்கும். அழைத்து பேசினால், காசு வீணாக போய்விடும் என நினைத்து, "மிஸ்ட் கால்' கொடுத்து, பேசும் சிக்கன நபர்கள் ஏராளமாக உள்ளனர். அத்தகைய நபர்களின் அழைப்புகளை ஏற்க, தயக்கம் காட்டுபவர்களும் உண்டு."மிஸ்டு கால்' கொடுப்பவர்களின் மனநிலையை மட்டுமே அடிப்படையாக வைத்து, இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றில், கோடிக்கணக்கில் வர்த்தகம் நடக்கிறது.இந்த புதிய முறை, 2011ம் ஆண்டில் தான் இந்தியாவில் பரவலானது. லோக்பால் மசோதா கோரி, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே மேற்கொண்ட போராட்டங்களுக்கு ஆதரவாக, "மிஸ்டு கால்' கொடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டனர்."மொபைல் போன்களில் முறையான அழைப்பு அளித்தால் பணம் செலவாகும்; "மிஸ்டு கால்' அழைப்புக்கு பணம் செலவாகாது' என்பதால், ஏராளமானோர், "மிஸ்டு கால்' கொடுத்தனர். 6 மாதங்களில், 2.5 கோடி பேர், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு, "மிஸ்டு கால்' மூலம் ஆதரவு அளித்தனர்.இதையடுத்து, பல முன்னணி நிறுவனங்களும், தங்கள் பொருட்களை விளம்பரபடுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் கருத்தை அறியவும், "மிஸ்டு கால்' முறையை பின்பற்ற துவங்கி விட்டன.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட எண்ணுக்கு, "மிஸ்டு கால்' கொடுத்தால், அவர்கள் கணக்கில் உள்ள பணம் விவரம், மொபைல் போனில் கிடைக்கும்.பெரிய பன்னாட்டு நிறுவனங்களான, எச்.யு.எல்., மைக்ரோ சாப்ட் போன்ற நிறுவனங்களும், "மிஸ்ட் கால்' மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்கின்றன.மராத்தி மொழி நாளிதழ் ஒன்று, தன் சந்தாதாரர்களுக்கு, மொபைல் போன் எண்ணை கொடுத்துள்ளது. அந்த எண்ணுக்கு, "மிஸ்ட் கால்' கொடுத்தால், மாத சந்தா விவரம், மொபைல் போனுக்கு வந்து விடும்.பிரபல சினிமா தியேட்டர் நிறுவனத்துக்கு, "மிஸ்டு கால்' கொடுத்தால், டிக்கெட் விவரம் தெரிய வருகிறது. விமான நிறுவனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் என, 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், "மிஸ்ட் கால்' மூலம், வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வருகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு சில கோடி ரூபாய் அளவிற்கு இருந்த, "மிஸ்டு கால்' வர்த்தகம், இப்போது, 500 கோடி ரூபாயை தாண்டி விட்டதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.   

                                                                                                                                                                                     நன்றி :- தினமலர் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...