
அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 3 லட்சம் என்று நமது மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோது ஒரு மிக பெரிய தயக்கம் ஏற்பட்டது .மாவட்ட செயற்குழுவில் எடுத்த முடிவை நமது ஊழியர்களிடம் சென்ற போது ஊழியர்கள் வாரி வழங்கினர் .16,000 ரூபாயில் ஆரம்பித்து குறைந்த பட்சமாக 200 ரூபாய் வரை கிட்டத்தட்ட 99% நமது சங்க தோழர்கள் வழங்கியதின் விளைவு இன்று நமது தமிழ் மாநில சங்கம் நிர்ணயித்த இலக்கை (ரூபாய் 3,00,000)எட்டி தமிழ் மாநிலத்திலேயே இலக்கை எட்டிய முதல் மாவட்டமாக்கிய நமது விருதுநகர் தோழர்களுக்கும்,அதற்க்கு பணி புரிந்த கிளை செயலர்களுக்கும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும் நமது முத்தான பாராட்டுக்கள் .நமது மாவட்டத்தில் ஊழியர்களின் உணர்வோடு கலந்தது நமது சங்கம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து இருக்கிறோம் .
No comments:
Post a Comment