Monday, January 6, 2014

விருதுநகர் மாவட்ட ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு

          ‘நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை’  என்பதற்கினங்க ஆறு நாள் உடல் உழைப்பு சார்ந்த வேலைக்குப் பின்னர் ஏழாம்நாள் ஓய்வு என்பதனை மாற்றி, ஆறுநாட்கள் தனக்கான/தன் குடும்பத்திறகான உழைப்பு... ஏழாம் நாள் தான் சார்ந்த வர்க்கத்திற்கான பணி என்ற வகையில் இந்த ஆண்டின் முதல் ஞாயிறான ஜனவரி  5ஆம் நாள் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
          கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார்.மாநிலக்குழு உறுப்பினர் தோழர் வேல்ச்சாமி தனது தொடக்க உரையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்யத அவசியத்தையும், கிளைப் பொருப்பாளர்கள் அனைவருக்கம் தொழிற்சங்க வகுப்ப நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
          நிதிநிலையை மாவட்டப் பொருளாளர் மாரிமுத்து முன்வைத்து நிதிநிலையைச் சீர்படுத்த வேண்டியதில் தோழர்களின் பங்கை வலியுறுத்தினார். தோழர் ஜோதி பெண்கள் பயிலரங்க அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். வாழ்த்துரையாற்றிய BSNLEU  மாவட்ட துணைச் செயலர் தோழர் முத்துச்சாமி அமைப்பை இன்னும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தோழர் அபியமன்யு அவர்களின் பாராட்டுவிழாவில் ஒப்பந்தத் தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
          தொகுப்புரை வழங்கிய மாவட்டச் செயலர் தோழர் முனியசாமி, 6 கிளைகளின் செயல்பாடுகளின் மீதான தன்னுடைய பார்வையாக கிளைக்கூட்டக்ளை முழுமையாக நடத்துவது, சந்தா வசூலை முறைப்படுத்துவது, போராட்டக்ளின் கலந்து கொள்வது போன்ற விஷயங்களின் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். EPF, ESI விஷயக்களை ஒழுங்குபடுத்துவதற்காக பெறப்பட்ட படிவத்தில் இருக்கும் குளறுபடிகள் சரிசெய்யப்பட வேண்டும் என்றார். பிப்ரவரிக்குப் பின்னர் பிரதி மாதம் 10ஆம் தேதிக்குள் சம்பளம் உத்தரவாதப்படுத்தப்படும். இல்லையெனில் தலைநகர் நோக்கிய போராட்டத்தை நாம் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
          இறுதியாக விருதுநகர் கிளைச் செயலர் தோழர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...