Thursday, March 16, 2017

4 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

11/03/2017 அன்று மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் மாவட்ட செயற்குழு சிறப்பாகவும் எழுச்சியுடன்  நடைபெற்றது .சிவகாசியில் நடைபெற்ற இச் செயற்குழு கூட்டத்திற்கு இருக்க இடமும் ,மதிய விருந்தையும் சிறப்பாக செய்த மாவட்ட சங்க நிர்வாகி தோழர் முனியாண்டி அவர்களுக்கு மாவட்ட சங்கம் தனது  நெஞ்சு நிறை நன்றியை தெரிவித்து கொள்கிறது .வர உள்ள மாறுதல்கள் ,லோக்கல் கவுன்சில் அமைப்பதில் உள்ள கால தாமதம் ,Drawal  பகுதியில் தேங்கி உள்ள தொடர்ந்து காலதாமதம் ஆகும் பிரச்சனைகள் ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் ,அமைப்பு நிலை விரிவாக விவாதிக்க பட்டன .ஒரு போராட்ட களத்தை உருவாக்கி பிரச்சனைகள் தீர்விற்கு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது .அதே போல் FORUM எடுத்த முடிவை அமல்படுத்துதல் விஷயமாக உள்ள தேக்க நிலையை அகற்றுவது விஷயமாக விரிவாக பேசப்பட்டு உள்ளது .மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் நன்றி கூறி முறையாக செயற்குழுவை முடித்துவைத்தார் .மாநில  மாநாட்டு நிதியாக ரூபாய் 8800 வந்துள்ளது .சிவகாசி SDOP, ராஜபாளையம் மற்றும் சாத்தூர் கிளைகள் தங்கள் பங்களிப்பை விரைந்து முடிக்க வேண்டும் .
Image may contain: 5 people, people sitting
 
Image may contain: 1 person, sitting
 Image may contain: 4 people, people sitting

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...