செய்தி படிக்க : Click Here
Saturday, November 30, 2013
IDA எதிர்பார்ப்பு
01-01-2014 முதல் IDA உயர்வு 4.5 % மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி படிக்க : Click Here
அனைத்து தொழிற்சங்க கூட்டம்
பி எஸ் என் எல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அனைத்து தொழிற்சங்க கூட்டம் (30-11-2013) இன்று நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இதில் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்களும் தலைவர் தோழர் நம்பூதிரி அவர்களும் கலந்து கொண்டனர். நிர்வாகம் மொபைல் & தொலைபேசி சேவைகள் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிறுவனத்தின் நடப்பு நிதி நிலையை பற்றி ஒரு செயல் திட்டத்தை வழங்கியது. இத்தகைய கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்படும் என நமது CMD அவர்கள் தெரிவித்து உள்ளார்.
Friday, November 29, 2013
பணி ஓய்வு பாராட்டு
தோழர் மாரிமுத்து தலைமை உரை
மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு மாவட்ட செயலர் உரை
தோழர் அய்யாசாமி வாழ்த்துரை
திரளாக பங்கேற்ற ஊழியர் கூட்டத்தின் ஒரு பகுதி
திரளாக பங்கேற்ற ஊழியர் கூட்டத்தின் மற்றோர் பகுதி
தோழர் இளமாறனின் வரவேற்புரை
தோழர் S .P .முருகேசனின் ஏற்புரை
திரளாக பங்கேற்ற ஊழியர் கூட்டத்தின் மற்றோர் பகுதி
மாவட்ட செயலர் உரை
மாவட்ட செயலர் உரை
தோழர் பெருமாள்சாமி முருகேசனை கௌரவித்தல்
மூத்த கணக்கு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துரை
தோழர் S.P.முருகேசன் STM அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் மாவட்ட பொது மேலாளர் அலுவலக கிளை சங்க பொதுக்குழு கூட்டம் 29-11-2013 அன்று கிளை தலைவர் தோழர் Aமாரிமுத்து தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கிளை செயலர் தோழர்.M.Sஇளமாறன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நல்கினார். தந்தி பிரிவில் பணியாற்றி சிறப்பான சேவை செய்து ,நமது BSNLEU சங்கத்தின் ஒரு விசுவாசமான ஒரு தோழனாக 30-11-2013 அன்று பணி ஓய்வு பெறும் தோழர் முருகேசனை பாராட்டி மாவட்ட செயலர் தோழர் S .ரவீந்திரன் அவர்கள் பேசும் போது இன்றைய கடின சூழ்நிலையில் கூட நமது சங்கம் பல்வேறு சாதனைகளை செய்து வருவதை உதாரணங்களுடன் சுட்டி காட்டினார்.தோழர் முருகேசனை பாராட்டி தோழர்கள் அய்யாசாமி,பெருமாள்சாமி,மூத்த கணக்கு அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் ,தோழர் K.R .K அவர்கள் பேசினர் .தோழர் சித்திரவேல் முருகேசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்த,மாவட்டசெயலர் தோழர் ரவீந்திரன் சந்தனமாலை அணிவிக்க ,தோழியர் தனலட்சுமி அவர்கள் கிளை சங்கம் சார்பாக நினைவு பரிசை வழங்கினார்.தோழர் முருகேசன் ஏற்புரை நிகழ்த்தினார்.தோழர் சித்திரவேல் நன்றியுரை கூற கிளை கூட்டம் இனிதே நிறைவடைந்தது .
Thursday, November 28, 2013
மத்திய சங்க செய்திகள்,
27.11.2013 அன்று புதுடில்லியில் ஃபோரத்தினுடைய கூட்டம் நடைபெற்றது.
தோழர். சுரேஷ்குமார், பொதுச்செயலர், BSNLMS தலைமை தாங்கினார்.
முடிவுகள்
தோழர். சுரேஷ்குமார், பொதுச்செயலர், BSNLMS தலைமை தாங்கினார்.
முடிவுகள்
30.11.2013 அன்று நிர்வாகத்துடன் நடைபெற உள்ள அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டத்தில், நிறுவனத்தின் வருமானத்தைப் பெருக்கும் வழிவகைகளுக்கும் மொபைல் மற்றும் இதர சேவைகளுக்கான உபகரணங்களை வாங்குவதற்கான திட்டங்களுக்கும் முக்கியத்துவம் தந்து வலியுறுத்த வேண்டும்.
நிறுவனத்தின் நிதி நிலை சீரமைப்புக்காக புது டில்லியில் நடத்திய தேசீயக் கருத்தரங்கு மாநாட்டைப் போல், மாநில அளவிலும் தாமதமின்றி கருத்தரங்குகள் நடத்தப் படவேண்டும்.
புதுடில்லி கருத்தரங்கக் கூட்டத்தின் பற்றாக்குறை செலவினங்களை ஃபோரத்தின் உறுப்புச் சங்கங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
தோழர். K.G. போஸ். அவர்களின் திரு உருவ சிலை திறப்பு விழா
11 ஆம் தேதி டிசம்பர் அன்று ஒப்புயர்வு பெற்ற தொழிற்சங்க தலைவர் தோழர். K.G. போஸ். அவர்களின் நினைவு நாள் .அன்றைய தினம் புது டெல்லியில் உள்ள கே.ஜி. போஸ் பவனில் காலை 1000 மணி அளவில் தோழர். K.G. போஸ். அவர்களின் திரு உருவ சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது .
Wednesday, November 27, 2013
மாவட்ட செயற்குழு கூட்டம்
வருகின்ற 07-12--2013 சனிக்கிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் சிவகாசியில் காலை 10 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது. மாநில உதவி செயலர் தோழர் C.பழனிச்சாமி அவர்கள் செயற்குழுவை தொடக்கி வைத்து உரையாற்றுகிறார்.
ஆய்படு பொருள் :-
1. JCM /வொர்க் கமிட்டி items
2. மாவட்ட மாநாட்டு தயாரிப்பு பணி
3. பிரச்சனைகள் மீது விவாதம்
4. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற...
வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் புதுப்பித்தல்.
பல்வேறு கடன்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கனரா வங்கி, யூனியன் வங்கி மற்றும் இந்தியன் வங்கிகளோடு காலாவதியாவதை நமது மத்திய சங்கம் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.வங்கிகள் நமது நிர்வாகத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பித்தல் தொடர்பாக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .
Tuesday, November 26, 2013
அன்று குழந்தைத் தொழிலாளி... இன்று பள்ளி தலைமை ஆசிரியை!
அண்மையில் சென்னையில் நடந்த குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் ஏ.ராஜேஸ்வரி. இவரது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அவரது தற்போதைய முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அவரைப் பாராட்டி கெளரவித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஒன்றியம் ஓடக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றுகிறார் ராஜேஸ்வரி. சாதாரண தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஏன் இந்த கௌரவம், பாராட்டு? என கேட்போருக்கு இவரது கடந்த காலம் குறித்து தெரிந்தால், முன்னுதாரணமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் ராஜேஸ்வரி என்பது புரியும்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்தான் இவரது சொந்த ஊர். ராஜேஸ்வரியின் இளமைப் பருவம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கவில்லை. அதைப் பற்றி சொல்கிறார். ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்புக்குச் சென்றேன். அந்த நேரத்தில் வீட்டில் ரொம்ப வறுமை. அதனால் படிப்பைத் தொடர முடியவில்லை. குடும்பத்தாருடன் சேர்ந்து தீப்பெட்டிகளுக்கு லேபிள் ஒட்டும் வேலையை நானும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்புறம் படிப்பே மறந்துபோய்விட்டது. தீப்பெட்டி ஆலையில் முழுநேர தொழிலாளியாகிவிட்டேன்.அந்த நேரத்தில் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், எனது பெற்றோரை அணுகினர். படிப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினர். அதனால் மனம் மாறிய எனது பெற்றோர், குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிக்கு என்னை அனுப்பி வைத்தனர். 1989 முதல் 1991-ம் ஆண்டு வரை சிறப்புப் பள்ளியில் பயின்றேன்.
அதன்பிறகு வழக்கமானப் பள்ளியில் என்னை 6-ம் வகுப்பு சேர்த்தனர். ஏற்கெனவே என்னோடு 5-ம் வகுப்பு படித்தவர்கள், அப்போது 10-ம் வகுப்புக்குச் சென்றுவிட்டார்கள். அந்த வயதில் 6-ம் வகுப்பு என்பது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. விடுமுறை நாள்களில் எனது வகுப்புத் தோழர்கள் எல்லாம் தங்கள் பாட்டி வீடு, உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். ஆனால் நான் மட்டும் தீப்பெட்டி ஆலைக்குச் செல்வேன். எனது படிப்புச் செலவுகளை ஈடுகட்ட வேலைக்கு செல்வது கட்டாயமாக இருந்தது.
இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி படித்ததால் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர முடிந்தது. அதன் பின் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். பதவி உயர்வு பெற்று தற்போது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன்".
நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் ராஜேஸ்வரி. வாழ்க்கை, லட்சியம் என்று ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டால், “பள்ளியில் இடையில் நிற்கும் குழந்தைகளுக்கெல்லாம் எனது வாழ்க்கை அனுபவங்களையே முன்னுதாரணமாகக் கூறி கல்வியின் அவசியத்தை உணர்த்த வேண்டும். இதற்காக சிவகாசி செல்லும்போதெல்லாம் குழந்தைத் தொழிலாளர்களுக்காக நடைபெறும் பள்ளிகளுக்குச் சென்று எனது அனுபவங்கள் பற்றி மாணவர்களுடன் பேசி வருகிறேன்” என்றார் ராஜேஸ்வரி.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்ட மாநில ஆலோசகர் யோ.ஜெயப்பிரகாஷ் கூறுகையில், “இந்தியாவிலேயே முதல்முறையாக சிவகாசியில்தான் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின்கீழ் 1987-ம் ஆண்டு சிறப்புப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அந்தப் பள்ளிகள் அளித்த பலனை இப்போது ராஜேஸ்வரி போன்றவர்கள் மூலம் பார்க்கிறோம்” என்றார்.

நன்றி :- தி ஹிந்து
Monday, November 25, 2013
BSNL, PowerGrid & RailTel to get Rs 2,700 crore for optic fibre rollout
தேசிய அகன்ற அலைக்கற்றை சந்தைப்படுத்தல் விசயமாக பிஎஸ்என்எல், PowerGrid & RailTel ஆகிய நிறுவனங்கள் கண்ணாடியிழை கேபிள் போடுவதற்கான நிர்வாக கட்டணம் என்ற அடிப்படையில் ரூ 2,700 கோடி பெற உள்ளன. தொலைத்தொடர்பு துறை இதற்காக விரைவில் அமைச்சரவை குறிப்பை அனுப்ப உள்ளது. 70:15:15 என்ற விகித அடிப்படையில் 2700 கோடி ரூபாய் மேற்கூறிய நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
விரிவான செய்தி படிக்க : Click Here
TTA தேர்வு,
புதிய டெலிகாம் டெக்னிசியன் நியமன விசயமாக நிர்வாகத்தால் முன்மொழியப்பட்ட வரைவு திட்டத்தில் நமது அனைதிந்திய சங்கம் கீழ கண்ட மாற்றங்கள் செய்ய பரிந்துரைகளை அளித்துள்ளது .
1. டெலிகாம் ஸ்டோர் இல் பணி புரியும் ஊழியர்களும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் .
2. 10+2 தகுதி உடைய 3 ஆண்டுகள் சேவை முடித்த அனைத்து non executive கேடர்களும் அனுமதிக்கப் படவேண்டும்
3. 9020-17430 scale இல் உள்ள non executive கேடரில் 10+2 தகுதி பெறாத ஊழியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு நடத்தி அதில் தேர்வு பெற்றவர்களும் இந்த போட்டி தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவேண்டும்.நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு அளித்துள்ள கடிதம் படிக்க :Click Here
Friday, November 22, 2013
Thursday, November 21, 2013
JAO
கார்போரேட் அலுவலகம் 40% ஒதுக்கீட்டில் JAO பகுதி-II தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பெற்று ஆனால் மெரிட் அடிப்படையில் தகுதி பெறாதவர் பட்டியலை மாநில நிர்வாகங்களிடம் கேட்டுள்ளது.
கடிதம் பார்க்க : Click Here
30-09-2013 வரைக்கான JAO கேடரில் காலியிடங்களுக்கான விபரங்களை மாநிலங்களிடம் கார்போரேட் அலுவலகம் கேட்டுள்ளது.
கடிதம் பார்க்க :Click Here
GPF
GPF பட்டுவாடா செய்வதில் கடும் காலதாமதம் ஆகும் பிரச்னை விசயமாக இன்று நமது பொதுசெயலர் இயக்குனர் (நிதி) அவர்களிடம் பேசியபோது GPFக்கான நிதி ஒதுக்கீடு வரும் 26-11-2013 அன்று வெளியாகும் என உறுதி கூறியுள்ளார்.
Wednesday, November 20, 2013
ஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு
ஜம்மு காஷ்மீர் மாநில 2 நாள் மாநில மாநாடு ஸ்ரீநகரில் உற்சாகமாக தொடங்கியது.
செய்தி பார்க்க : Click Here
போனஸ்
உற்பத்தி திறனுடன் இணைந்த இன்சென்டிவ் விசயமாக புதிய பார்முலா உருவாக்கிட கூட்டுகுழு அமைக்கப்பட்டுள்ளது .தேசிய கவுன்சிலின் தலைவர் மற்றும் செயலர் இதன் உறுப்பினர்களாக இருப்பர் .கடிதம் பார்க்க :-Click Here
தேசிய கவுன்சில்
தேசிய கவுன்சில் கூட்டம் வரும் 09-12-2013 அன்று நடைபெறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
Tuesday, November 19, 2013
"இந்தியாவில் 50 சதவீதமானவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை"
தாராளமயமாக்கலின் பின்னணியில், கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வந்திருக்கிறதாம், காணுமிடந்தோறும் கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களும் பிரம்மாண்ட வணிக வளாகங்களும் எழுப்பபட்டுள்ளவாம், ஆனால் கழிப்பறை வசதி மட்டும் வளரவே இல்லையாம் .ஏழ்மை இன்னமும் பல பகுதிகளில் தலைவிரித்தாடவே செய்கிறதாம் .இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளதாம் என .அங்கலாய்க்கிறது உலகவங்கி .இந்திய ஆட்சியாளர்கள் கக்கூஸ் கட்ட மறந்த கதை படிக்க :-Click Here
மத்திய மற்றும் மாநில அரசு. துறைகள் மற்றும் அவற்றின் PSU கள் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசு, மற்றும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்கள் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது J O I N T போரத்தின் ஒரு உறுதியான கோரிக்கை . தற்போது இதற்கான ஒரு வரைவு திட்டத்தை டாட் அமைப்பு அமைச்சர் ஒப்புதலுக்கும் அதன் பின் அமைச்சர்கள் குழு கூட்ட ஒப்புதலுக்கும் அனுப்ப போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் மீட்சிக்கு உதவிடும் . செய்தி படிக்க :-Click Here
TTA ஆளெடுப்பு விதி
கார்போரட் நிர்வாகம் டெலிகாம் டெக்னிசியன்களுக்கான ஆளெடுப்பு விதிகளுக்கான வரைவை வெளியிட்டு உள்ளது . வரைவை பார்க்க :-Click Here
அனைத்திந்திய மாநாடு
நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் 7 வது அனைத்திந்திய மாநாடு வரும் நவம்பர் 2014 இல் கொல்கத்தா நகரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக நமது மத்திய சங்கம் தெர்வித்து உள்ளது . மேற்கு வங்க மாநிலம் ,கொல்கத்தா டெலிபோன்ஸ்,டெலிகாம் பாக்டரி மற்றும் டெலிகாம் ஸ்டோர் ஆகிய மாநிலங்கள் இணைந்து அனைத்திந்திய மாநாட்டை நடத்தும் .
Monday, November 18, 2013
ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் சிறப்புக்கூட்டம் 17-11-2013 அன்று நமது சங்க அலுவலகத்தில் தோழர் M .செல்வராஜ் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட செயற்குழுவை மாவட்ட செயலர் தோழர் முனியசாமி தொடக்கிவைத்து உரை ஆற்றினார் .நமது BSNLEU மாவட்ட சங்க உதவி செயலர் தோழர் M .முத்துசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் .ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் C . வினோத்குமார் சிறப்புரை நிகழ்த்தினார் செயற்குழு கூட்டதில் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. . .
1.மாவட்ட சங்கம் நிதி நெருக்கடியில் உள்ளதால் , உறுப்பினர் சந்தாவை ரூ 20 / வசூலிப்பது மற்றும் மாநில,மற்றும், மாவட்ட, சங்கநிதியாக ரூ 250 வசூல் செய்வது என முடிவு எடுக்கபட்டுள்ளது .
2.மாதம் ஒரு முறை கிளை கூட்டமும் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை செயற்குழு கூட்டமும் நடத்துவது என முடிவு எடுக்கபட்டுள்ளது ,
இப்படிக்கு
முனியசாமி , மாவட்ட செயலர் . Saturday, November 16, 2013
மகளிர் பயிலரங்கம்-
கோவையில் 08-12-2013 அன்று நடைபெறுவதாக இருந்த மகளிர் பயிலரங்கம்-14.12.2013தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
Friday, November 15, 2013
Thursday, November 14, 2013
கிளைச் செயலர்களுக்கு...
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு பணியாளர் விசயங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் மற்றும் உத்தரவுகளின் பிரதிகளை கொடுக்க வேண்டும் என கார்போரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது .உத்தரவு பார்க்க :- Click Here
அனைத்து சங்க கூட்டம்
பிஎஸ்என்எல் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி விசயமாக அனைத்து சங்கங்களின் விழிப்புணர்வு அமர்வு 30-11-2013 அன்று நடைபெற உள்ளது .கடிதம் பார்க்க :-Click Here
Wednesday, November 13, 2013
லோக்கல் கவுன்சில் கூட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று (13-11-2013)லோக்கல் கவுன்சில் கூட்டம் பொதுமேலாளர் திருமிகு S.E.ராஜம், ITS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கீழ்க்கண்ட பிரச்சனைகள் இன்று விவாதிக்கப்பட்டன.
1. Industrial Tariff of Electricity to BSNL HT Lines:-
The
Electricity tariff applicable to BSNL is industrial tariff instead of
Commercial tariff as per the Act of BSNL on conversion of the Enterprise of
Government of India during 2000. It was justified and judged by Hon’ble MUMBAI
High Court judge to provide Industrial tariff during the period from
August-2011. Maharashtra Circle
has already claimed from April-2010 as per the judgment of the Court. But our
Circle has not been claimed. So it may be taken in to Court centrally all over India
to implement industrial tariff. Necessary suggestions may be sent to circle
office from our SSA with the data.
பல்வேறு விதமான மின் கட்டணங்கள் தொடர்பான பட்டியலை ஒப்பிட்டு மாநிலச் சங்கத்திற்கு இந்த ஒப்பீட்டு விபரத்தை அனுப்புவதாகக் உறுதியளித்திருக்கிறார்கள்.
பல்வேறு விதமான மின் கட்டணங்கள் தொடர்பான பட்டியலை ஒப்பிட்டு மாநிலச் சங்கத்திற்கு இந்த ஒப்பீட்டு விபரத்தை அனுப்புவதாகக் உறுதியளித்திருக்கிறார்கள்.
2. Maintain under ground cables and pressing for
purchasing new cables:-
In the past
7 years towns and villages of our districts become geographically wide and
dense in population. At the same time all Government Sectors such as
Municipality, Highways, TWAD… execute their digging work for the development
& expansion work and damaged our cables. But we are executing only maintenance
work, in an unsatisfactory way. Proper effects should be made to maintain our
u/g cables. At the same time new cables should be laid in expansion areas, such
as Madurai Road
at Virudhunagar. Requisition for cables should be sent to circle office.
