SNEA மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜன் தலைமையில் BSNLEU மாவட்ட உதவிச் செயலர் தோழர் வெங்கடேஷ், மாவட்ட உதவித் தலைவர் தோழர் புழுகாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் தங்கதுரை, NFTE ராஜபாளையம் கிளைச் செயலர் தோழர் பிள்ளையார், ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் கூடலிங்கம், SEWA BSNL ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள் தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு லிங்கம் அவர்களைச் சந்தித்து, ITS அதிகாரிகள் எந்தவித நியாமுமின்றித் தொடரும் Deputation தொடர்பான விஷயங்களை விளக்கி, ‘பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கை மனுவின் பிரதி’யைக் கொடுத்தனர். பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு லிங்கம் அவர்கள் மனுவின் மீது ஆவன செய்து,பதில் தருவதாக வாக்களித்துள்ளார்.
நவம்பர் 22ல் கூடவிருக்கும் பாராளுமன்றம் கூட்டத் தொடருக்கு முன்னர் ‘பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கை மனுவின் பிரதி’யை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய சங்கம் விடுத்த சுற்றரிக்கையின் தொடர்வினையை குறித்த காலத்தில் முடித்த ராஜபாளையம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.
தினகரன் நாளிதழில் வந்த செய்தி
No comments:
Post a Comment