பிஎஸ்என்எல் ஊழியர் உண்ணாவிரதம்
விருதுநகர் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் 7ம் தேதி ஊதியம் வழங்க வேண்டும்; ஒப்பந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பிஎப் பணத்தை தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். போனஸ் சட்டப்படி 8.33 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட தலைவர் சமுத்திரகனி தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
<தினகரன் செய்தி >படிக்க :-Click Here
No comments:
Post a Comment