அருப்புகோட்டை பகுதியில் EOI பிரிவில் 2 ஒப்பந்த ஊழியர்கள் பணி நிறுத்தம் செய்யப்பட்டு 17 நாட்கள் ஆகியும் தீர்வு ஏற்படாதது தொடர்பாக DGM (ADMN ) அவர்களிடம் இன்று (17-12-2012) விவாதம் செய்தோம். மாவட்டப் பொதுமேலாளர் உத்தரவு இட்டும் DE (MTCE), அருப்புகோட்டை அவர்கள் அவர்களை மீண்டும் பணியில் எடுத்துக் கொள்வதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளோம். 18-12-2012க்குள் இப்பிரச்னை தீர்க்கப்படும் என DGM உறுதி அளித்துள்ளார். பேட்டியில் தோழர்கள் சமுத்திரக்கனி, புளுகாண்டி, STSO, உதயகுமார், SSSO, கண்ணன், TTA ஆகியோர் மாவட்ட செயலருடன் கலந்துகொண்டனர்.
நெட்வொர்க் பகுதியில் உள்ள பிரச்சனைகளை இன்று AGM (NWO) அவர்களிடம் விவாதித்துள்ளோம். குறிப்பாக conveyance allowance கொடுப்பது விசயமாக, தட்சகுடி மற்றும் மங்களம் பகுதி towerகளை ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு பணி ஒதுக்கீடு செய்வது, டீசல் போடுவதுற்கு போதுமான வாகன ஒதுக்கீடு செய்வது போன்ற பல்வேறு பிரச்சனைகளைப் பேசி உள்ளோம்.பேட்டியில் தோழர்கள். A.ஜெயபாண்டியன், ரசூல் ஆகியோர் மாவட்ட செயலருடன் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment