இன்று விருதுநகர் கிளைகளின் இணைந்த பொது குழு கூட்டம் கிளை தலைவர் தோழர் சிங்காரவேலு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . கிளை செயலர்கள் இளமாறன்,மாரிமுத்து ,பாண்டியராஜன் ஆகியோர் ஆய்படு பொருளை விளக்கி பேசினர் .06/02/2017 அன்று டெல்லியில் நடைபெற்ற FORUM முடிவுகள் ,07/02/2017 அன்று சென்னையில் நடைபெற்ற ,விரிவடைந்த மாநில செயற்குழு முடிவுகளை மாவட்ட செயலர் ரவீந்திரன் விளக்கி பேசினார் .GM அலுவலக கிளை தோழியர்கள் தொடர்ந்து மார்க்கெட்டிங் பணிகளில் ஈடுபடுவதை கிளையின் பொது குழு பாராட்டியது .நடந்து முடிந்த அனைத்திந்திய மாநாட்டு நிதி வசூலில் இரண்டு கிளைகளின் பங்களிப்பு பாராட்டப்பட்டது .மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஜெயக்குமார் ,வெங்கடப்பன்,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்று பேசினர் .மாவட்ட அலுவலக கிளை பொருளாளர் மாரியப்பா நன்றி நவின்றார் . கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது .
1.31/03/2017 வரை தினமும் பணி நேரம் போக கூடுதலாக 1 மணி நேரம் மார்க்கெட்டிங் பணிகளில் அனைவரும் ஈடுபடுவது .
2. மார்ச் 9 கலெக்டர் அலுவலகம் நோக்கிய பேரணியில் அனைவரும் பங்கேற்பது .
3.மார்ச் 8 மகளிர் தின சிறப்பு கூட்டம் நடத்துவது .
4.மாநில மாநாட்டு நிதியாக உறுப்பினர் அனைவரும் தலா 100 ரூபாய் நன்கொடை வழங்குவது .
5. கேபிள் பகுதி ஊழியர்கள் skilled wages கேட்டு வரும் 17/02/2017 அன்று 1 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது .மார்ச் 10 அன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துவது .
No comments:
Post a Comment