கூட்டு போராட்ட குழுவின் அறைகூவலான தர்ணா போராட்டம் இன்று (23-09-2014) விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட JAC அமைப்பின் தலைவரும், NFTE சங்கத்தின் மாவட்ட செயலருமான தோழர் R.சக்கணன் தர்ணா போராட்டத்திற்கு தலைமை வகித்தார். BSNLEU சங்க மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசும்போது தற்போதைய மத்திய அரசு பொது துறைகளை சீரழிக்கும் போக்கை கையாள்வதையும், நமது BSNL நிறுவனத்தை பல்வேறு கூறுகளாக சிதைத்து தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு நமது கட்டமைப்பை தாரை வார்க்கும் முயற்சிகளுக்கு எதிராக ஒரு நீண்ட நெடிய போராட்டம் நடத்த வேண்டிய சுழலை எடுத்துரைத்தார். அதன் பின் சிறப்புரையாற்றிய தோழர் தேனி வசந்தன், CITU மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ராமசாமி ஆகியோர் இன்றைய அரசின் கொள்கைகள் பற்றி விரிவாக பேசினர். நமது போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தர்ணா போராட்டத்தை விளக்கி தோழர்கள் சமுத்திரகனி, சின்னமுனியாண்டி, கண்ணன், ஜெயக்குமார், அஷ்ரப் தீன், ராஜு, மதிவாணன், பெருமாள்சாமி ஆகியோர் பேசினர். தோழர் M.முத்துசாமி நன்றியுரை நவில தர்ணா போராட்டம் சிறப்பாக நிறைவு பெற்றது.
மாவட்டம் முழுவதும் இருந்து 15 பெண் ஊழியர்கள் உட்பட கிட்டத்தட்ட 185 தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தொலை தொடர்பு அலுவலகம் ஊழியர்கள் பணியில் யாரும் இன்றி முற்றிலும் வெறிச்சோடியது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

No comments:
Post a Comment