நர்மதை நதியின் நீரை கோகோ கோலா கம்பெனிக்கு அளிக்க கூடாது, அக்கம்பெனியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குஜராத் சௌராஷ்டிரா மற்றும் காஞ்ச் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பழங்குடி அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக சானந்த் நகரில் பத்திரிகையாளர்களிடம் இப்பகுதி விவசாயிகளும் பழங்குடியினரும் கூறியதாவது:-வட குஜராத், சௌராஷ்டிரா மற்றும் காஞ்ச் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பழங்குடியினரும் நர்மதை நதியின் நீரை விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நர்மதையின் நீரை சானந்த்தில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ கோலா குளிர்பானக் கம்பெனிக்கு அளிக்க பாஜகஅரசு முடிவு செய்துள்ளது. நாளொன் றுக்கு 30 லட்சம் லிட்டர் நீரை உறிஞ்சிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தொழிற்சாலைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நோக்கம் கொண்ட கம்பெனிகளுக்கும் நீரை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும். மிக அதிகமான சக்தி கொண்ட உறிஞ்சும் எந்திரங்களைக் கொண்டு நதியின் நீர் உறிஞ்சப்படும். இதனால் நதியின் நீர் மட்டுமின்றி நிலத்தடி நீரின் அளவும் குறையத் தொடங்கும். விவசாயத்திற்கு நீரின்றி போகும் அபாயம் உள்ளது.விலை மதிப்பற்ற இயற்கை வளமான நீரை வியாபார நோக்கத்திற்காக எடுத்துக் கொள்ள அனுமதி அளித்திருப்பது மோடி அரசுதவறான திசையில் போவதை உறுதிப் படுத்துகிறது, இயற்கை வளங்களை கார்ப்ப ரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பது அபாயகரமான போக்காகும். உடனடியாக கோகோ கோலா உட்பட அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் நீரை எடுத்துக் கொள்ளும் அனு மதியை ரத்து செய்ய வேண்டும், கோகோ கோலா கம்பெனியை இடத்தை விட்டு காலி செய்ய அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகளும் பழங் குடியினரும் கூறியுள்ளனர்.
நன்றி :- தீக்கதிர்
No comments:
Post a Comment