Wednesday, December 5, 2012

டிசம்பர் 4ல் நடந்த மாவட்டச் செயற்குழு

விருதுநகர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்டச்செயற்குழு 2012 டிசம்பர் 4ஆம் நாள் மாவட்ட BSNLEU அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆய்படு பொருளாக

Items for LCM & Work Committee, மாநிலச்செயற்குழு முடிவுகள் என இரண்டு முக்கியப் பொருள்களுடன் இன்னபிறவும்

செயற்குழுவிற்கு மாவட்டத்தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமை தாங்கினார். ஆய்படு பொருள்களை விளக்கி மாவட்டச்செயலாளர் தோழர் ரவீந்திரன் உரையாற்றினார். மாவட்டசெயற்குழுவை மாநில உதவிச்செயலாளர் தோழர் பழனிச்சாமி, மாநில செயற்குழு முடிவுகள் குறித்துப்பேசித் தொடங்கி வைத்தார்.

வேலைநிறுத்தம் போன்ற சூழ்நிலைகளில் வெளிப்படுகின்ற நமது பலகீனத்தை மறைக்க அல்ல – பலகீனத்தைச் சரிசெய்ய நாம் தொழிற்சங்க உறுப்பினர்களை அரசியல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நமது மாவட்டம் மாநில அளவில் 5ஆவது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டியதுடன், வீச்சாகச் செயல்பட்டால் தொழிற்சங்கச் செயல்பாடுகளில் இன்னும் சிறப்பான உயரங்களை நாம் எட்ட முடியும் என்ற ஆலோசனையை முன்வைத்தார்.

வந்திருந்த கிளைச்செயலர்களும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களும் ஆய்படு பொருள்களின் மீது தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். பொதுவாக LCM மற்றும் Work Committeeயில் நிலுவையில் இருக்கக்கூடிய தீர்க்கப்படாத பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினார்கள். அமைப்பு நிலை விவாதத்தைத் தொடர்ந்து தொகுப்புரையுடன் செயற்குழு முடிவடைந்தது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...