மாவட்ட சங்கத்தின் செயற்குழு நவம்பர் 6 ஆம் நாள் நடைபெற்றது. செயற்குழுவிற்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் தோழர் ரவீந்நதிரன் நோக்க உரையாற்றினார். செயற்குழுவில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
நமது மாவட்ட மாநாடு அருப்புகோட்டையில் நடைபெறும். தேதி மாநில சங்கத்துடன் பேசி இறுதி செய்யப்படும். மாவட்ட மாநாடு 2 நாட்கள் நடைபெறும். முதல் நாள் பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாகவும், 2ஆம் நாள் பொது அரங்கமாகவும் நடைபெறும். சார்பாளர் கட்டணம் ரூபாய் 50/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மாநாடு நன்கொடை ஆக ஊழியர்களிடம் தலா ரூபாய் 100/- வாங்குவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செயற்குழுவில் நமது மாநில உதவி தலைவர் தோழர் வெங்கட்ராமன் தலைமை பண்பு பற்றி மாவட்டச் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு சிறப்பான வழிகாட்டுதலை வழங்கினார்.
No comments:
Post a Comment