இன்று 3 வது மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .வரும் 3/12/2018 முதல் நடக்க இருக்கின்ற காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் ,ஜனவரி மாதம் நடைபெற இருக்கின்ற 2 நாள் வலை நிறுத்தம் .அமைப்பு நிலை ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் ,அனைந்திந்திய மாநாடு ,நடந்து முடிந்த போராட்டங்ககள் ஒரு ஆய்வு என்ற பொருளில் விவாத குறிப்பை மாவட்ட செயலர் வழங்கி தொடக்க உரை நிகழ்த்தினார் .19/11/2018 அன்று நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற தோழர் சமுத்திரக்கனி ,மாநில அமைப்பு செயலர் அக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி விரிவாக பேசினார் .விவாத குறிப்பின் பெயரில் நடைபெற்ற விவாதத்தில் அனைத்து கிளை செயலர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர் .
1.வரும் 27/11/2018 அன்று அனைத்து சங்க மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தை விருதுநகரில் காலை 1130 மணி அளவில் நடத்துவது .
2.28/11/2018 அன்று ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நுழை வாயிற் கூட்டம் நடத்துவது .
3.29/11/2018 அன்று சிவகாசி மற்றும் சாத்தூரில் நுழை வாயிற் கூட்டம் நடத்துவது .
4.30/11/2018 அன்று அருப்புக்கோட்டையில் கூட்டம் நடத்துவது .
5.தொடர்ந்து AUAB சார்பாக நடைபெறும் இயக்கங்களை புறக்கணிக்கும் NFTE சங்கத்தோடு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்துவது .
6.BSNL at your door step இயக்கத்தை சக்திமிக்க இயக்கமாக நடத்துவது
7.ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நமது ஊழியர்கள் ,ஒப்பந்த ஊழியர்கள் மீது நடைபெறும் அராஜக போக்கு இனி நிகழாது என்று மாவட்ட பொது மேலாளர் கொடுத்த உறுதி மொழியை நம்பிக்கையோடு எதிர்கொள்வது .
8. ஸ்ரீவில்லிபுத்தூர் எழுத்தர் பற்றாக்குறைக்கு நமது ஆலோசனையை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து இருக்கிறோம் .
9.GM அலுவலகத்தில் நமது ஊழியர்களுக்கு தொடந்து பிரச்சனைகளை உருவாக்கி வரும் ஒரு அதிகாரியின் போக்கு சரியல்ல என்பதை பொது மேலாளர் அவர்களுக்கு சுட்டி காட்டி உள்ளோம் .தேவைப்பட்டால் உரிய தொழிற் சங்க நடவடிக்கையை நமது சங்கம் மேற்கொள்ளும் .
10.ஜனவரி மாதம் நடக்க உள்ள வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க மாவட்டம் முழுவதும் ஒரு சுற்றுப்பயண நிகழ்ச்சி அனைத்திந்திய மகாநாட்டிற்கு பின் வெளியிடப்படும் .
11.சார்பாளர் மற்றும் பார்வையாளர் ஆகியோருக்கு பிரதிநிதிகள் கட்டணத்தில் 50% தொகையை மாவட்ட சங்கம் ஏற்று கொள்ளும் .
12.தல மட்ட பிரச்சனைகளை மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் தொகுத்து வழங்கி அது முறையாக மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்படும் .
13.மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் வெங்கடசாமி ஆகியோர் கிளை செயலர்களாக தேர்வு செய்யப்பட்டதால் அவர்கள் வகித்த மாவட்ட அமைப்பு செயலர் பதவிகளுக்கு ராஜபாளையம் தோழர்கள் பொன்ராஜ் மற்றும் வேலுசாமி ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .
14.நடந்து முடிந்த தர்ணா மற்றும் பேரணி நிகழ்வுகளை பெரும் வெற்றிகரமாக்கிய அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளை மாவட்ட செயற்குழு பெரிதும் பாராட்டியது .
15.நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் அனைத்து கிளை மாநாடுகளையும் நடத்திய அனைத்து கிளைகளுக்கு மனமார்ந்த நன்றியை மாவட்ட சங்கம் தெரிவித்து கொள்கிறது
16. 3/12/2018 முதல் தொடங்க உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க அனைத்து பணிகளையும் உடனடியாக தொடங்குவது .
மாவட்ட பொருளர் நன்றி கூற மாவட்ட செயற்குழு இனிதே நிறைவுற்றது .
No comments:
Post a Comment