இன்று மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி எழுச்சிமிகு பேரணிக்கு .பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தலைமை வகிக்க , SNEA சங்க மாநில சங்க நிர்வாகி கோவிந்தராஜன் பேரணியை தொடக்கி வைத்தார் .AlBSNLEA மாவட்ட செயலர் பிச்சைக் கனி ,மற்றும் அதன் மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் , SNEA மாவட்ட செயலர் செந்தில் குமார் , பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சமுத்திரகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .பி எஸ் என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலர்கள் தோழர்கள் இளமாறன் , மாரிமுத்து ,மதிக்கண்ணன் , முத்துச்சாமி ,கருப்பசாமி , பொன்ராஜ் , சமுத்திரம் , கலை அரசன் என அனைவரும் பங்கேற்றனர் .மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் அனவரதம் , முருகன் , ராதாகிருஷ்ணன் , தங்கதுரை , ராஜாராம் மனோகரன் , சண்முகவேலு ,வெங்கடப் பன் ,ஜெயக்குமார் , கணேசமூர்த்தி ,சந்திரசேகரன் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் ராமச்சந்திரன் , அதன் மாநில சங்க நிர்வாகி வேலுச்சாமி தலைமையில் பெரும் அளவில் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர் .நமது BSNLEU ஊழியர்களுடன் SNEA மற்றும் AlBSNLEA அதிகாரிகள் பெரும் அளவில் பங்கேற்றனர் .பேரணி முடிவில் கலெக்டர் உயர்திரு சிவஞானம் IAS அவர்களை ஒரு நீண்ட நேரகாத்திருப்புக்கு பின் மாலை 6.30 மணி அளவில் மாவட்ட செயலர் ரவீந்திரன் SNEA மாவட்ட செயலர் செந்தில்குமார் மற்றும் AIBSNLEA மாவட்ட தலைவர் நாராயணனுடன் சென்று மெமோரண்டதை சமர்பித்தார் . ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர்கள் சிவஞானம் மற்றும் ஜெயப்பாண்டியன் மட்டும் பங்கேற்றனர் .எழுச்சிமிகு பேரணியில் பங்கேற்ற அனைத்து ஊழியர்கள் ,அதிகாரிகள், ஒப்பந்த மற்றும் ஓய்வூதியர்களுக்கு நெஞ்சு நிறை நன்றி
.
No comments:
Post a Comment