Tuesday, September 20, 2016

உண்ணாவிரத போராட்டம்

           24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக விருதுநகரில் இன்று நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமை வகித்தார் . மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவர்கள் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து விரிவாக கோரிக்கைகளை விளக்கியும் ,அரசின் கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து நாம் நடத்துகிற இயக்கங்கள் ,அதன் மூலம் நமது நிறுவனம் காக்கப்படுகின்ற சூழல் , புன்னகையுடன் சேவையை நாடுதழுவிய அளவில் FORUM சார்பாக நடத்தியதன் விளைவு இன்று நமது நிறுவனம் 3800 கோடிக்கும் மேல் operating profit பெற்றுள்ளதை குறிப்பிட்டார் .மத  ரீதியில் மக்களை  பிளவு படுத்தி தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டங்களை பலவீனப்படுத்த நினைக்கும் மத்திய அரசின் போக்கை சுட்டி காட்டினார் .அதன் பின் மாவட்ட துணை செயலர்கள்  தோழர் ஜெயக்குமார் ,மற்றும் தோழர் அஷ்ரப் தீன் ,அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் மதி கண்ணன் ,GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் ,SDOP கிளை செயலர் மாரிமுத்து ,சிவகாசி கிளை செயலர்கள் தோழர்கள் முத்துசாமி மற்றும் கருப்பசாமி ,ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர் சமுத்திரம் ராஜை கிளை செயலர் முத்துராமலிங்கம ,சாத்தூர் கிளை செயலர் தோழர் கலையரசன் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் காதர் ,ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,தங்கதுரை ,அனவ்ரதம் , I .முருகன் ,ராஜு ,ராஜாராம் மனோகரன் ,வெங்கடசாமி ,கணேசமூர்த்தி ஆகியோரும் ,சேவா (R ) சார்பாக தோழர்கள் பரமேஸ்வரன் ,குருசாமி ஆகியோரும் ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ,மணிலா சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி ,ஒப்பந்த  ஊழியர் கிளை செயலர் தோழர் பாண்டியராஜன் ஆகியோரும் போராட்டத்தை வாழ்த்தி பேசினர் .உண்ணாவிரத போராட்டத்தை முறையாக நன்றி கூறி மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் முடித்து வைத்தார் .கவிதைகளும் பாட்டுகளும் நமது உண்ணாவிரத போராட்டத்திற்கு  வலிமை ஊட்டியது .சென்னை சொசைட்டியில் இருந்து தோழர் கனகாம்பரம் ,TSO ,சாத்தூர் தோழருக்கு வரவேண்டிய நிலுவை தொகை (surity சிக்கலால் ) கிடைப்பதற்கு ஒரு கடும் முயற்சி எடுத்து அதை பெற்று தந்த நமது மாநில சங்க நிர்வாகி தோழர் முருகையா அவர்களுக்கு தோழர் கனகாம்பரம் உண்ணாவிரத  பந்தலில் நன்றி கூறியது மட்டும் இன்றி நமது அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 5000 வழங்கியது குறிப்பிடத்தக்கது . 






































No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...