Thursday, April 28, 2016

எழுச்சிமிகு தேர்தல் சிறப்பு கூட்டம்

           விருதுநகர் மாவட்ட சங்கம் சார்பாக 125 வது அம்பேத்கர் பிறந்தநாள் விழா, தோழர் சிவபெருமான் மற்றும் தோழியர் கீதா அவர்களின் பணி  ஓய்வு பாராட்டு விழா மற்றும் எழுச்சிமிகு தேர்தல் சிறப்பு கூட்டம் 27/04/2016 அன்று சிவகாசியில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில் தேசிய கொடியை தோழியர் கீதா அவர்களும் நமது BSNLEU சங்க கொடியை தோழர் சிவபெருமானும், ஒப்பந்த ஊழியர் சங்க கொடியை அதன் கிளை செயலர் தோழர் ராமர் அவர்களும் விண்ணதிரும கோஷங்களுடன் ஏற்றினர்.

          மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி அஞ்சலி தீர்மானம் வாசிக்க, மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்க உரை நிகழ்த்தினார்.


          சிறப்புரையாக நமது  மாநில தலைவரும் ,அனைத்திந்திய உதவி செயலருமான தோழர் செல்லப்பா சிறப்புரை நிகழ்த்தினார். கடந்த காலங்களில் NFTE சங்கம் BSNL ஊழியர்களுக்கு செய்த துரோகங்களையும், நமது சங்கம் தொடர்ந்து போராட்டம்   நடத்தியதின் விளைவாக இன்று வரை 1% பங்குகளை கூட விற்கமுடியாமல் 100% பொது துறையாக BSNL திகழ்கிறது என்பதையும், VRS மற்றும்  CRS திட்டங்களை  முறியடித்த சாதனையும், சென்ற  ஊதிய மாற்றத்தின் போது 30% ஊதிய உயர்வுக்கு நாம் 2 நாட்கள்  போராடிய போது, நமது போராட்டத்தை முறியடிக்க நிர்வாகத்தோடு கை கோர்த்து கொடுப்பதை கொடு நங்கள் வாங்கி கொள்கிறோம் என்று பிச்சைக்காரர்கள் ஆன அவலத்தையும், புன்னகையுடன் சேவை என்ற இயக்கத்தில் தங்களுடைய பங்களிப்பை செய்யாது அலட்சியப்படுத்திய செயலையும்,  சமீபத்திய  PLI உடன்பாட்டில் 2 இலக்க போனுசை ஒத்து கொண்ட கேவலத்தையும் சுட்டி காட்டினார்.


          நமது சங்கத்தோடு இணைந்து SNATTA, BSNLMS இணைந்து செயல்படுவதையும், பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை போன்ற இடங்களில் சேவா மாவட்ட அமைப்புகள்  நம்முடன்  இணைந்து   செயல்படுவதை வரவேற்று பேசினார். இந்த நிகழ்வில் விருதுநகர் மாவட்ட சேவா சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் V.பரமேஸ்வரன், முன்னாள் RJCM உறுப்பினர் தோழர் குருசாமி, தோழர் கேசவன் ஆகியோர் பங்கேற்றனர்.


          மாவட்டம் முழுவதும் பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதன் பின் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் தோழர்கள் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் கீதா அவர்கள் மாவட்ட சங்கத்தால் கெளரவிக்கப்பட்டனர்.  இக் கூட்டத்திற்கான மண்டப செலவு மற்றும் காலை மற்றும் மதிய உணவு செலவை தோழர் சிவபெருமான் ஏற்று கொண்டதை அரங்கமே ஒட்டு  மொத்த கரவொலி எழுப்பி அவரை பாராட்டியது. நமது சங்கத்தின் மீது கொண்ட அளவறிய பற்றுதல் கொண்டு அளப்பரிய உதவி செய்த சிவபெருமான் - கீதா தம்பதியரை மாவட்ட சங்கம் தன நெஞ்சார வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. அவர்களது பணி நிறைவு காலம் சிறக்க ஒட்டு மொத்த மாவட்ட சங்கம் தன் இதயபூர்வ வாழ்த்துகளை மீண்டும் மீண்டும் தெரிவித்து கொள்கிறது.


          தோழர் சிவபெருமான் அனைத்திந்திய ,மாநில மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு தலா 1000/ ரூபாய் வீதம் நன்கொடையை நமது அனைத்திந்திய துணை பொது செயலர் தோழர் செல்லப்பாவிடம் வழங்கினார். நிகழ்வில் நமது முன்னாள் உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் அவர்கள் தனது JTO பதவி உயர்வை முன்னிட்டு அனைத்திந்திய, மாநில மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு தலா 1000/ ரூபாய் வீதம் நன்கொடையை நமது அனைத்திந்திய துணை பொது செயலர் தோழர் செல்லப்பாவிடம் வழங்கினார். அதே போல் நமது மாவட்ட அமைப்பு செயலர் தோழர் சிவஞானம்  தனது பணி நிறைவை ஒட்டி அனைத்திந்திய, மாநில மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு தலா 500/- ரூபாய் வீதம் நன்கொடையை வழங்கினார். அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றிகள்.




No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...