Monday, September 30, 2013

கார்ட்டூன்,


கண்ணில் படும்படியான கோரிக்கை!

                                                                                                           நன்றி :-தினமணி 

14th பிஎஸ்என்எல் நிறுவன தினம்

14th  பிஎஸ்என்எல் நிறுவன தினம் 
                                         
நமது நிறுவனம் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் முடிவடையும் சூழ்நிலையில், இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் நமது நிறுவனத்தை பலவீனப்டுத்தும் சூழலில் நமது BSNLEU சங்கம் தொடர்ந்து அனைவரையும்  ஒற்றுமைப்படுத்தி  ஒரு சமரசமற்ற போராட்ட பாதையில்   சென்றதால்       நம் நிறுவனத்திற்கு வரவேண்டிய BWA spectrum தொகை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன .ஒரு கடினமான நிதி நெருக்கடி சூழலில்   இத் தொகை வருவது நமது நிறுவனம் மேலும் பலவீனபடுவதை தடுக்கும் . நல்ல சம்பளம் ,நல்ல பதவி உயர்வு   ஆகியவற்றை தந்த இன் நிறுவனத்தை மேம்படுத்த நம் பணி கலாச்சாரத்தை மாற்றி,சேவையை மேம்படுத்தி  நமது நிறுவனத்தை லாபகரமாக மாற்றிட சபதமேற்போம் ! நமது நிறுவனம்   உதயமான   நன் நாளில் .  

I.D.A. INCREASE

 I.D.A. INCREASE W.E.F. 01.10.2013, NET INCREASE 6.6. MAKING TOTAL 85.5%

BSNL Launches ‘BSNL Formation Day’ and Festival Bonanza, 10% Extra 3G Data, Full Talk Time and More

செய்தி படிக்க:-CLICK HERE 

Thursday, September 26, 2013

சொசைட்டி சிறப்பு RGB கூட்டம் - ஜனநாயக படுகொலை

செய்தி படிக்க:-CLICK HERE

தேசிய கவுன்சில்

கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தேசியகவுன்சில் உறுப்பினர் நியமனம் விசயமாக நமது மத்தியசங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.தோழர்கள் சுப்புராமன், ரவீந்திரன்,சுரேஷ்குமார் மற்றும் கொஹ்லி அவர்களை தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளது நமது சங்கம்.
நமது சங்க கடிதம் படிக்க:CLICK HERE 

கார்ட்டூன்


Tuesday, September 24, 2013

BSNL, MTNL to sign pact for pan-India mobile services

செய்தி படிக்க :- சொடுக்கவும்

TNTCWU மாநிலமாநாட்டு வரவேற்புகுழு அறிவிப்பு


வேலை நிறுத்தம் 25-10-2013க்கு தள்ளி வைக்கப்பட்டது.

          17-09-2013ல் நடைபெற்ற கூட்டத்தில் சில கோரிக்கைகள் மீது நிர்வாகம் கொடுத்துள்ள உத்தரவாதங்களின் அடிப்படையிலும், 04-10-2013ல் நடைபெற உள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்படலாம் என்ற நம்பிக்கையிலும் இன்று நடைபெற்ற UNITED FORUM கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வேலை நிறுத்தம் 25-10-2013க்கு தள்ளி வைக்கப்பட்டது.

Monday, September 23, 2013

மக்கள் பணியே மகேசன் பணி

முதுகுளத்தூர் அருகே குடிசையில் வாழும் ஊராட்சி தலைவர்: 100நாள் வேலையை நம்பி குடும்பத்தினர் :- செய்தி படிக்கCLICK HERE 

எந்த அரசும் ஆதார் அட்டை கட்டாயம் என வலியுறுத்த கூடாது!

செய்தி படிக்க :-CLICK HERE

GPF நிதி ஓதுக்கீடு

GPFக்கான  நிதி  ஒதுக்கீடு       24-09-2013 அன்று கிடைத்துள்ளது.

பரிசீலனை கூட்டம்

UNITED FORUM சார்பாக போராட்ட தயாரிப்புக்கான பரிசீலனை கூட்டம் 24-09-2013 அன்று BSNL MS அலுவலகத்தில் மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது

Saturday, September 21, 2013

சிரிக்க ! சிந்திக்க


கார்ட்டூன்,

                                                                                                               நன்றி :-நாணய விகடன் 

25-09-2013 ஆர்ப்பாட்டங்கள்/தர்ணா/ சத்தியாகிரகம்

06-08-2013 அன்று நடைபெற்ற தேசிய கருத்தரங்கின்  முடிவின்படி   10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  25-09-2013 அன்று சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டங்கள்/தர்ணா/ சத்தியாகிரகம் ஆகியவற்றை  மாநில தலைநகரங்களில் நடத்த CITU ,AITUC .INTUC ,BMS ,HMS ஆகிய  மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விட்டுள்ளன .
கோரிக்கைகள் :-
1.விலைவாசி உயர்வை கட்டுபடுத்து !
2.பொது துறை பங்குகளை விற்காதே !
3.ஒப்பந்த ஊழியருக்கு ரூபாய் 10,000/ குறைந்த பட்ச ஊதியமாக வழங்கிடு !
4.தொழிலாளர்  நல சட்டங்களை உறுதியாக அமல்படுத்து !
5.பென்சனை அனைவர்க்கும் உத்திரவாதபடுத்து !
6. போனஸ் க்காண   உச்சவரம்பை நீக்கிடு !

Friday, September 20, 2013

BSNL may not get sole responsibility as govt's free mobile, tablets distributor

செய்தி படிக்க :-CLICK HERE

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை பட்டியல்

மதுரை மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை பட்டியல் 


1. தினேஷ் நர்சிங் ஹோம்                             (0452-2641834)                   1-09-13 முதல் 31-08-14

2. அரவிந்த் கண் மருத்துவமனை                 ( 2530984)                            1-09-13 முதல் 31-08-14

3. மதுரை கிட்னி சென்டர்                              (2584566,2584397)               1-09-13 முதல் 31-08-14

4. VN NEURO கேர்                                            ( 2629629,2603000)               1-09-13 முதல் 31-08-14

5. கிறிஸ்டியன் மிசன் மருத்துவமனை       (2326294)                               1-09-13 முதல் 31-08-14

6. செண்பகம் மருத்துவமனை                  (2524581,2524582)                 1-09-13 முதல் 31-08-14

7. சரவணா மருத்துவமனை                      (2535240,2536867)                  1-12-12 முதல் 30-11-13

8. ஆர்தர் ஆசிர்வாதம் மருத்துவமனை   (2535266)                              1-12-12 முதல் 30-11-13

9. ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை (2340832)                          18-12-12 முதல் 17-12-13

10. தேவகி கேன்சர் இன்ஸ்டிடூட்          (2288831,2228832)                18-12-12 முதல் 17-12-13

11.
கருணை மல்டி ஸ்பெசாளிட்டி மருத்துவமனை (2530127,2530470)              18-12-12 முதல் 17-12-13

12. வடமலயான் மருத்துவமனை                  (2545400,2532535)            1-12-12 முதல் 30-11-13

13. அகர்வால் கண் மருத்துவமனை             (2301333)                         1-05-13 முதல் 30-04-14

14. ராகவேந்தர் மருத்துவமனை                    (2323651,2323652)            01-01-13 முதல் 31-12-13

15. அபோல்லோ மருத்துவமனை                 (2580893)                          01-10-12 முதல் 30-09-13

16. R R மருத்துவமனை                                       (2533932)                      26-07-13 முதல் 25-07-14

17. விக்ரம் மருத்துவமனை                  (9442647901,9442152901)          29-08-13 முதல் 28-08-14

Thursday, September 19, 2013

பேட்டி

இன்று( 19-09-2013)மாவட்ட சங்கம் நமது மாவட்ட பொதுமேலாளர் அவர்களை சந்தித்து பேட்டி கண்டது .கீழ் கண்ட விசயங்கள் விவாதிக்கப்பட்டன .
1.அனாமலி விசயமாக மாநில நிர்வாகம் கேட்ட விபரங்களை மாவட்ட நிர்வாகம் இதுவரை அனுப்பாமல் உள்ளதை சுட்டி காட்டி உள்ளோம் .
2.செக்யூரிட்டி பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் வழங்க படாததை சுட்டி காட்டும் போது  நிதி ஒதுக்கீடு வராததால் இந்த நிலைமை என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது .நாம்   இதை மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு   செல்வோம் .
3.தவறுதல் ஆன அடையாள அட்டை வழங்குவதில் உள்ள தாமதத்தை நிர்வாகத்திடம் கூறியுள்ளோம் .
4.தேவையின் அடிப்படையில் சில பகுதிகளில் டெலிகாம் மெக்கானிக் நியமனம் செய்யபட வேண்டும் என கோரி உள்ளோம் .
5ஸ்ரீவில்லிபுத்தூர் குருப்ஸ் பகுதியில்  நடுநிலையான  போக்கு அமலாக  வேண்டும் எனவும்,தொழில் அமைதி பராமரிக்கபட வேண்டும் எனவும்  வலியுறுத்தி உள்ளோம் .
6. ரோடு அகலபடுத்தும் போது நெடுஞ்சாலை துறையால் நமது கேபிள்கள் சேதமாவது  தொடர்வதை தடுத்து நிறுத்த  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம் .
இன்றைய பேட்டியில் மாவட்ட செயலருடன் , தோழர் ஜெயக்குமார்(அருப்புகோட்டை)மற்றும் சிங்காரவேல் (விருதுநகர் )கலந்து கொண்டனர் .

MTNL union agrees to Govt’s pension funding plan

செய்தி பார்க்க:-CLICK HERE

Tuesday, September 17, 2013

மனித உரிமை விருதுக்கு மலாலா, ஸ்னோடென் பெயர்கள் பரிந்துரை

சபாஷ் 


ஆண்டுதோறும் மனித உரிமைக்காகப் பாடுபடுவோர்களில் சிறந்தவரைத் தேர்வு செய்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் பரிசளிப்பது வழக்கம். அந்த நாடுகளின் உயரிய விருதாக இது கருதப்படுகின்றது.இந்த விருதினைப் பெற்றவர்களில் பர்மாவைச் சேர்ந்த ஆங் சங் ஸூ கி, தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அடங்குவர்.இந்த வருடத்திற்கான மனித உரிமை விருதினைப் பெறத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 7 பேர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஐரோப்பிய பாராளுமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்தத் தேர்வில் இடம் பெற்றவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசஃபாய், அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடென்னும் அடங்குவர்.16 வயதான மலாலா பள்ளிக்குச் செல்லும்போது தாலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிர்பிழைத்தவர். பெண்கள் கல்விக்காக குரல் கொடுக்கும் இவர் மூன்று உள்ளூர் தேர்தல் குழுவினரால் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்க அரசு மற்ற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் உலகிற்கு தெரிவித்தார்.பசுமை சூழல் அமைப்பு ஒன்றினால் இவர் இந்த விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் இவர்கள் ஏழு பேரில் இறுதியாகத் தேர்வு செய்யப்படுவோருக்கு 50 ஆயிரம் யூரோக்கள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
                                                            நன்றி :வெப்துனியா 

செப்-19 தியாகிகள் தினம்


தபால் தந்தி, ரயில்வே, பாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் இணைந்து 1968, SEP 19 அன்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தம்தான் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.வரலாற்றுச் சிறப்புமிக்க இவ் வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள்: 


*தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் அளித்திட வேண்டும்.

* கிராக்கிப்படியை சம்பளத்துடன் இணைத்திட வேண்டும்.

*DA FORMULA மாற்றி அமைக்க ப்பட வேண்டும்.

இதை அறிவித்து வேலை நிறுத்தம் துவங்குவதற்கு முன்னமேயே தலைவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு துவக்கி விட்டது. டெல்லியில் உள்ள அனைத்து P & T நிர்வாக பகுதிகளில் 18 ம தேதி காலை 11 மணிக்கே வேலை நிறுத்தம் துவங்கி விட்டது. டெல்லியில் மட்டும் 1650 P & T ஊழியர்களும் 350 மற்ற பிரிவு ஊழியர்களும் கைது ஆனார்கள். P & T தோழர்கள் 4000 பேர் உள்ளிட்ட 10000 பேர் கைது செய்யப்பட்டனர். 
வேலை நிறுத்தத்தில் 280000 பேர் கலந்து கொண்டனர் . 140000 ஊழியர்கள். கைதாகினர். 
8700 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதில் P & T தோழர்கள் 3756 பேர். 44000 தற்காலிக ஊழியர்களை Termination செய்ய நோட்டிஸ் கொடுக்கப்பட்டது. எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இது போன்ற கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நடைபெற்றதில்லை.
பிகானிர், பதான்கோட், பொங்கைகான் ஆகியவிடங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 9 ரயில்வே தொழிலாளிகள் பலியானார்கள். பல இடங்களில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. கூட்டு நடவடிக்கைக் குழு அரசிடம் பழிவாங்கலைக் கைவிடக்கோரியும் அசையாததால் விதிப் படி வேலை போராட்டத்தை துவங்கியது. 
இந்த எழுச்சிமிக்க போராட்டம் தொழிற்சங்கங்களை எல்லாம் ஒன்று படுத்த உதவியது. தொழிலாளர் சக்தியை அரசும் உணரத் துவங்கியது.எதிர்காலப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய செப் 19 போராட்ட தியாகிகளுக்கு நமது வீர வணக்கத்தை உரித்தாக்குவோம்.




சொசைட்டி நிலம் சொசைட்டி உறுப்பினர்களுக்கு மட்டுமே

செய்தி படிக்க :-CLICK HERE

வங்கி கடன்

BSNL ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் (loans) வழங்குவதற்கு நமது நிறுவனத்திற்கும் ஸ்டேட்பேங்கிற்கும்  புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 20-08-2014 வரை இது அமலில் இருக்கும் . செய்தி பார்க:-CLICK HERE

Sunday, September 15, 2013

ஓணம் நலவாழ்த்துக்கள்


கார்ட்டூன்,

                                                                                                           நன்றி :-தினபூமி 

ராஜபாளையம் கிளை 10 வது மாநாடு

          ராஜபாளையம் கிளை சங்கத்தின் 10வது  மாநாடு 15-09-2013 அன்று  தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர் P.தர்மராஜ்  தலைமையில் நடைபெற்றது. மூத்த தோழர்Cசெல்வராஜ் TTA  அவர்கள் நமது சங்க கொடியை ஏற்றி வைக்க தோழர் T.முத்துராமலிங்கம், TTA அஞ்சலி தீர்மானம் வாசிக்க, கிளைச்செயலர் தோழர் T.அனவரதம் வரவேற்புரை நல்க கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் தொடக்கி  வைத்து  உரையாற்றினார்.
          தோழர்கள் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர், தோழர்  M.முத்துசாமி, மாவட்ட உதவி செயலர்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
          தோழர் M முருகையா   மாநில உதவி செயலர்  சிறப்புரை நிகழ்த்தினார்.தோழர்கள் T.அனவரதம், T.முத்துராமலிங்கம், TTA, P.சிவஞானம்   ஆகியோர் முறையே தலைவர், செயலர் மற்றும் பொருளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டம்  முழுவதும் இருந்து திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
                           <புகைப்பட தொகுப்பு>

Saturday, September 14, 2013

நானே கேள்வி... நானே பதில்!


இந்திய அரசியல் மேல் நம்பிக்கை வைப்பதற்கு ஒரே ஒரு காரணம் சொல்லுங்களேன்...!
திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க் கார்தான் நாட்டின் மிகவும் ஏழையான முதலமைச்சர். இவருடைய வங்கி இருப்பு 6,500 ரூபாய் மட்டுமே. சொந்த வீடு கிடையாது. இவரது மனைவி சைக்கிள் ரிக்ஷாவில்தான் பயணிக்கிறார். மாணிக், தன்னுடைய முதலமைச்சர் சம்பளத்தை அப்படியே கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, அவர்கள் தரும் மாதம் 5,000 ரூபாயில் தான் குடும் பம் நடத்துகிறார். இவரின் நேர்மை, எளிமை காரணமாக, தொடர்ந்து நான்காவது முறையாக திரிபுராவின் முதல்வராகத்  தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர் களும் பாராட்டும் இவரது நேர்மை மீது நம்பிக்கை வையுங்கள்.!
- கல்லிடை ஒய்.கே.சேகர் குஜராத்.நன்றி - ஆனந்த விகடன்(4.9.13)

Friday, September 13, 2013

உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்கள் பிரயோகம்! தேசங்களின் அரஜாகம்! ஒரு வரலாற்றுப் பார்வை!

மெரிக்காவும் அதன் ஜால்ரா அல்லது கூட்டணி நாடுகளும் எப்போதும் ரசாயன் ஆயுதங்களை உற்பத்தி செய்வதிலும் பிர்யோகிப்பதிலும் ஒரு போதும் தயங்கியதில்லை. ஆனால் தனக்கு வேண்டாத நாடுகள் இந்த ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா எப்பவுமே மூக்கால் அழுது கொண்டிருக்கும்.ரசாயன ஆயுதங்கள் பிரயோகம் என்பது கி.மு. 400 ஆம் ஆண்டு முதல் பழமையானது.கிமு 400ஆம் ஆண்டில் ஸ்பார்ட்டன் கிரேக்கப்படை எதிரிகள் மீது கந்தகப் புகையை பிரயோகம் செய்தது. சாவு விவரம் தெரியவில்லை.கிபி.256: தற்போதைய சிரியாவில் குறிப்பிட்ட இந்த பண்டைய ஆண்டில் சசானிய பெர்சிய முடியாட்சி சுரங்கத்தில் பதுங்கியிருந்த ரோமானிய வீரர்கள் மீது விஷ புகையை பிரயோகித்துள்ளனர்.1346:கிரிமியாவில் இத்தாலி வணிக குடியேற்றவாதிகள் மீது பிளேக் நோய் தொற்றிய பிணங்களை கொண்டு போடப்பட்டுள்ளது.1500களில், ஸ்பானிய அராஜக காலனிய காலக்கட்டத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் குடிமக்கள் மீது உயிரியல் போர் தொடுத்து லட்சக்கணக்கானோரை அழித்தது.1763 ஆம் ஆண்டு போன்டியாக் போராளிகள் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் ராணுவ தலைமை ஜெஃப்ரி ஆம்ஹெர்ஸ்ட் அம்மை நோய் ஏற்படுத்தும் ஒரு வித ரசாயனம் தோய்க்கப்பட்ட போர்வைகளை அந்த நாட்டு உண்மையான குடிமக்களுக்கு வழங்க பரிந்துரை செய்தார். ஃபோர்ட் பிட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இந்த கொடூரமான போர்வை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.1789ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவின் பூர்வ குடிகளை விரட்டியடிக்க அம்மை நோயை பிரிட்டிஷார் பரப்பியதாக கூறப்படுவதுண்டு.1845ஆம் ஆண்டு நியூசீலாந்தில் மயோரி போராளிகளை அடக்க நச்சு வாயுவை பிரிட்டன் படைகள் பிரயோகம் செய்துள்ளனர்.1907 ஆம் ஆண்டு ரசாயன ஆயுதங்கள் ஹேக் மாநாட்டில் தடை செய்யப்பட்டபோது அமெரிக்கா அதில் பங்கேற்கவில்லை.1914- 18 - முதலாம் உலகப் போர் துவங்கியது. ஒய்பிரஸ் போரில் ஜெர்மானியப்படை குளோரின் வாய்வை எதிரிகள் மீது பிரயோகம் செய்தது. இதில் 85,000 பேர் மரணமடைந்தனர். சுமார் 12 லட்சம் பேர் இனம் புரியாத நோயிலும், காயத்துடனும் வாழ்ந்தனர்.1919- 21: ரஷ்ய சிவில் யுத்தத்தில் 'புரட்சிகர போல்ஷேவிக் சோஷலிஸ்ட்கள்' போராளிகள் மீது நச்சு வாயுவை பிரயோகித்தனர். ராயல் விமானப்படை போல்ஷேவிக்குகள் மீது இதே போன்ற தாக்குதலை நடத்தினர்.1920: ஸ்பானியர்களின் மொராக்கோவில் பிரென்ச் மற்றும் ஸ்பெயின் படைகள் போராளிகள் மீது மஸ்டர்ட் வாயுவை பிரயோகம் செய்துள்ளனர்.அதேபோல் இதே ஆண்டில் இராக்கின் அராபிய மற்றும் குர்திஷ் விடுதலை போராளிகள் மீது ரசாயன ஆயுதங்களை ஒரு பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ள பிரிட்டன் அறிவுறுத்தியது. 'நாகரிகமற்ற இனக்குழுகள்" மீது நச்சு வாயுவை செலுத்த பிரிட்டன் 'அரசியல் மேதை' வின்ஸ்டன் சர்ச்சில் 'பலமாக' பரிந்துரை செய்தார்.1935: எத்தியோப்பியாவை ஆக்ரமிக்கத் தொடங்கிய இத்தாலி மஸ்டர்ட் வாயுவை செலுத்தியது.1937: சீனாவை ஆக்ரமிக்க ஜப்பான் படைகள் உள் நுழைந்தது.சீனாவை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர ஜப்பான் ரசாயன ஆயுதங்களையும் பிற தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தியது.1941:அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் தலையிட்டது. அதிபர் ரூஸ்வெல்ட் நாங்கள் முதலில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்றார். 1945ஆம் ஆண்டு சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் மீது வதை முகாமில் சைக்ளன் - பி என்ற ரசாயனப்புகையை செலுத்தினான். ஜப்பானிய ராணுவமும் இதனை பயன்படுத்தியது.1947: அமெரிக்கா நோய் நுண்மம் அடங்கிய போர் ஆயுதங்களை வைத்திருந்தது. அதிபர் ட்ரூமன் ஜெனீவா உடன்படிக்கையிலிருந்து விலகினார்.1949: அமெரிக்க நகரங்களில் ராணுவம் உயிரியல் ஆயுதங்களை ரகசியமாக பரிசோதனை செய்தது.1951: அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியாவில் காளான் ஆயுதங்களைக் கொண்டு ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கடுமையாக விரட்டி அடித்தனர்.1952: ஜெர்மானிய கெமிக்கல் ஆயுத ஆய்வாளர் வால்டர் ஷ்ரெய்பர் டெக்சாசில் பணியாற்றி வந்தார். இவர்தான் நாஜி வதைமுகாமின் பிரதான காரணகர்த்தா என்பது தெரிந்தவுடன் அர்ஜென்டீனாவுக்கு தப்பி ஓடினார்.1956:அமெரிக்க ராணுவ மேனுவல் வெளிப்படையாக உயிர்-ரசாயன போர் முறை தடை செய்யப்படவில்லை என்று அறிவித்தது. ஜெரால்ட் ஃபோர்ட் இது குறித்து கொள்கை அளவில் மாற்றம் கொண்டு வர துணையாக இருந்தார். அதாவது அமெரிக்கா ரசாயன் ஆயுதங்களை முதலில் பிரயோகிக்க அதாரிட்டி வழங்கப்பட்டது.1959:முதலில் ரசாயன ஆயுதங்களை பிரயோகிப்பதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவில் தோற்கடிக்கப்பட்டது.1961:அதிபர் கென்னடி நிர்வாகம் ரசாயன ஆயுதங்களுக்கான பட்ஜெட்டை 75 மில்லியன் டாலர்களில் இருந்து 330 மில்லியன் டாலர்களாக அதிகரித்தது.1962: கியூப ஏவுகணை நெருக்கடியின் போது அமெரிக்க விமானங்களில் ரசாயன ஆயுதங்கள் நிரப்பப்பட்டன.1968:அமெரிக்க ராணுவ தலமிப்பீடமான பென்டகன் ஆர்பாட்டக்காரர்கள் மீது ரசாயன பிரயோகம் செய்ய வாய்ப்பிருக்கிறதா என்று கோரியது. மேஜர் ஜெனரல் மெடாரிஸ் அப்போது குடிமக்கள் ஆர்பாட்டம் செய்யும்போது ரசாயன ஆயுதங்களை பிரயோகிப்பது இரண்டு விதத்தில் நன்மை பயக்கும் என்றார். ஒன்று அவர்களை பயமுறுத்துவது மற்றொன்று ரசாயன ஆயுதங்கள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவும் அது உதவும் என்று விசித்திர யோசனை ஒன்றை முன்வைத்தார்.1969: உத்தா ரசாயன ஆயுதங்கள் விபத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலி.1971: வியடாம் போரின்போது வியடாமில் சுமார் 6 லட்சம் பேருக்கு சோறு போட்ட வயல்வெளிகளை ரசாயன ஆயுதம் கொண்டு அழித்து ஒழித்தது அமெரிக்கப் படை.தெற்கு வியட்னாமிய போராளிகள் மீது வெள்ளை பாஸ்பரஸ் கிரனேட்கள் பிரயோக்கப்பட்டன. கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவிற்கு எதிராக உருவான பாரா மிலிட்டரி படைகளிடம் அமெரிக்கா பன்றிக் காய்ச்சல் வைரஸ்களை கொடுத்து கியூபாவில் பரப்ப சதி செய்ததாக செய்தித்தாள் அறிக்கை ஒன்று தெரிவித்தது.1979: ஜிம்பாவே விடுதலைப்போரின்போது கடைசி கட்டத்தில் ருடீசியாவின் வெள்ளை அரசு கறுப்பரின மக்கள் மீது ஆந்த்ராக்ஸ் என்ற கொடிய நோய் கிருமியை பரப்பியது.1984: போபால் விஷ வாயு துன்பம் நிகழ்ந்தது. காரணம் அமெரிக்க ரசாயன் நிறுவனம்.1985: ஈராக்கிற்கு அமெரிக்கா ஏகப்பட்ட ரசாயன ஆயுதங்களை வழங்கியது.இப்படியே இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது வரை கூறிகொண்டே போகலாம்.கடைசியாக சிரியாவில் போராளிக்கு எதிராக ரசாயன ஆயுதங்கள் பிரயோக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.சிரியா போன்ற நாடுகளுக்கு ரசாயன் ஆயுதங்கள் உற்பத்தி செய்ய முடியுமா? உலகின் பணக்கார, ராணுவ பலம் மிக்க நாடுகள் அவ்வப்போது வியாபாரம் செய்த்தன் விளவிதான் இன்று இந்த கொடூரம் கழ்கிறது.இப்படியிருக்கையில், இன்று ஏதோ ரசாயன ஆயுதமா? அய்யய்யோ பயங்கரம்! அழித்து விடுவோம் என்றெல்லாம் அமெரிக்கா சூளுரைப்பது ஏன்? 
                                                                                        நன்றி :-வெப்துனியா 

Thursday, September 12, 2013

தகவல்கள்

பரிவு அடிப்படையில் பணி நியமனம் கோரி ஆகஸ்ட் 2012 வரை நிலுவையில் உள்ளவைகளை "ஹை பவர் கமிட்டி" இறுதி முடிவு செய்து விட்டதாக  பொது மேலாளர் (ESTT ) அவர்கள் நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களிடம் தெரிவித்து உள்ளார் .    
பிஎஸ்என்எல் ஸ்போர்ட்ஸ் போர்டு கூட்டத்தை 2012 இல் இருந்து நடை பெறாமல் உள்ளதை நமது துணை  பொது செயலர் சுட்டி காட்டி உள்ளார் .பொது மேலாளர் (ADMN ) அவர்கள் கூட்டத்தை நடத்த உறுதி அளித்துள்ளார் . 
78.2 % IDA இணைப்பு பென்ஷன்தாரர்களுக்கு வழங்க பட வேண்டும் என வலியுறுத்தி நமது தலைவர் தோழர் V A N .நம்பூதிரி அவர்கள் புதிதாக வந்துள்ள DOT இணை  உறுப்பினர்  Ms. Annie Moraes அவர்களை சந்தித்து உள்ளார் .

பேச்சுவார்த்தை

BSNL நிர்வாகம் UNITED   FORUM சார்பாக கொடுத்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி பேச்சுவார்த்தைக்கு  நமது சங்கத்தை 17 ஆம் தேதி அழைத்து உள்ளது .நிர்வாகத்தின் கடிதம் படிக்க :-CLICK HERE

மகிழ்ச்சியான நாடுகள்; இந்தியாவுக்கு 111வது இடம்

செய்தி படிக்க :- CLICK HERE

Refund approved for BSNL, MTNL to return BWA spectrum

A Group of Ministers (GoM) on revival of BSNL and MTNL today decided to refund the money paid by the state-run players for surrendering Broadband Wireless Access (BWA) spectrum worth more than Rs 11,000 crore.The GoM, headed by Finance Minister P Chidambaram, also took a decision on providing pension to MTNL employees, which is likely to cost about Rs 570 crore a year.“The Group of Ministers took firm decisions, one in relation to pension of MTNL employees, the second in relation to the spectrum that was allocated both to BSNL and MTNL in the 2.5 GHz band and one other small issue,” the Telecom Minister, Kapil Sibal said here.He said the decision will now be taken to the Cabinet for approval.As per BSNL, there is no business case at such a high cost of spectrum. The government had given the spectrum to both companies, which paid auction prices for the airwaves.“I think that having resolved these issues and if the Cabinet approves, I think that both BSNL and MTNL will be on course (to profitability),” Sibal said.MTNL shares surged 19.92 per cent to Rs 15.35 at the close on the BSE today.Both MTNL and BSNL had requested the government to refund the amount they paid in 2010 for BWA spectrum, used to provide 4G data services.According to sources, BSNL has sought Rs 6,724.51 crore for return of BWA spectrum fee while the amount for MTNL was about Rs 5,700 crore.With regard to the pension liability of MTNL staff, which will cost Rs 570 crore annually, the state-run company will pay Rs 170 crore while the rest will be paid by the government.MTNL’s net loss widened to Rs 5,321.12 crore in the financial year 2012-13 from Rs 4,109.78 crore in FY’12.Sources said BSNL’s losses are expected to be around Rs 8,198 crore for the last financial year.High wage costs had been a major reason for these companies running into losses.Overall, salary and pension expenses of MTNL employees form 103 per cent of revenue while for BSNL the same stands at 49 per cent.The members of GoM include Sibal, Commerce and Industry Minister Anand Sharma, Planning Commission Deputy Chairman Montek Singh Ahluwalia, Information and Broadcasting Minister Manish Tewari and Minister of State in the Prime Minister’s Office V Narayanasamy
                                                               courtesy:- BUSINESS LINE

இன்று மாலை கூடுகிறது

          BSNL மற்றும் MTNL ஆகியவற்றில் மறுமலர்ச்சு உண்டாக்குவதற்கான மான்புமிகு நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று மாலை கூடுகிறது.
          என்ன பண்ணக் காத்திருக்காங்களோன்னு நமக்குத்தான் வதக்கு வதக்குன்னு இருக்கு. ஏன்னா இவங்க மறுமலர்ச்சி பற்றித்தான் நமக்கு ஏற்கனவே நிறைய அனுபவம் இருக்கே.

சென்னை செயற்குழு

Tuesday, September 10, 2013

ராஜபாளையம் கிளை 10 வது மாநாடு


தேதி :15-0-2013 ஞாயிற்று கிழமை 
நேரம் : காலை 10 மணி 
இடம் : தொலைபேசி நிலையம், ராஜபாளையம் 

சங்க கொடியேற்றுபவர் : A.ஷன்முககுமார், TTA 
தலைமை : தோழர்  P.சிவஞானம் 
அஞ்சலி : தோழர் த.முத்துராமலிங்கம், TTA 
வரவேற்புரை :-  தோழர் T.அனவரதம், கிளைச்செயலர்

துவக்க உரை : தோழர் S.ரவீந்திரன், மாவட்ட செயலர் 
சிறப்புரை : தோழர் M.முருகையா, மாநில உதவி செயலர் 

வாழ்த்துரை : தோழர் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர் 
                            உயர்திரு  A.தனுஸ்கோடி, கோட்ட பொறியாளர், ராஜை 
                           தோழர்   M.அய்யாசாமி, மாவட்ட செயலர், AIBDPA  
                          தோழர்  M  செல்வராஜூ, மாவட்ட தலைவர், ஒப்பந்த ஊழியர் சங்கம் 
                         தோழர்   R.முனியசாமி ,மாவட்ட செயலர், ஒப்பந்த ஊழியர் சங்கம்   
                         தோழர் M  முத்துசாமி, மாவட்ட உதவி செயலர், BSNLEU 

நன்றியுரை : புதிய செயலர்

DoT to seek Telecom Commission nod on BSNL, MTNL CMD selection

          The Department of Telecom may seek nod of Telecom Commission, the apex decision making body at the department, to revert to the method of selecting chief of state-run MTNL and BSNL through Public Enterprise Services Board instead of through search-cum-selection committee. "Approval of Telecom Commission (TC) is solicited for adoption of the PESB process for appointment of Chairman-cum-Managing Director, MTNL and BSNL," an official source said.While the government has already started the search for CMDs of MTNL and BSNL through PESB, the approval from the TC would ensure a smooth completion of the process. Present MTNL CMD AK Garg and BSNL CMD R K Upadhyay were selected through search-cum-selection committee recommended by panel headed by Advisor to Prime Minister Sam Pitroda for revival of both the PSUs. Both the CMDs were appointed in 2011 for three year period with an option for extension. The process was approved by the TC in July 2010. Under present CMD R K Upadhyay, BSNL has been able arrest its losses that it had been posting since 2009-10. BSNL has also chalked out plan to post profit before taxes by 2018. On the other hand, MTNL also expects to be cash flow positive by finacial year 2014-15 and post profit by FY'2017-18. MTNL reported widening of the net loss to Rs 5,321.12 crore for financial year 2012-13, compared to Rs 4,109.78 crore in FY'12. BSNL losses, as per unaudited results, stood at Rs 8,198 crore for 2012-13, compared Rs 8,851 crore posted in 2011-12. While PESB is done with the phase of application submission on August 27 for BSNL CMD, it has fixed last date of October 17 for MTNL CMD applications.    
நன்றி :- டைம்ஸ் ஆப்  இந்தியா 

Friday, September 6, 2013

அருப்புக்கோட்டையில் ஒப்பந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டம்

          ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சனைக்கான இன்று நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டையில் காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கக் கொடியை ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் செயலர் தோழர் செந்தில் குமார் ஏற்றி வைத்தார்.
          ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் கிளைத்தலைவர்  தோழர் உமையன் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். BSNLEU அருப்புக்கோட்டை கிளையின் தலைவர் தோழர் U.B.உதயகுமார் BSNLEUவின் மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் A.கண்ணன், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் முனியசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தோழர்கள் எழுப்பிய கோரிக்கை முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.







ஒப்பந்தத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

        மத்திய சங்கத்தின் அறைகூவலை ஏற்று ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகத்தின் போக்கைக் கைவிடக்கோரி முதல் கட்டமாக நாடு முழுவதும் இன்று 2013 அக்டோபர் 6 ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

          விருதுநகர் மாவட்டத்தில்
          அருப்புக்கோட்டையில்    BSNLEU   7 TNTCWU 15
          விருதுநகரில்                      BSNLEU 15 TNTCWU 15
          சாத்தூரில்                            BSNLEU 10 TNTCWU   7
          சிவகாசியில்                        BSNLEU 30 TNTCWU 10
          ராஜபாளையத்தில்             BSNLEU 10 TNTCWU   3

          மொத்தம்                              BSNLEU 72 TNTCWU 50

          ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுக்கும் இரண்டு மாவட்டச் சங்கங்களும் தன்னுடைய நன்றியை உரித்ததாக்குகிறது. ஆர்ப்பாட்டத்தில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக இணைய தள பதிவிற்கு அனுப்பி வைக்க கிளைச்சங்க நிர்வாகிகள் ஆவண செய்ய வேண்டும்.

விருதுநகரில் ஒப்பந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டம்

          6-09-2013 அன்று ஒப்பந்த ஊழியர்களின் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று விருதுநகர் GM அலுவலகம் முன்பாக மதியம் ஒரு மணி அளவில் தோழர் SDOP அலுவலக கிளைச் செயலர் தோழர K.சிங்காரவேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன், மற்றும் தோழர்கள் முத்துசாமி, சந்திரசேகரன், கிருஷ்ணகுமார், பாண்டியராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  தோழர் இளமாறன் கோஷங்கள் எழுப்ப ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது .



Thursday, September 5, 2013

கார்ட்டூன்

“அடடா.... மிஸ் பண்ணீட்டீங்களா...
இதுகூட உங்க கூட்டணி அரசின் திட்டம்தானே...?”
நன்றி : தினமணி

நேற்று லிபியா, இன்று சிரியா!

புகைப்படத் தொகுப்பு

Wednesday, September 4, 2013

கார்ட்டூன்

எத்தன எடத்தில நம்ம சமாதானப் புறா செஞ்சு பறக்க விட்டுருக்கோம்!
கரீட்டா செய்யாம இருப்பமா?
சீக்கிரமா ஒட்டு... நேரமாச்சு...

கார்ட்டூன்

அத நினைச்சாத்தான் பயம்ம்ம்ம்ம்மா இருக்கு

கார்ட்டூன்

கார்ட்டூன்


தும்மையும் விட்டாச்சு வாலையும் விட்டாச்சு
பொருளாதார மேதைகள்

கார்ட்டூன்

நன்றி : தினமணி

BSNL Launches New STV, offer 1.2paisa for 2 Seconds Tariff for Local Calls to Any Network

விரிவான செய்திக்கு :-CLICK HERE

தகவல்

          லோக்கல் கவுன்சில் உறுப்பினர் நியமனம் தொடர்பாக FNTO சங்கம் கேரளா உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் தீர்ப்பு நாளை (05-09-2013) வெளிவரும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

          27-09-2013 அன்று நடைபெற உள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு இன்னும் ஓரிரு நாளில் நமது சங்கம் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்க உள்ளது.

          செப்டம்பர் 8 ஆம் தேதியில் இருந்து ஏர்டெல் நிறுவனம் தனது மொபைல் போன் கட்டணங்களை அதிகரிக்க  உள்ளது .

விருதுநகர் SDOP அலுவலக கிளை மாநாடு

          விருதுநகர் SDOP அலுவலக கிளை மாநாடு  04-09-2013 அன்று பழைய தொலைபேசி நிலையவளாகத்தில் தோழர் S.வெங்கடப்பன் தலைமையில் நடைபெற்றது.தோழர் மலைச்சாமி அவர்கள் நமது சங்க கொடியை ஏற்றி வைக்க, தோழர் M.முத்துசாமி அஞ்சலி தீர்மானம் வாசிக்க, கிளை செயலர் தோழர் C.சந்திரசேகரன் வரவேற்புரை நல்க கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் தொடக்கி  வைத்து  உரையாற்றினார்.
          தோழர்கள் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர்,A.கண்ணன், மாவட்ட அமைப்பு செயலர், தோழர் M.S.இளமாறன், GM அலுவலக கிளை செயலர், ஓய்வூதியர் சங்க கிளை செயலர் தோழர் S .முருகேசன், SNEA மாவட்ட செயலர் திரு. G.செல்வராஜ், திரு. த.ராதாகிருஷ்ணன், AIBSNLEA மாநில பொறுப்பாளர், K.R.கிருஷ்ணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
          தோழர் C  பழனிச்சாமி மாநில உதவி செயலர்  சிறப்புரை நிகழ்த்தினார்.தோழர்கள் P.இலட்சுமணன், K.சிங்காரவேல், M.மோகன் ஆகியோர் முறையே தலைவர், செயலர் மற்றும் பொருளர் ஆக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். மாவட்டம்  முழுவதும் இருந்து பெருந்திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, September 3, 2013

பி.எஃப் கணக்கு விவரம் அக்டோபர் 1 முதல் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

          தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இம்மாதம் 6 ஆம் தேதியிலிருந்து அன்றைய நிலவரப்படி சந்தாதாரர்கள் கணக்கில் உள்ள தொகை குறித்த முழு விவரங்களையும் வெளியிட ஆயத்தமாகி வருகிறது என வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் கே.கே.ஜலான் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு : CLICK HERE

20 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி

          என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களில் 4219 பேர் ஒரே நாளில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் உள்ளது. இங்கு சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் உண்ணாவிரதம், ரயில் மறியல் என  மாவட்டம் தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதுதொடர்பாக டெல்லியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோ சர்வ் சொசைட்டியில் சேர்ப்பது; என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வசதி; ஊதிய உயர்வு உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. 
          அதன்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ அடையாள அட்டையும், ஊதிய உயர்வும் உடனடியாக வழங்கப்பட்டது. ஆனால் சொசைட்டியில் சேர்ப்பது மட்டும் இழுபறியில் இருந்தது. இதற்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கே காரணம் என கூறப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இப்பிரச்சனையில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அதன் பிறகு ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் சேர்க்க என்எல்சி முடிவு செய்தது. பின்னர் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் 4,219 ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோ சர்வ் சொசைட்டியில் சேர்க்க என்எல்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
          நேற்று முன்தினம் முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து சொசைட்டி உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்கள் படிப்படியாக என்எல்சியில் நிரந்தர தொழிலாளர்களாக ஆக்கப்படுவர். கடந்த 20 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்றனர். 4219 ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஒரே நாளில் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...