Monday, November 12, 2012

விருதுநகரில் ஒரு நாள் தர்ணா


   குறைந்தபட்ச போனஸ் கோரியும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்தும் அகில இந்திய அளவில் நடைபெற்ற ஒரு நாள் தர்ணாப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நமது மாவட்டத்தில் BSNL மாவட்ட பொதுமேலாளர் அலுவலகத்தின் முன்பு BSNLEU - 2012 நவம்பர் 9 ஆம் நாளன்று தர்ணாப் போராட்டம் நடத்தியது.
     தர்ணா போராட்டத்திற்கு தோழர் புழுகாண்டி தலைமை வகித்தார். தோழர் பெருமாள்சாமி தொடங்கி வைத்தார். தோழர் ரவீந்திரன் ஒருங்கிணைத்தார். சிஐடியூ-வின் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் லட்சுமி சிறப்புரை வழங்கினார். தோழர் வெங்கடப்பன் நன்றி கூறினார்.
தர்ணாவின் கோரிக்கைகள்
Ø தற்போதுள்ள பார்முலாவின் அடிப்படையில் குறைந்தபட்ச, ஊதியத்துடன் இணைந்த ஊக்கத் தொகையினை உடனடியாக வழங்கிடு. 27ஆவது தேசிய கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஒரு புதிய போனஸ் பார்முலாவை உருவாக்கிடு.
Ø  காஸியாபாத் BSNLEU மாவட்டச் செயலர் தோழர் சுக்கந்தர் பால் சிங்கை படுகொலை செய்த பொதுமேலாளரையும், கொலைக்கு உடந்தையாக இருந்த நால்வரையும் உடனடியாக கைது செய்திடு. BSNL நிர்வாகமே... கொலைகாரன் ஆதேஷ்குமார் குப்தாவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்.
Ø  4.4 MHzக்கு அதிகமாக  BSNL வைத்திருக்கும் 2G ஸ்பெக்ட்ரத்திற்கு அதிக உரிமக் கட்டணம் கட்ட வேண்டும் என அதிகாரம் கொண்ட அமைச்சர்கள் குழு (Empowered Group of Ministers) எடுத்த முடிவிலிருந்து BSNLக்கு விலக்கு அளித்திடு.
Ø ஓய்வூதிய நிதியில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவிகிதம் அனுமதிப்பது மற்றும், காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதிவிகிதத்திலிருந்து 49 சதிவிகிதமாக உயர்த்துவது ஆகிய மத்திய அமைச்சரவையின் முடிவுகளை ரத்து செய்.
தர்ணாவில் 120 தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...