Thursday, January 17, 2013

இன்று தோழர் ஜோதிபாசு நினைவு நாள்


அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தேசிய வாழ்வில் உயர்ந்து நின்ற மாமனிதர் தோழர் ஜோதிபாசு. இங்கிலாந்து சென்று உயர் கல்வி பெற்றவர் தோழர் ஜோதிபாசு. வசதியான வாழ்க்கையைத் துறந்து ஏழை எளியவர்கள், தொழிலாளர்கள் நலனுக்காகவே வாழ் நாள் முழுவதும் பாடுபட்ட மகத்தான தலைவர் ஜோதிபாசு.அவர் இடது ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் அடையாளமாகத் திகழ்ந்தார். சட்ட மன்ற, நாடாளுமன்ற அமைப்புகளில் பங்கேற்று மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதில் அனை வருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தேர்தலை மையமாக வைத்து அல்ல; அடித்தட்டு மக்களின் நலனை முன்வைத்தே ஓர் அரசு, திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதில் ஜோதிபாசு உறுதியுடன் இருந் தார். ஒரு கட்சியின் தலைவராகவோ, ஒரு மாநிலத்தின் முதல்வராகவோ அல்லாமல் தொழிலாளர்களின் தோழனாகவே அவர் அறியப்பட்டார்.மேற்குவங்கத்தில் ஜோதிபாசு அமல்படுத்திய அரசி யல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் அனைத் துக்கும் அடிப்படை, அவரது மனிதாபிமானம், மக்கள் மீது அவர் கொண்டிருந்த அப்பழுக்கற்ற நேசம், நம் பிக்கை.அர்ப்பணிப்புமிக்க அவரது பாதையை போற்றிப் பாதுகாப்போம்!

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...