ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சனைக்கான இன்று நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டையில் காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கக் கொடியை ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் செயலர் தோழர் செந்தில் குமார் ஏற்றி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் கிளைத்தலைவர் தோழர் உமையன் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். BSNLEU அருப்புக்கோட்டை கிளையின் தலைவர் தோழர் U.B.உதயகுமார் BSNLEUவின் மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் A.கண்ணன், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் முனியசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தோழர்கள் எழுப்பிய கோரிக்கை முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment