இன்று( 19-09-2013)மாவட்ட சங்கம் நமது மாவட்ட பொதுமேலாளர் அவர்களை சந்தித்து பேட்டி கண்டது .கீழ் கண்ட விசயங்கள் விவாதிக்கப்பட்டன .
1.அனாமலி விசயமாக மாநில நிர்வாகம் கேட்ட விபரங்களை மாவட்ட நிர்வாகம் இதுவரை அனுப்பாமல் உள்ளதை சுட்டி காட்டி உள்ளோம் .
2.செக்யூரிட்டி பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் வழங்க படாததை சுட்டி காட்டும் போது நிதி ஒதுக்கீடு வராததால் இந்த நிலைமை என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது .நாம் இதை மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் .
3.தவறுதல் ஆன அடையாள அட்டை வழங்குவதில் உள்ள தாமதத்தை நிர்வாகத்திடம் கூறியுள்ளோம் .
4.தேவையின் அடிப்படையில் சில பகுதிகளில் டெலிகாம் மெக்கானிக் நியமனம் செய்யபட வேண்டும் என கோரி உள்ளோம் .
5ஸ்ரீவில்லிபுத்தூர் குருப்ஸ் பகுதியில் நடுநிலையான போக்கு அமலாக வேண்டும் எனவும்,தொழில் அமைதி பராமரிக்கபட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம் .
6. ரோடு அகலபடுத்தும் போது நெடுஞ்சாலை துறையால் நமது கேபிள்கள் சேதமாவது தொடர்வதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம் .
6. ரோடு அகலபடுத்தும் போது நெடுஞ்சாலை துறையால் நமது கேபிள்கள் சேதமாவது தொடர்வதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம் .
இன்றைய பேட்டியில் மாவட்ட செயலருடன் , தோழர் ஜெயக்குமார்(அருப்புகோட்டை)மற்றும் சிங்காரவேல் (விருதுநகர் )கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment