Thursday, July 10, 2014

20 வது லோக்கல் கவுன்சில் கூட்டம்

          09-07-2014 அன்று விருதுநகர் மாவட்ட 20 வது லோக்கல் கவுன்சில் கூட்டம்  பொது மேலாளர் திருமதி .S E ராஜம் ,ITS  தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் லேண்ட் லைன் பழுதுகளை சரி செய்ய போதுமான கேபிள் இல்லை. க்ரூப்ஸ் பகுதியில் வேலை செய்ய போதுமான ஒப்பந்த ஊழியர்கள் இல்லை மற்றும் மாவட்டத்தில் ஏராளமான பில்லர்கள் சரிந்த நிலையிலும், தரைமட்டத்திற்கு கீழேயும் உள்ளதை சரி செய்ய வேண்டும் என்பதையும்,அதே போல் BTS இல் உள்ள பழுது அடைந்த பாட்டரிகளை   மாற்றுவதற்கு போதுமான புதிய பேட்டரிகள் இல்லை என்பதால் செல் சேவை பாதிக்கப்படுவதையும் சுட்டி காட்டினோம்.
          பொது மேலாளரின் உத்தரவுகள் மாவட்டத்தில் கீழ் மட்டங்களில்  செயல் படுத்தப்படவில்லை என்பதையும், நிறுவனத்தின்  விதிகளை  புரிந்து கொள்வதில் ஏற்படும்  கோளாறுகளை களையவும், சேவையை சரி செய்ய இலாகா வண்டிகளை மற்றும் ஒப்பந்த  அடிப்படையில் ஓடும் கார்களை அனுமதிப்பதில் நிதியை காரணம் சொல்லி தட்டி கழிக்கும் அதே வேளையில் ஒப்பந்தகாரர்கள் துணையுடன் கார்கள் தவறாக பயன்படுத்துவது மாவட்டத்தில் அதிகரித்து உள்ளதை சுட்டி காட்டியும் நமது சங்க லோக்கல் கவுன்சில் உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்து நமது எதிர்ப்பை பதிவு செய்தோம்.
கீழ்கண்டவை விவாதிக்கப்பட்டு சில விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டன :
1. விருதுநகர் பழைய தொலைபேசி நிலையத்தில் உள்ள கோட்ட பொறியாளர், மற்றும்  துணைகோட்ட பொறியாளர்கள் அலுவலகங்களை மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்திற்கு  இடமாற்றம் செய்வதை 15-08-2014 க்குள்   செய்து முடிக்க வேண்டும். அதன் பின் பழைய தொலை பேசி நிலையத்தை வாடகைக்கு விடுவது.
2. அல்லம்பட்டி தொலைபேசி நிலையத்தை மெயின் தொலைபேசி நிலையத்தோடு  இணைப்பதற்கு கேபிள் வரைபடத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது.
3. மாவட்டம் முழுவதும்  பழுதடைந்த, தரை மட்டத்திற்கு  கீழே இருக்க கூடிய   பில்லர்களை சரி செய்ய விரைவில் டெண்டர் விடப்படும்.
4. கேபிள் மற்றும் பாட்டரிகள் தேவையை மாநில நிர்வாகத்திடம் பேசி வாங்குவதற்கு முயற்சி செய்வது .
5. வாடகை கட்டிடங்களில்  இயங்கும் RR நகர் மற்றும் வெம்பகோட்டை தொலைபேசி நிலையங்களை நமது கட்டிடங்களுக்கு மாற்ற நடவடிகையை துரிதப்படுத்துவது.
5. அனைத்து OUTDOOR டெலிகாம் மெக்கானிக்களுக்கும்  டேப்பர் வழங்க மாநில நிர்வாகத்திற்கு நிர்வாகத்தரப்பில் இருந்து மீண்டும் கடிதம் எழுதுவது.
6. Outdoor டெலிகாம் மெக்கானிக்களுக்கும், Power Plant பணியில் ஈடுபடும் TTAக்களுக்கும் Power Shoe வழங்கவும் TTAக்களுக்கு Tools Kit வழங்களும் நிர்வாகத் தரப்பில் ஒத்துக் கொள்ளப்பட்டது.
7.சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள திருச்சுழி தொலை பேசி நிலையத்தை சரி செய்ய estimateக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது.
8. PORT OUT சந்தாதாரர்கள் பட்டியலை சேல்ஸ் மற்றும் IMPCS பகுதிகளுக்கு கொடுக்க வேண்டும்  என்பது ஏற்று கொள்ளப்ட்டுள்ளது .
9. Wimax சேவை நிறுத்தப்பட்டதால் உபரியான TTA வை outdoor பகுதிக்கு போடாமல் SDE(Indoor)  பகுதிக்கு நியமனம் செய்ய பொது மேலாளர் கூறி உள்ளார். சிவகாசி OCB தொலைபேசி நிலையத்தில் SDE(Indoor) பகுதியில் ஒரு TTA நியமனம் செய்யப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
10. Transmission Team பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதைச் சுட்டிக்காட்டினோம். வரும் நாட்களில் இது போன்ற தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகமும் வலியுறுத்தியுள்ளது.
11. அருப்புக்கோட்டை Groups II பகுதிக்கு JTO அவசியம் தேவை என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளோம். நிலைமைகளை DGM ஆய்வு செய்து விரைவில் ஆவண செய்வார் என பொதுமேலாளர் உறுதியளித்துள்ளார்.
       கடுமையான நிதி நெருக்கடியை நிறுவனம் சந்தித்து வருகின்ற சூழலில் பிரச்சனைகளின் தேவையையும் அவசியத்தையும் உணர்ந்து நிதிச் சுமையைக் குறைக்கும்படியான திட்டமிடலை வேண்டுவதாக லோக்கல் கவுன்சில் அமைந்தது.
அத்துடன் வளர்ச்சிப் பணிகளில் தோளோடு தோள் நின்று அதிகாரிகளும் ஊழியர்களும் பணியாற்றிட வேண்டும் என்ற உணர்வையும் இக் கவுன்சில் உருவாக்கியிருந்தால் அது லோக்கல் கவுன்சிலுக்கும் நமக்கும் கிடைத்த வெற்றியே.விளாம்பட்டி பகுதியில் 3 ஆண்டுகளாக 300 இணைப்புகள் பழுதாகி இருந்ததை 1 மாத கால அவகாசத்தில் சரி செய்ததில் பெரு முயற்சி செய்த DE (Mtce ) திரு  தனுஸ்கோடி அவர்களையும் ,GSM பகுதியில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து 2 கோடிக்கும் மேல் வருவாய் கிடைப்பதில் பெரும் பங்கு வகித்த AGM(S-CM) திரு ராஜகோபால் அவர்களையும் ,குறுகிய காலத்தில் தமிழ்நாடு போலீஸ் துறைக்கு 2500 மேல் செல் இணைப்புகளை வழங்கியதில் பெரும் பணியாற்றிய மார்க்கெட்டிங் SDE திரு பழனிவேல்ராஜன் அவர்களையும் ஊழியர் தரப்பு சார்பாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தோம் . 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...