கேபிளுக்கான தேவை பற்றிய விபரங்கள் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் கேபிள் வரும் என எதிர்பார்ப்பதாகவும், கேபிள் வந்த உடன் புதிய தொழில் நுட்பட்திற்குப்(NGN) பயன்படும் வகையில் கேபிள்கள் போடப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
மேலும, விரைவில் கேபிள் போடுவதற்காக டெண்டர் விட இருப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

3.Relocation of Pillar24 of
RR NAGAR:-
Pillar
24 of RR nagar, damaged while widening work by Highways should be relocated as
early as possible to avoid the closure of that pillar area connections due to
delay in rectification of faults.
தொலைபேசி நிலையம் மாற்றப்பட இருப்பதாகவும், அந்தப் பணியுடன் இணைத்து இந்தப் பழுதும் சரிசெய்யப்படும் என்றார்கள்.
தொலைபேசி நிலையம் மாற்றப்பட இருப்பதாகவும், அந்தப் பணியுடன் இணைத்து இந்தப் பழுதும் சரிசெய்யப்படும் என்றார்கள்.
At
Aruppukottai, due to road widening work etc, the Pillars 25 and 41 are gone
below the ground level. During rainy time rain water get into the pillar and
causes severe faults. So the Pillars 25 and 41 are to be rearranged immediately
to ensure good service to the customers.
பில்லர் 25ற்கான பணிகள் முடிவடைந்து விட்டன.
பில்லர் 24 இடம் நகர்த்தப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி உள்ளோம்.
41 பாதுகாப்பாக இருப்பதாக கோட்டப் பொறியாளர் கூறினார். பாதுகாப்பாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

At VGR, the
Pillars 40, 42, 54 and 55 are in bad condition and causes repeated complaints.
So re-arrangement of these pillars is absolutely necessary to reduce the fault
rate and to improve our service.
4 பில்லர் என்பதால் அதிக நிதி நேதவைப்படுவதாகவும், நிதி சார்ந்த பிரச்சனையால் பணி தாமதப்படுவதாக கோட்டப் பொறியாளர் கூறினார். குறைவான நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒவ்வொரு பில்லராக வேலையை முடிக்கும்படி பொதுமேலாளர் வழிகாட்டி உள்ளார்கள்.
4. Provision of New Battery
:-
The
battery sets at Uppathur are in bad condition.
They should be scraped and replace in time.
புதிய பேட்டரி வந்தவுடன் மாற்றப்படும் எனக் கூறியுள்ளார்கள்.
5. Provision of New Computer:-
An old P4 computer is available at Bus stand RSU,
Sivakasi. It is very slow and not sufficient to maintain 4 exchange service
orders and to carry over all other computer works. That computer will be
replaced with a new one with printer.
புதிய கணணி வரும் வரை தற்சமயம் வேறு ஏதாவது ஒரு இடத்தில் இருப்பதைக் கொண்டு மாற்று ஏற்பாடு செய்யும்படி பொதுமேலாளர் வழிகாட்டி உள்ளார்கள்.
புதிய கணணி வரும் வரை தற்சமயம் வேறு ஏதாவது ஒரு இடத்தில் இருப்பதைக் கொண்டு மாற்று ஏற்பாடு செய்யும்படி பொதுமேலாளர் வழிகாட்டி உள்ளார்கள்.
All CRT monitors can be replaced with LCD Monitors
in order to save power consumption.
அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய விஷயம் என்பதால் தற்சமயம் ஏதும் செய்ய முடியாது என்றார்கள்.
அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய விஷயம் என்பதால் தற்சமயம் ஏதும் செய்ய முடியாது என்றார்கள்.
6. Formation of Task force:-
Task force for attending primary cable faults to be reformed at DE level;
A technical team of TTAs (option may be called for) may be formed as task force
for attending emergency indoor faults (apart from their routine work) at SSA
level.
பரீட்சாத்த முறையில் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை கோட்டங்களில் உருவாக்கி நடைமுறைப்படுத்திப் பார்ப்பது என்றும் பயன்பாட்டை மதிப்பீடு செய்து மற்ற கோட்டங்களுக்கு விரிவு படுத்தலாம் என்றும் கூறப்பட்டது.
7.IMPROVE Quality of SERVICE:-
1.To
maintain Thiruchuli, (RSU exchange with GSM BTS & Will BTS and also data
circuits, 2 p wire circuits, 6 TNSWAN connections & 200 b/b connections)
Narikkudi (AnRax with GSM and Wi-Max BTS) and Veeracholan (comparatively high
revenue exchange with more broad band connections) with Head Quarters even
Narikudi or Thiruchuli. Posting of TTA for these exchanges must improve the
quality of BSNL services.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு டிடிஏக்களில் ஒருவரை திருச்சுழிக்கு தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு டிடிஏக்களில் ஒருவரை திருச்சுழிக்கு தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.
2. One
additional TM is absolutely necessary for Sankaralingapuram exchange with 200 DEL and 150 WILL
connections.
அதிகப்படியான டிஎம்கள் பணியில் உள்ள இடங்களைக் கண்டறிந்து அவர்களை விருப்ப அடிப்படையிலோ அல்லது மாறுதலுக்கான நெறிகாட்டுதலின்படியோ அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் கலந்தாலோசித்து ஏப்ரல் 2014ல் சங்கரலிங்காபுரம் போன்று டிஎம்கள் தேவைப்படுகின்ற பிற இடங்களிலும் நியமிக்கலாம் என ஒத்துக் கொண்டுள்ளார்கள்.

3. There are
11,200 DELs including 5,000 B/B lines at Sivakasi town. But the Administrative,
Responsible, Maintenance Officer Posts (One SDE External and 2 JTO External)
are kept vacant without personals. It causes delay in routine work and results
in poor service, inconvenience to the customers, and bad name to our
organization. SDE and JTOs should be posted or deputed immediately.
அருப்புக் கோட்டையில் இருந்து மாற்றலாகி வந்த JTO மூலமாக ஒரு இடம் நிரப்பப்பட்டுள்ளது. மற்றும் ஒரு JTO மற்றும் SDE இடங்கள் தகுதியான அதகாரிகள் கிடைக்கும்போது மட்டுமே நிரப்பப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

8. Building maintenance works:
a)Aruppukottai water pipe lines are not in good
condition. It causes water leakage and wastage of water. Repair work to be
carried out immediately. Water tapes, wash basins and urinals are to be
repaired.
விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
b)Thiruchli exchange departmental building floor
sinking to be observed by the civil wing and action must be taken to rectify.
உடனடியாக சரிசெய்யப்பட வேண்டிய விஷயம் என்பதால், அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி பொது மேலாளர் தொடர்புடைய அதிகாரிகளுக்கு வலியுறுத்தி உள்ளார்கள்.
c)Water pipe line repairing is necessary at SVK
outdoor building; Both Gents and Ladies toilets have no water facility,
carrying water buckets to the toilets at
duty hours is inconvenient to everybody, particularly for lady staff.
சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
d) Municipal water connections should be
provided for sivakasi outdoor staff Quarters and Rajapalayam Co-axial
Building.
சிவகாசியில் இருக்கின்ற இணைப்பில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யப்பட வேண்டும். சரி செய்யப்படும். ராஜபாளையத்தில் இணைப்பு கொடுப்பதை நகராட்சி நிறுத்தி வைத்திருப்பதாகவும், மீண்டும் நகராட்சியை அனுகி ஆவன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளோம்.

9. Scrapping of unserviceable stores at following
stations:
Sattur
Rajapalayam
Sivakasi outdoor office
Aruppukottai.
(Scrapping
of unserviceable stores discussed many times with the authorities but necessary
action should not be taken till now)
சாத்தூரில் ஏலத்தில் எடுத்தவர் இரண்டு என்ஜின்களை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டி உள்ளது. மற்றவை ஏலத்தில் விடப்பட்டு எடுத்துச் செல்லப் பட்டுள்ளன.
பிற இடங்களில் விரைவில் ஏலத்தில் விடுவதற்கான ஆயத்தங்களை கோட்டப் பொறியாளர்கள் முன் முயற்சி எடுத்து செய்ய வேண்டும் என் வழிகாட்டப்பட்டுள்ளது.

10. Shifting of Exchanges:-
Malli
exchange should be shifted to the own building, It is also a long bending case
in our SSA
டிசம்பர் முதல் வாரத்திற்குள் தொலைபேசி நிலையம் மாற்றப்பட்டுவிடும் என உறுதியளித்துள்ளார்.
டிசம்பர் முதல் வாரத்திற்குள் தொலைபேசி நிலையம் மாற்றப்பட்டுவிடும் என உறுதியளித்துள்ளார்.
Vembakkottai
exchange should be shifted to the newly located building. As the new building
is in the primary route, considerably lesser amount of cable is sufficient for
shifting.
விரைவில் பணிகள் தொடங்க ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
விரைவில் பணிகள் தொடங்க ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
N.Subbaiyapuram exchange to
be shifted.
டிசம்பர் முதல் வாரத்திற்குள் தொலைபேசி நிலையம் மாற்றப்பட்டு விடும் என உறுதியளித்துள்ளார்கள்.
டிசம்பர் முதல் வாரத்திற்குள் தொலைபேசி நிலையம் மாற்றப்பட்டு விடும் என உறுதியளித்துள்ளார்கள்.
11. Supply of New tappers to
Outdoor Telecom mechanics.
டாப்பர் வாங்குவது மாநில நிர்வாகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வருவதால், மாநில நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளதாகவும், வந்தவுடன் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் கூறி உள்ளார்கள்.
12.Payment of Salary ,GPF etc through
RTGS Method:-
In
recent days funds for Salary and GPF are credited from Circle on the last day
of the month. It delayed the payments. Hence all the payments like salary and
GPF may be paid to the staff through RTGS method.
நடவடிக்கை எடுக்க ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
13.Minimizing sub exchanges:-
In Virudhunagar SSA
more sub exchanges are functioning without norms. Hence the district
administration makes arrangements to combine such exchanges with main exchanges
at the earliest please.
50 இணைப்புகளுக்குக் குறைவான தொலைபேசி நிலையங்களை மூடுவதென்பது நிர்வாகத்தின் கொள்கை முடிவாக உள்ளது. அதன் அடிப்படையில் இது செயல்படுத்தப்படும்.
