Friday, May 31, 2013

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சி

செய்தி படிக்க :-Click Here

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் விதி மீறல்

          ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.650 கோடி அபராதம்?: ரோமிங் விதிகளை மீறியதால் நடவடிக்கை எடுக்க பட உள்ளது .தொலைத் தொடர்பு சேவை அளித்து வரும் ஏர்டெல் நிறுவனம் விதிகளை மீறி செயல்பட்டதாக மத்திய தொலைத் தொடர்பு துறை குற்றம் சாட்டி உள்ளது. குறிப்பாக நீண்ட தூர நகரங்களில் இருப்பவர்களை லோக்கல் கால் கட்டணத்தில் தொடர்பு கொண்டு பேசும் வசதியை ஏர்டெல் நிறுவனம் அளித்தது. தொலைபேசியை பயன்படுத்துபவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி பலன் அடைந்தனர்.மும்பையில் இருந்து டெல்லிக்கு எஸ்.டி.டி.யில் பேசுபவர்கள் கூட லோக்கல் கால்கட்டணம் செலுத்தினார்கள்.

                                                                இதனால் ஏர்டெல் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த விதி மீறல்கள் 2003-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை நடந்தது. இதற்கு விளக்கம் கேட்டு மத்திய தகவல் தொடர்பு துறை ஏர்டெல் நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.ஏர்டெல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய தொலைத்தொடர்பு துறை ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு விசாரணை நடத்தி ஒரு மண்டலத்துக்கு ரூ.50 கோடி அபராதம் விதிக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைக்கு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய தொலைத் தொடர்பு துறை மந்திரி கபில்சிபல் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து அபராதத் தொகையை பெற மத்திய தொலைத் தொடர்புதுறை தீவிரமாகியுள்ளது. 13 மண்டலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.650 கோடியை ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்க திட்டமிட்டுள்ளன

Monday, May 27, 2013

உணர்ச்சிகரமான பாடகன் விடை பெறுகிறான், பாடல்களை நம்மிடம் விட்டு...



          ஒரு கண்ணதாசன், ஒரு சிவாஜி, ஒரு எம்.ஜி.ஆர்,ஒரு விஸ்வநாதன், ஒரு சௌந்தரராஜன்... இவர்களெல்லாம் ஒரு சகாப்தம்... திரும்ப வராது... தலைப்பாய் நீங்கள் படித்த வாக்கியம் சாட்சாத் டி எம் எஸ் அவர்களே சொன்னது, கவியரசு கண்ணதாசன் மறைவை அடுத்து சென்னை தொலை காட்சியில் கண்ணீர் மல்க அவர் சொன்ன செய்தி அது...

          பி பி ஸ்ரீ நிவாஸ், ராமமூர்த்தி என  மறைந்து கொண்டிற்கும் இசை மேதைகளின் வரிசையில் இப்போது டி.எம்.சௌந்தர்ராஜன் காலமாகிவிட்டார். இசை தேவதைக்குத் துயரம் மிகுந்த காலமும் கூட இது. டி எம் எஸ்  என்பது குரல் மட்டும் அல்ல. நான்கு பத்தாண்டுகளை,சில நூறு திரைப்படங்களை, பத்தாயிரம் பாடல்களை அடுத்தடுத்த தலைமுறைகளை அப்படியே கட்டி ஆண்ட இசைச் சிம்மம்.

கோவை வெற்றி விழா சிறப்புக் கூட்ட அழைப்புச் சுவரொட்டி


கடந்த வார மத்திய சங்கச் செய்திகள்

உயரும் மார்க்கெட் பங்களிப்பு

          TRAI யின் தகவலின் அடிப்படையில் கடந்த அக்டோபர்-2012 முதல் டிசம்பர் 2012 வரை BSNL நிறுவனம் 2.9 லட்சம் சந்தாதரர்களை சேர்த்துள்ளது. அதே காலகட்டத்தில் மிகப்பெரிய  தனியார் தொலைபேசி நிறுவனங்கள் லட்சக்கணக்கான சந்தாதாரர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நமது நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு 10.99%ல் இருந்து 11.56% ஆக உயர்ந்து உள்ளது.

