Friday, November 21, 2014

எழுச்சிமிகு வேலைநிறுத்த பிரசார பயணம்

       கடந்த 3 நாட்களாக ஒன்றுபட்ட பிரசார பயணத்தை தொடங்குவதற்கு விருதுநகர் BSNLEU மாவட்ட சங்கம் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காதலால் இன்று முதல் நமது சங்கம் எழுச்சிமிகு வேலைநிறுத்த பிரசார பயணத்தை காலை 1000 அளவில் ராஜபாளையத்தில் தொடங்கியது. பெரும் திரளான ஊழியர்கள் மத்தியில் தோழர் அனவரதம் தலைமை தாங்க கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் தொடக்கஉரை ஆற்ற, நவம்பர் 27 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டிய அவசியத்தை எழுச்சிகரமான உரையை தோழர்கள் ரவீந்திரன், சமுத்திரகனி, முத்துசாமி, வெங்கடேஷ், கண்ணன்(மதி), ஒப்பந்த ஊழியர் சங்க மாநில பொறுப்பாளர் தோழர் வேலுசாமி ஆகியோர் நிகழ்த்தினர். தோழர் சிவஞானம் நன்றியுரை கூறினார்.







          அதன் பின் தளவாய்புரம் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டத்திறகு மூத்த தோழர் பிரபு தலைமை வகிக்க தோழர்கள் ரவீந்திரன், சமுத்திரகனி, அஷ்ரப்தீன் ஆகியோர் பேசினர். இந்த இரண்டு நிகழ்சிகளையும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்த முத்துராமலிங்கம், வெங்கடேஷ், சிவஞானம், முருகன் (சத்திரப்பட்டி) ஆகியோருக்கு மாவட்ட சங்கம் தன் தோழமை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.


          மதியம் 1.30 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் தங்கதுரை தலைமை தாங்க தோழர் சமுத்திரம் கிளை செயலர் தொடக்க உரை நிகழ்த்த மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி, தோழியர் பகவதி அவர்கள் உரை நிகழ்த்தினர்பிரசார பயண குழுவிற்கு மதிய உணவு நிதியாக ரூபாய் 1000/- வழங்கிய மாவட்ட சங்க துணை தலைவர் தோழியர் பகவதிக்கு மாவட்ட சங்கம் தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.





          மதியம் 330 மணி அளவில் சிவகாசி OCB தொலை பேசி நிலையத்தில் ஊழியர்களை நேருக்கு நேர் சந்தித்து வேலை நிறுத்த பிரச்சாரம் செய்யப்பட்டது. அங்கிருத்து சிவகாசி பழைய தொலைபேசி நிலையம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் RSU தொலைபேசி நிலைய ஊழியர்களை சந்தித்து வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இன்றைய பிரசார பயணத்தில் மாவட்ட செயலருடன் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சமுத்திரகனி, முத்துசாமி, மதிகண்ணன், சந்திரசேகரன், அஸ்ரப்தீன், முனியாண்டி, வெங்கடேஷ், முனீஸ்வரன், ஜெயபாண்டியன், கருப்பசாமி, முத்துராமலிங்கம், சமுத்திரம், L.தங்கதுரை, RGB உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம், G.ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...