50 இணைப்புகளுக்குக் குறைவான தொலைபேசி நிலையங்களை மூடுவதென்பது நிர்வாகத்தின் கொள்கை முடிவாக உள்ளது. அதன் அடிப்படையில் இது செயல்படுத்தப்படும்.
14. Provision of Safety locker for
safe keep of TRC Collections to CSCs:-
In
our SSA the cash collected in the customer service centre are kept in the CSCs
by who collects the amount at their personal risk .Since there is no provision of
proper safety locker in many CSCs. Hence the safety locker facility should be
provided to the CSCs where the locker facility is not available.
அனைத்து CSCகளிலும் லாக்கர் உள்ளது.
அனைத்து CSCகளிலும் லாக்கர் உள்ளது.
15. Delayed Payment to the Hospitals
under MRS Scheme:-
Due
to delay in payment to the hospitals, the hospitals are not interested to admit
our staff for indoor treatment. Necessary steps may be taken to pay the bills
at the earliest.
அப்படி ஏதும் நடந்ததாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி ஏதும் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு சுட்டிக் காட்டினால், அது சரிசெய்யப்படும்.
அப்படி ஏதும் நடந்ததாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி ஏதும் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு சுட்டிக் காட்டினால், அது சரிசெய்யப்படும்.
16. Maintain unanimous working hours
for Customer service Centres:-
In
our SSA Six customer service centres are functioning. The unanimous
Working
hours are not maintained in all the customer service centre. Due to acute
shortage of man powers, the working hours of all the customer service centre may fix 0930 hours to 1800 hours. It is very helpful to the customers
approaching the CSCs,
டைப் I நேரம் மாற்றுவது என்பது சாத்தியமில்லை. வேண்டுமானால் கலெக்சனுக்காக ஒரு கவுண்டரில் மட்டும் டூட்டி போடலாம். மற்ற கவுண்டர்கள் வழக்கமான நேரத்தில் இயங்கலாம். ரீ சார்ஜ் மற்றும் டாப் அப் போன்றவற்றை CSR இல் உள்ள பிரான்சீ மூலமாக செய்யலாம் என்று பொது மேலாளர் வழி காட்டியுள்ளார் .

17.Supply of drinking water to the
staff:-
In
Virudhunagar SSA more than 600 staffs are working. They are not provided with
proper drinking water facility. Hence the administration may take necessary
steps to provide the mineral water in bubble top canes at the office premises.
குடி நீர் வழங்கப்படுதில் பிரச்சனை இல்லை. மினரல் வாட்டர் வழங்க வாய்ப்பு இல்லை.
குடி நீர் வழங்கப்படுதில் பிரச்சனை இல்லை. மினரல் வாட்டர் வழங்க வாய்ப்பு இல்லை.
Tuesday, November 12, 2013
இது தான் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்
"தோழர், என் மொத்த மாத சம்பளம் இப்போது ரூ.அரை லட்சத்தை தாண்டிவிட்டது.நான் கனவில் கூட ஒரு நாள் என் சம்பளம் ரூபாய் அரை லட்சம் அடையும் என்று என் வாழ்வில் எதிர் பார்த்தது இல்லை . பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தால் மட்டுமே இதை சாத்தியமாக்க முடிந்தது " K .K .விஜயா , SR TOA கேரளா மாநிலம் பாலகாட்டில் இருந்து .
திகைக்க வைத்த அருப்புகோட்டை கிளையின் பொதுக்குழு கூட்டம்
அருப்புகோட்டை கிளையின் பொதுக்குழு கூட்டம் இன்று (12-11-2013) அருப்புகோட்டை தொலை பேசி நிலைய வளாகத்தில் கிளை தலைவர் தோழர் U .B .உதயகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட மகாநாட்டை அருப்புகோட்டையில் நடத்துவது என்ற மாவட்ட செயற்குழுவின் முடிவை அருப்புகோட்டை கிளை சங்கம் ஏற்று கொண்டது . மார்ச் மாதம் முதல் வாரத்தில் மாநில செயலரின் தேதி வாங்கிகொண்டு 2 நாட்களாக மாவட்ட மகாநாட்டை நடத்துவது. நன்கொடை விசயமாக பேசியவுடன் கிளை உறுப்பினர்கள் அங்கேயே கிட்டதட்ட ரூபாய் 50,000/- க்கும் மேல் நன்கொடை கொடுக்க இசைந்து விட்டது நம்மை திகைக்க வைத்தது .நம் சங்கத்தின் மேல் நம் உறுப்பினர்களின் திடமான பற்றை,நம்பிக்கையை என்னவென்பது ! மகாநாட்டின் வரவேற்பு குழு செயலராக தோழர் .U .B .உதயகுமார் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் .
"மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரியது" என்பதை 24 உறுப்பினர்களை கொண்ட அருப்புகோட்டை கிளை நிருபித்துவிட்டது .கிளை செயலர் தோழர் .R .ஜெயக்குமார் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் கண்ணன் , சந்திரசேகரன் , தோழர் ராஜ்மோகன் , இளம் தோழர் .அஷ்ரப் தீன் , தோழர் கிருஷ்ணசாமி , தோழர் செல்வராஜ் , தோழர் கணேசன் ,தோழர் சுப்புராம் ,தோழியர் ஆலிஸ் அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள்
தொடர் முயற்சிகளின் சிறு விளைவாய்...
யுனைட்டெட் போஃரத்தின் 2012 நவம்பர் 16 ஆம் நாள் வேலை நிறுத்தத்தின் விளைவாகவும், தொடர்ச்சியான சாத்தியமான போராட்டங்களின் காரணமாகவும் காஸியாபாத் மாவட்டச் செயலர் தோழர் சுகேந்தர் பால் சிங் கொலையில் தொடர்புடைய காஸியாபாத் பொது மேலாளர் அதேஸ் குமார் குப்தாவை கார்ப்பரேட் நிர்வாகம் இடமாற்றம் செய்துள்ளது.
Monday, November 11, 2013
மாவட்ட செயற்குழு
ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட செயற்குழு கூட்டம் 17-11-2013 அன்று விருதுநகரில் நடைபெற உள்ளது .ஒப்பந்த ஊழியர்களின் மாநில செயலர் C .வினோத்குமார் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் தோழமையுடன் அழைக்கிறது .
A I B S N L E A மகாநாட்டில் நமது பொது செயலர்
11-11-2013 அன்று நாசிக்கில் நடைபெற்று கொண்டு இருக்கும் A I B S N L E A மகாநாட்டில் நமது பொது செயலர் கலந்து கொண்டு உரையாற்றும் போது FORUM OF BSNL சங்கங்கள் மற்றும் அசோசியேசனால் சாதித்தவற்றை நினைவுகூர்ந்தார்.மேலும் இதை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தையும் சுட்டி காட்டினார் .வேலை கலாசாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் அதே நேரத்தில் அரசின் தனியார்மய ஆதரவு கொள்கைக்கும்,பொது துறைக்கு எதிரான போக்கிற்கும் எதிராக போராட வேண்டிய கட்டாயத்தையும் அவர் சுட்டி காட்டினார். புகைப்படம் பார்க்க :-Click Here
Sunday, November 10, 2013
Thursday, November 7, 2013
ஏன் இந்த கொலைவெறி
தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் எஸ்ஸார் ஆயில் லிமிடெட் நிறுவனங்களுடன் அடுத்த ஆண்டு முதல் இந்திய ரயில்வேக்கு டீசல் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்ய போவதாக இந்திய ரயில்வே முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதுவரை ரயில்வேக்கு பொதுத்துறை நிறுவனங்கள்தான் டீசல் சப்ளை செய்கின்றன.தனியாரை வளர்த்து பொது துறைகளை அழிக்க துடிக்கும் இவர்களின் கொலைவெறியை என்ன என்பது?
<செய்தி படிக்க> Click Here
லோக்கல் கவுன்சில் மீட்டிங்
புதிய அங்கீகார விதிகள் உருவாக்கபட்ட பிறகு நடைபெற்ற 6 வது சரிபார்ப்பு தேர்தலுக்கு பின்,வரும் 13-11-2013 அன்று புதன்கிழமை விருதுநகர் மாவட்ட லோக்கல் கவுன்சில் மீட்டிங் நடைபெற உள்ளது.
நவம்பர் புரட்சிதின நல்வாழ்த்துக்கள்
உலகைக் குலுக்கிய நவம்பர் புரட்சி நடந்தேறிய நாள் இன்று. உலகில் முதன் முதலாய் மனிதனை மனிதன் சுரண்டாத சோசலிச அமைப்பை அமைப்பதற்கு கால்கோள் நடத்திய நாள் இன்று.எல்லோரும் எல்லாமும் பெறுகிற சோசலிச சமுதாயத்தை அமைத்திட இந்நாளில் சூளுரைப்போம்.
அனைவருக்கும் நவம்பர் புரட்சிதின நல்வாழ்த்துக்களை விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கம் உரித்தாக்குகிறது.
Wednesday, November 6, 2013
மாவட்ட செயற்குழு செய்திகள்
மாவட்ட சங்கத்தின் செயற்குழு நவம்பர் 6 ஆம் நாள் நடைபெற்றது. செயற்குழுவிற்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் தோழர் ரவீந்நதிரன் நோக்க உரையாற்றினார். செயற்குழுவில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
நமது மாவட்ட மாநாடு அருப்புகோட்டையில் நடைபெறும். தேதி மாநில சங்கத்துடன் பேசி இறுதி செய்யப்படும். மாவட்ட மாநாடு 2 நாட்கள் நடைபெறும். முதல் நாள் பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாகவும், 2ஆம் நாள் பொது அரங்கமாகவும் நடைபெறும். சார்பாளர் கட்டணம் ரூபாய் 50/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மாநாடு நன்கொடை ஆக ஊழியர்களிடம் தலா ரூபாய் 100/- வாங்குவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செயற்குழுவில் நமது மாநில உதவி தலைவர் தோழர் வெங்கட்ராமன் தலைமை பண்பு பற்றி மாவட்டச் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு சிறப்பான வழிகாட்டுதலை வழங்கினார்.
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...