TNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் அதன் தலைவர் தோழர் இளமாறன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் தொடக்க உரை நிகழ்த்தினார் .அதன் பின் BSNLEU மாவட்ட செயலர் வாழ்த்துரை வழங்கினார் .மாநில தலைவரும் ,அகில இந்திய துணை தலைவரும் ஆன தோழர் முருகையா சிறப்புரை நிகழ்த்தினார் .அதன் பின் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு உரிய விளக்கங்களை அவர் கூறிட மாவட்ட பொருளாளரும் மாநில சங்க நிர்வாகியுமான தோழர் வேலுச்சாமி நன்றியுரை கூறினார் .மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்ற இக் கூட்டத்தில் நமது மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் ,மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் ,அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் தோழர் மதிக்கண்ணன் ,விருதுநகர் OUTDOOR கிளை செயலர் தோழர் மாரிமுத்து , மாவட்ட துணை தலைவர் தோழர் அனவ்ரதம் ,மாவட்ட அமைப்பு செயலர் ராதாகிருஷ்ணன் ,மற்றும் ராஜாராம் மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர் மாவட்டம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர் .ஊதிய நிலுவை பிரச்சனை , EPF ,ESI பிரச்சனைகள் ,ஊதிய மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஆய்வு செய்யப்பட்டன .



No comments:
Post a Comment