இன்சூரன்ஸ் அவசச் சட்டம் தேச நலனுக்கு உதவுமா? என்ற தலைப்பில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் “மக்கள் மன்றம்” ஒன்றைக் கூட்டியிருந்தது. நேற்று (24/02/2015) நடைபெற்ற இந்த மக்கள் மன்றத்தில் வணிகர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் எனப் பலதரப்பினரும் பங்கேற்றனர்.
இந்த மக்கள் மன்றத்தில் இன்சூரன்ஸ் “அவசரச் சட்டம் தேச நலனுக்கு எதிரானதே” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுத்துறையினைச் சீரழிக்கும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் எதுவாயினும் அது தேச நலனுக்கு விரோதமானதே என்ற கருத்தினை வலியுறுத்தி BSNLEU விருதுநகர் மாவட்டத் துணைத்தலைவர் தோழர் A.கண்ணன் விவாதத்தில் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment