30-08-2014 அன்று சிறப்புமிகு சிவகாசி செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க கொடியை தோழியர் கல்யாணசுந்தரி அவர்கள் ஏற்றி வைக்க , இன்னுயிர் ஈத்த தோழர்களை நினைவு கூறும் அஞ்சலி உரையை தோழர் கிருஷ்ணகுமார் படிக்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் செயற்குழுவை தொடக்கி வைத்து செயற்குழுவின் அவசியத்தை கூறினார் .பின்னர் சிறப்புரை நிகழ்த்திய தோழர்கள் வெங்கட்ராமன் ,மாநில உதவி தலைவர் ,மாநில உதவி செயலர் தோழியர் V P இந்திரா அவர்கள் தற்போது BSNL நிறுவனமும் அதன் ஊழியர்களும் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைத்தனர் .தோழர் வெங்கட்ராமனை தோழர் கருப்பசாமி ,SDOP கிளை செயலர் கௌரவித்தார் . தோழியர் இந்திரா அவர்களை தோழியர் ராஜேஸ்வரி ,TTA அவர்கள் கௌரவித்தார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளரும் வில்லிசை கலைஞருமான தோழர் லக்ஷ்மணபெருமாள் அவர்களை சாத்தூர் கிளை செயலர் தோழர் காதர் அவர்கள் கௌரவித்தார்.தோழர் லக்ஷ்மணபெருமாள் சிரிக்க வைத்து சிந்தனை உரையை நிகழ்த்தினார் . கேரளா மாநில குடும்ப சுற்றுலாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற தோழர்களுக்கு AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் T.ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார் .ESI அட்டையை தோழியர் இந்திரா அவர்கள் ஒப்பந்த ஊழியர்களுக்கு வ்ழங்க , அடையாள அட்டைகளை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் வழங்கினார் .மாநில மகாநாட்டு நன்கொடைகளை முழுமையாக வசூலித்த ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர் சமுத்திரம் , அதற்கடுத்த வசூலில் தோழர் ஜெயபாண்டியன் , தோழர் இளமாறன் ஆகியோருக்கு மாவட்ட தலைவர் சமுத்திரகனி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார் .அதே போல் அதிக ஊழியர்களை மாவட்ட செயற்குழுவிற்கு திரட்டிய தோழர்கள் கருப்பசாமி, ஜெயபாண்டியன்,இளமாறன் ,சமுத்திரம் ,சிங்காரவேல் ஆகிய கிளை செயலர்கள் மாவட்ட தலைவரால் கெளரவிக்கபட்டனர் .செயற்குழுவை வாழ்த்தி தோழர் T .ராதாகிருஷ்ணன் , மாவட்ட செயலர் .AIBSNLEA, ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் பெருமாள்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .மாவட்ட உதவி செயலர் தோழர் M முத்துசாமி நன்றி உரை கூற செயற்குழு நிறைவுற்றது .செயற்குழுவின் ஒரு பகுதியாக ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் M செல்வராஜூ அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது .தோழரை வாழ்த்தி ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் R முனியசாமி ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன், கிளை செயலர் தோழர் கருப்பசாமி ,ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ,DYFI செயலர் தோழர் முருகன் ஆகியோர் பேசினர் .மாவட்ட சங்க நிர்வாகிகள் சார்பாக தோழர் செல்வராஜூ அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது .தோழர் செல்வராஜூ ஏற்புரை நிகழ்த்த பணி ஓய்வு பாராட்டு விழா இனிதே நிறைவுற்றது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment