ஜூன் 24 அன்று சிவகாசியில் விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் சேவை கருத்தரங்கம் ,நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் தோழர் ராஜமாணிக்கம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா மிகுந்த எழுச்சியுடன் ,உற்சாகத்தோடு நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமை வகித்தார் .தேசிய கொடியை தோழர் K .தர்மராஜ் ஏற்றி வைக்க ,நமது சங்க கொடியை தோழர் N .ராஜமாணிக்கம் அதிர் வேட்டுக்கள் வெடிக்க , கோஷங்கள் முழங்க ஏற்றி வைத்தார் .தோழர் சமுத்திரக்கனி தலைமையுரை நிகழ்த்த ,இரண்டு கிளைகளின் செயலர்கள் கருப்பசாமி மற்றும் முத்துசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர் .முறையாக மாவட்ட செயற்குழுவை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடங்கிவைத்து உரை நிகழ்த்தினார் .அதன் பின் நமது மாநில செயலர் தோழர் A பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினார் .ஊதிய மாற்றத்திற்கான வர இருக்கின்ற போராட்டங்கள் ,பொது துறைகளை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் கொள்கைகள் , மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விரிவாக நமது மாநில செயலர் பேசினார் .நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கை மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் N. நன்மாறன் துவக்கி வைத்து தனக்கே உரிய நகைச்சுவையுடன் சோவியத் புரட்சியின் தாக்கத்தை எளிமையுடன்விளக்கினார் .அதன் பின் நடைபெற்ற சேவை கருத்தரங்கத்தை அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் மதி கண்ணன் துவக்கி வைக்க ,னது மாவட்ட துணை பொது மேலாளர் திரு S.ராதாகிருஷ்ணன் கருத்துரை வழங்கினார் .SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார், ஓய்வூதியர் சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி மற்றும் பெருமாள்சாமி , கோட்ட பொறியாளர் திருமதி தமிழ் செல்வி BSNLEU திருநெல்வேலி மாவட்ட செயலர் தோழர் மரிய சூசை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் அதன் பின் நடைபெற்ற தோழர் ராஜமாணிக்கம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் ,நமது மாநில செயலர் பாபு ராதாகிருஷ்ணன் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி , புதிய மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆகியோர் தோழரை பாராட்டி கவுரவித்தனர் .தோழர் தர்மராஜ் அவர்களும் அக் கூட்டத்தில் பாராட்டு பெற்றார் .தோழர் இன்பராஜ் நந்தி நவில செயற்குழு இனிதே முடிவு பெற்றது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment