ஒற்றுமைக்கு பங்கம் வந்தாலும் தடைகளை தாண்டி எழுச்சியுடன் நடைபெற்ற 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொண்ட அனைத்து ஊழியர்கள் ,மற்றும் அதிகாரிகள் ,ஓய்வூதியர்கள் ,ஒப்பந்த ஊழியர்கள் ,கடந்த 3 நாட்களும் வந்த அனைத்து தோழர்களுக்கும் தங்கள் கைகளால் குளிர் பானம் செய்து வழங்கிய நமது SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து மற்றும் மாவட்ட பொருளாளர் தோழர் பாஸ்கரன் ,ராஜபாளையம் பகுதில் இருந்து ஒட்டு மொத்தமாக ஊழியர்களை அணிவகுத்து வர செய்த நமது ராஜை பகுதி மாவட்ட சங்க மற்றும் கிளை சங்க தோழர்கள் ,3 நாட்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற நமது மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,2 நாட்கள் பங்கேற்ற நமது சிவகாசி மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் ,பந்தல் மற்றும் சேர் ஏற்பாடு செய்த மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன் ,3 நாட்களும் எழுச்சிமிகு கோஷங்களை எழுப்பிய நமது GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் ,போராட்ட நிதிக்கு உதவிய SNEA மற்றும் AIBSNLEA சங்கத்திற்கும் ,நமது அனைத்து மாவட்ட சங்க மற்றும் கிளை செயலர்களுக்கும் முஷ்டி உயர்த்தி நன்றியை உரித்தாக்குவோம் .
No comments:
Post a Comment