உற்சாகத்தோடும் , எழுச்சியுடனும் நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழு
03/09/2019 அன்று விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மிகுந்த உற்சாகத்தோடு நடைபெற்றது .முதல் நிகழ்ச்சியாக சங்க கொடியேற்றமும் ,கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது .மாநில அமைப்பு செயலர் தோழர் பழனிக்குமார் கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்தார் .அதன் பின் ஆகஸ்ட் மாத ஊதியத்தை வழங்குவதை காலதாமதம் செய்யும் நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .அதன் பின் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற எழுச்சி மிகு கூட்டத்தில் 8 வது சரிபார்ப்பு தேர்தலை விளக்கி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ,மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பேசினர் .எழுச்சி உரையாக மாநில அமைப்பு செயலர் தோழர் பழனிக்குமார் விரிவாக உரை நிகழ்த்தினார் .FTTH கருத்தரங்கை தோழர் கண்ணன் அவர்கள் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் . 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட இச் செயற்குழுவை மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி நவின்று முடித்து வைத்தார் .
\
No comments:
Post a Comment