Friday, November 30, 2012

தருமபுரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரனம்....






உலகத்தீரே காதல் செய்வீர் என்றான் பாரதி.

தருமபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் திவ்யாவுக்கும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. நாகராஜன் வன்னிய சாதியைச் சேர்ந்தவர். இளங்கோ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்.

இந்தக் காதலினால், பித்தம் தலைக்கேறிய ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாய் பகுதியை அடுத்த நத்தம் காலனி, கொண்டாம்பட்டி மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த சுமார் 300 ஆதிதிராவிடர் வீடுகள் பற்றியெறிந்து சாம்பலாகியுள்ளது.

நத்தம் காலனியில் மட்டும் சுமார் 150 வீடுகள் எரிந்து சாம்பலாகியிருக்கிறது. சுமார் 60 இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு ஓட்டிப் பிழைத்து வந்த டாடா ஏஸ் வாகனங்கள் பயன்படுத்தமுடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகரில் சுமார் 50 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இங்கே சுமார் 48 கேஸ் சிலிண்டர்களைத் திருடிச்சென்றுள்ளனர். கொண்டாம்பட்டியில் 90 வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது.

சாதிவெறி தலைக்கேறிய கலவரக்காரர்களால் விளைவிக்கப்பட்ட பொருளாதார சேதத்தின் மதிப்பு மட்டும் சுமார் 6 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள் மக்கள். இதில் கோயில் நகைகள் மட்டும் சுமார் 3.5 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள்.

இந்த வெறியாட்டத்தை வர்க்க அரசியலை முன்னிறுத்துவதாக தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, பாட்டளி மக்கள் கட்சி என பெயர்வைத்துக் கொண்டாலும், (முன்நாளில் மட்டுமல்ல இந்நாளிலும்) வன்னியர் சங்சம்தான் நடத்தியது என எல்லா வெகுஜன ஊடகங்களும் அறிவிக்கின்றன. உண்மை அறியும் குழுக்களும் அறிவிக்கின்றன.

இந்த வெறியாட்டத்தை 2012 நவம்பர் 29ம் நாள் நடைபெற்ற மாநில செயற்குழு கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரனத்திற்காக ரூபாய் 1,00,000 அளிப்பதென முடிவு செய்துள்ளது. நமது மாவட்டத்தில் இருந்து ரூபாய் மூவாயிரத்தை நாமும் நிவாரனத்திற்கான நிதிக்காகப் பகிர்ந்து கொள்வோம்.

நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். நிவாரனங்கள் தீர்வு அல்ல. மீண்டு வருவதற்கான உதவிதான். தீர்வு என்பது தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் இப்படியான சாதி வெறியாட்டங்களுக்கு எதிராக நாம் நமது பாட்டாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டுவதற்கு உறுதியேற்பதிலும் அதனைச் செயல்படுத்திலுமே இருக்கிறது. உறுதியேற்போம். செயல்படுத்துவோம்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...