போராட்ட களத்தை நோக்கி
29/03/2017 அன்று கிளை செயலர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .8 கிளை செயலர்களில் அருப்புக்கோட்டை கிளை தவிர்த்து அனைவரும் பங்கேற்றனர் .கடந்த 25 ஆம் தேதி மாவட்ட பொது மேலாளருடன் நடைபெற்ற பேட்டியில் பேசப்பட்ட விஷயங்களை மாவட்ட செயலர் விரிவாக விளக்கினார் .குறிப்பாக லோக்கல் கவுன்சில் அமைப்பது விஷயமாக மாவட்ட நிர்வாகம் தேவையற்ற காலதாமதம் செய்வது .(யார் எந்த சங்கத்தின் உறுப்பினர் என்பதை கண்டுபிடிக்க 3 மாதம் ஆகிய கொடுமை )அனைத்து விதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் கையில் இருந்த போதும் தேவையின்றி மாநில நிர்வாகத்திடம் சந்தேகம் கேட்பது என்ற மாவட்ட நிர்வாகத்தின் நிலை வன்மையாக கண்டிக்க கூடியது .மாறுதல் கொள்கையில் கார்ப்பரேட் அலுவலக உத்தரவுகள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பது நமது சங்கத்தின் நிலைபாடு என்பதை தெளிவாக மாவட்ட நிர்வாகத்திடம் கூறி விட்டோம் .தவறினால் ஒரு எழுச்சி மிகு போராட்டத்தை நமது சங்கம் நடத்தும் .குறிப்பாக ஏப்ரல் மாதம் போராட்ட மாதமாக இருக்க வாய்ப்பு உண்டு என்பதை கிளை செயலர்கள் கூட்டத்தில் மாவட்ட சங்கம் தெளிவாக கூறி போராட்டத்திற்கு தயாராக இருக்க அறைகூவல் விடுக்கப்பட்டு உள்ளது .ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனையில் நாம் கொடுத்த கடிதம் எங்கு போனது என்றே மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவில்லை .81 உறுப்பினர்களுக்கு இதுவரை ESI அட்டை வழங்கப்படவில்லை என்பதை நிர்வாகம் அலட்சியம் செய்வதை நாம் ஏற்று கொள்ள முடியாது .அதே போல் INNOVATIVE நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களுக்கு செலுத்தவேண்டிய EPF /போனஸ் போன்றவற்றை அந்த நிறுவனம் செலுத்திய வைப்பு நிதியில் இருந்து முறையாக சலான் தயார் செய்து மாநில நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற குன்னூர் மாவட்ட கடித நகல் மாவட்ட துணை பொது மேலாளரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது .சாம் டெக்னாலஜி நிறுவனம் பவர் பிளான்ட் பணிகளில் முறையாக வருவதில்லை என்பது பேட்டியின் போது சுட்டி காட்டப்பட்டு உள்ளது .outdoor /indoor பணிகளுக்கு ஊழியர் பற்றாக்குறை கடுமையாக இருக்கும் போது பொது மேலாளர் அலுவலகத்தில் அளவுக்கு அதிகமாக டெலிகாம் டெக்னீசியன் உள்ளதை சுட்டி காட்டி உள்ளோம் .தேவையான இடங்களில் இவர்களை பயன்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை பொது மேலாளர் அவர்களால் ஏற்று கொள்ள பட்டு உள்ளது .ஒப்பந்த ஊழியர்களுக்கு புதிய ஊதிய மாற்றம் விஷயமாக ஒப்பந்தாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கடிதம் எழுத இசைந்துள்ளது .Forum எடுத்த முடிவுகளை அமல்படுத்துவது என்ற நிகழ்வில் மார்ச் 9 நடைபெற்ற பேரணி எழுச்சிகரமாக இருந்தது .அதே நேரத்தில் தினமும் ஒரு மணி நேர கூடுதல் வேலை செய்வது என்பது சிவகாசி மற்றும் ராஜபாளையம் கிளைகளில் சிறப்பாக நடைபெற்றது பாராட்ட வேண்டிய ஒன்று .ஆனாலும் அந்த நிகழ்வை ஒரு மாஸ் ஆக நடைபெற செய்வதில் நமக்கு வெற்றி இல்லை என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும் .கடந்த ஒரு மாத காலத்தில் (மார்ச் 2017) நமது சங்கம் தனியாக 24 இடங்களில் ரோடு ஷோ நடத்தி கிட்டத்தட்ட 3000 சிம்களை விற்பனை செய்தது மாபெரும் சாதனை .அதே போல் நமது தோழர்கள் கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட தரைவழி இணைப்புகளை அகன்ற அலைக்கற்றை வசதியுடன் பெற்றுள்ளனர் .மாநில மாநாட்டு நிதியாக சாத்தூர் கிளை தவிர அனைத்து கிளைகளும் முறையாக செலுத்தி உள்ளன .மறைந்த ஒப்பந்த ஊழியர் அசோக் குமார் குடும்ப நிவாரண நிதியாக அனைவரிடமும் வசூல் செய்து மே மாதம் 1 ஆம் தேதி அக் குடும்பத்திற்கு வழங்க அத்துணை உதவிகளையும் அனைத்து கிளை செயலர்களும் செய்ய வேண்டுகோள் விடுக்க பட்டது .
No comments:
Post a Comment