2012 செப்டம்பர் முதல் 2012 டிசம்பர் வரை தனியார் நிறுவனங்கள் இழந்த இணைப்புகள்

Reliance -               16.32 million

Tata Tele Services - 8.80 million

Vodafone -                5.19 million

Airtel -                    4.02 million

Aircel -                   3.26 million

Sistema Shyam -    1.71 million

Idea -                     1.52 million

Saturday, May 25, 2013

Ivp4 இல் இருந்து Ivp6க்கு மாற்றம்

          BSNL தற்போதைய இணைய நெறிமுறையான Ivp4 நெறிமுறையை (Protocol) புதிய Ivp6 நெறிமுறைக்கு மாற்றியமமைப்பதற்காக ரூ. 300 கோடி முதலீடு செய்துள்ளது. இம்முதலீடு உபகரணங்களை மாற்றிமமைப்பதற்கும், பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்குமான முதற்கட்ட முதலீடாக அமையும்.
          32 பிட்டுகளை அடிப்படையாகக் கொண்ட Ivp4 நெறிமுறைக்கு மாற்றாக மாற்றியமமைக்கப்பட உள்ள Ivp6 நெறிமுறை 128 பிட்டுகளை அடிப்படையாகக் கொண்டது.
          ஹேக்கிங்கிற்குக் வாய்ப்புகள் குறைவாக உள்ள இந்தப் புதிய Ivp6 நெறிமுறை பாதுகாப்பான மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு மட்டுமன்றி பன்முகப்பயன்பாட்டிற்கான ஆதார் எண் போன்றவற்றிற்கும் பாதுகாப்பானது.

Thursday, May 23, 2013

வெற்றி விழா

          ஜூன் 4 ஆம்  தேதி கோயம்புத்தூரில் நடைபெற உள்ள சிறப்புக் கூட்டம் மற்றும் சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கத்திற்கு சிறப்பு சிறு விடுப்பு கேட்டு தமிழ் மாநில சங்கம் மாநில நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
கடித நகல் : CLICK HERE

JTO தேர்வு

          JTO தேர்வு ஜூன் 2 ஆம் தேதி நடைபெறும்.
மாநில சங்க செய்தி படிக்க :CLICK HERE

கேடர் பெயர் மாற்றம்

          கேடர் பெயர் மாற்றம் விசயமாக 30-01-2013 நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளபட்ட விஷயங்களை உடனடியாக  நடைமுறைப்படுத்த வலியுறுத்தி நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
கடிதம் நகல் : Click here

சங்க அமைப்பு சட்ட திருத்தங்கள்

         லூதியானாவில் நடைபெற்ற நமது BSNLEU சங்கத்தின் 6ஆவது  அகில இந்திய மாநாட்டில் சங்க அமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் நிறைவேற்றபட்டு, தொழிற்சங்க பதிவாளர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏற்று க்கொள்ளப்பட்டுள்ளது
அமைப்புச் சட்டத் திருத்தங்கள் படிக்க :CLICK HERE

Tuesday, May 21, 2013

மாறுதல் கொள்கையில் மாற்றம் வேண்டும்

                மாறுதல் கொள்கையில் ஒரு SSA / CIRCLEல் இருந்து  இன்னொரு SSA / CIRCLEக்குச் செல்ல 5 ஆண்டுகள் என்ற நிபந்தனையை 2 ஆண்டுகளாக குறைக்க வலியுறுத்தி நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த ஆண்டு புதிதாக எடுக்க உள்ள 2600 TTAக்கள் நியமனம் செயப்படும்போது பல ஆண்டுகளாய் விருப்ப மாறுதலுக்காக காத்ததிருக்கும்   TTAக்களின் விண்ணப்பங்களைப் பரீசீலிக்க வேண்டும் எனவும் நமது மத்திய சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கடிதம் படிக்க :-CLICK HERE

JCM உறுப்பினர் நியமனம்

      கூட்டு ஆலோசனை குழு நியமனம் தொடர்பாக BSNL நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வுத்தரவின்படி நமது BSNLEU சங்கத்திற்கு 9 இடங்களும் NFTE சங்கத்திற்கு 5 இடங்களும் கிடைக்கும்.
உத்தரவு நகல் படிக்க : CLICK HERE

Friday, May 17, 2013

78.2% IDA இணைப்பு

          78.2% IDA இணைப்பு விசயத்தில் BRPSE அமைப்பின் செயலர் கூறுகையில் தொலை தொடர்புத் துறை 78.2% IDA இணைப்பு பிரச்சினை விசயமாக BRPSE அமைப்பிடம் கலந்து ஆலோசிக்க தேவையில்லை எனக் கூறியுள்ளார்.மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் "நலிவடைந்த" பொதுத்துறை நிறுவனம் என அறிவிக்கப்படவில்லை.  ஆதலால் தொலை தொடர்புத் துறை இவ் விஷயம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என செயலாளர், BRPSE அவர்கள் கூறியுள்ளார். DOT திட்டமிட்டு 78.2% IDA இணைப்பை காலதாமதம் செய்வதை எதிர்த்து 12-06-2013 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

கோவையில் வெற்றி விழா

         சரிபார்ப்பு தேர்தலில் தொடர்ந்து 5ஆவது  முறையாக வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்த BSNLEU சங்கத்தின் மாநிலம் தழுவிய வெற்றி விழா 04-06-2013 அன்று கோயம்புத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.நமது மாவட்டத் தோழர்கள்,தோழியர்கள் அனைவரும் பெருந்திரளாய்க் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

Wednesday, May 15, 2013

மறு சீரமைப்பு தொடர்பான மனு

          அமைச்சர்கள் குழுவிடம் BSNL மற்றும் MTNL  மறு சீரமைப்பு விசயமாக  FORUM தலைவர்கள் சமர்ப்பித்த மெமோரண்டத்தை தங்கள் பகுதி மக்களவை  உறுப்பினரிடம் சமர்பிக்க நமது மத்திய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நமது ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளயம் தோழர்கள் தோழமை சங்க நிர்வாகிகளிடம் பேசி உடனடியாக மெமோரண்டத்தை மாண்புமிகு MP தோழர் லிங்கம் அவர்களிடம்  சமர்பிக்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது.

ஓய்வூதியர் அடையாள அட்டை

          ஓய்வூதியர் அடையாள அட்டை பெறுவது விசயமாக வந்த நிர்வாகத்தின் உத்தரவு.
பார்க்க :-   CLICK HERE

வோடபோன் வரிஏய்ப்பு

          பத்திரிக்கைச் செய்தி அடிப்படையில் மாண்புமிகு தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் அவர்கள் வோடபோன்   நிறுவனம் 11,000 கோடி வரிஏய்ப்பு செய்த  விவகாரத்தில் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது   கோர்ட்க்கு வெளியே இவ்விசயத்தை தீர்த்து கொள்ள மத்திய அமைச்சரவையிடம் வேண்டுகோள் வைப்பதாக   தெரிகிறது.இதே பரிவை நமது BSNL நிறுவனத்திற்கும் அமைச்சர் செய்யலாமே.
செய்திக்கு :-CLICK HERE

Monday, May 13, 2013

வங்கிகள் சூறை

          பாராளுமன்ற நிதி  நிலைக் குழுவின் அறிக்கையின்படி,  ஒவ்வொரு ஆண்டும் பொதுத்துறை வங்கிகள் Rs.15,000 கோடி ரூபாயை கார்போரேட் கம்பெனிகளுக்காக   தள்ளுபடி செய்கின்றன.இந்த மோசமான  தள்ளுபடியின் விளைவாக, பொதுத்துறை வங்கிகள் சீர்குலைந்து  வருகின்றன.கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மூலம் பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்படுவது  மிக நீண்ட காலமாக  நடந்துவருகிறது. அரசாங்கம் அமைதியாக பார்வையாளர் போல்  இதை வேடிக்கை பார்க்கிறது.

