14th பிஎஸ்என்எல் நிறுவன தினம்
நமது நிறுவனம் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் முடிவடையும் சூழ்நிலையில், இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் நமது நிறுவனத்தை பலவீனப்டுத்தும் சூழலில் நமது BSNLEU சங்கம் தொடர்ந்து அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி ஒரு சமரசமற்ற போராட்ட பாதையில் சென்றதால் நம் நிறுவனத்திற்கு வரவேண்டிய BWA spectrum தொகை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன .ஒரு கடினமான நிதி நெருக்கடி சூழலில் இத் தொகை வருவது நமது நிறுவனம் மேலும் பலவீனபடுவதை தடுக்கும் . நல்ல சம்பளம் ,நல்ல பதவி உயர்வு ஆகியவற்றை தந்த இன் நிறுவனத்தை மேம்படுத்த நம் பணி கலாச்சாரத்தை மாற்றி,சேவையை மேம்படுத்தி நமது நிறுவனத்தை லாபகரமாக மாற்றிட சபதமேற்போம் ! நமது நிறுவனம் உதயமான நன் நாளில் .
No comments:
Post a Comment