ஒரு நுற்றாண்டு காலம் சமூகத்தை ஆதர்ஷிக்க ஒருவரால் இயலுமா, இயலும் என்பதை இந்த உலகிற்கு தன் வாழ்கையின் மூலம் நிறுவி சென்றுள்ளார் ஒருவர். சுதந்திர போராட்ட தியாகி, இளம் கம்யூனிஸ்ட்டாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி இறுதிவரை அப்படியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய தோழர் ஐ.மாயாண்டி பாரதி மதுரையில் நேற்று (24-02-2015) காலமானார். அவருக்கு வயது 98. தனது 15வது வயதில் இருந்து விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடர்ந்து மதுரை, வேலூர், சென்னை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி போன்ற சிறைகளிலேயே தனது இளமைக்காலத்தை கழித்துள்ளார். ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என்பதாகவே அவரது வாழக்கை இருந்தது என்பதை அவர் பலமுறை சொல்லியிருக்கிறார். இவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதை பெருமையாக கருதுவோம். தன் மரணம் வரை மதுரையில் தொடர்ந்து கூட்டங்களில் பேசி தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இரண்டாம் சுதந்திர போரின் அவசியம் இந்த நாட்டில் வந்து விட்டது என்பதை அவர் உரக்க அறிவித்து விட்டுத்தான் விடைபெற்றுள்ளார்.
(புகைப்படம் : முத்துக்கிருஷ்ணன்)
No comments:
Post a Comment