சில செய்திகள்

          டெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பை உயர்த்த நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது. வயது வரம்பை 53 ஆக  உயர்த்த நமது  சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கடிதத்திற்கு : CLICK HERE 

          NJCM, RJCM மற்றும் LCM ஆகிய அமைப்புகளுக்கு என ஒரு அமைப்பு சட்டம்  உருவாக்கப்பட வேண்டும் என    நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
கடிதத்திற்கு : CLICK HERE

          2 வது சங்கத்திற்கும் சங்க அலுவலக வசதி கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நமது சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
கடிதத்திற்கு : CLICK HERE

          பாகிஸ்தானில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளதை நமது மத்திய சங்கம் வரவேற்று உள்ளது.

டெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு

          டெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வுக்கு அறிவிப்பு வெளியாகி விட்டது. தேர்வு 11-08-2013 அன்று நடைபெற உள்ளது.


அறிவிப்புக்கு :- CLICK HERE

Saturday, May 11, 2013

போராட்ட அறைகூவல்


          78.2% IDA இணைப்பை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி Forum of BSNL Unions / Associations சார்பாக கீழ்கண்ட போராட்ட   அறைகூவல் வெளியிடப்பட்டுள்ளது. 

        1) 22-05-2013  அன்று அனைத்துக் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்


        2) 05-06-2013 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா


        3) 12-06-2013 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்


BSNL மற்றும் MTNL மறு சீரமைப்பு

          BSNL மற்றும் MTNL மறு சீரமைப்பு விசயமாக அமைச்சர்கள் குழுவிடம் நமது BSNL மற்றும் MTNL அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் சார்பாக 09-05-2013 அன்று மெமோரண்டம் சமர்பிக்கப் பட்டுள்ளது.

மெமோரண்டம் :-படிக்க :-CLICK HERE

Tuesday, May 7, 2013

சில தகவல்கள்

            1. நிதி நிலையை காரணம் காட்டி மீண்டும் LTC வசதியை BSNL நிர்வாகம் நிறுத்தி வைத்து உத்தரவு இட்டுள்ளது. 59 வயதை எட்டும் ஊழியர்கள் மட்டும் இவ்வசதியை பணி ஓய்வுக்கு முன் பயன்படுத்தலாம். நமது மத்திய சங்கம் இவ்உத்தரவை கடுமையாக எதிர்த்து நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
கடித நகலுக்கு : CLICK HERE
உத்தரவுக்கு : CLICK HERE

            2. ரிலையன்ஸ் நிறுவனம் தன் மொபைல் கட்டணங்களை 20% உயர்த்தி உள்ளது. சென்ற அக்டோபரில்தான் இந்நிறுவனம் மொபைல் கட்டணங்களை 25% உயர்த்தியது குறிப்பிடதக்கது. 

            3. மன்மோகன் அரசு கோல் இந்தியா லிமிடெட் கம்பெனியின் 10% பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.

Monday, May 6, 2013

JCM அமைப்பு உருவாக்கம் தொடர்பாக

            06-05-2013 அன்று தோழர் P.அபிமன்யூ, GS மற்றும் தோழர்  V.A.N. நம்பூதிரி, தலைவர், அவர்கள் திரு. A.N. ராய், டைரக்டர் (HR ) மற்றும் ஸ்ரீ நீரஜ் வர்மா, GM (SR)அவர்களைச் சந்தித்து 6வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகளை அடிப்படையாக கொண்டு JCM அமைப்பை உருவாக்குவது தொடர்பான ஆணைகளை உடனடியாக வெளியிட வலியுறுத்தினார்கள் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...