ஏப்ரல் 4 அன்று நடைபெற்ற 25ஆவது லோக்கல் JCMல் விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் தொழில் அமைதியற்ற சூழல் பற்றியும் மிரட்டல் போக்குகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இதனை அதிகாரிகளும் ஒத்துக் கொண்டனர். தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முதன்மைப் பொது மேலாளர் கூறினார்.
JCMற்குப் பின்னர் முதன்மைப் பொது மேலாளரைச் சந்தித்து மே 29, 30ல் நடைபெறவிருக்கும் நமது மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தோம். அவசியம் வருவதாக ஒப்புதழ் தெரிவித்துள்ளார்.
MAN POWER ஒப்பந்தத் தொழிலாளர்களை பல்வேறு மாவட்டங்கள் போல் SEMI SKILLED பிரிவில் கொண்டு வர கேட்டுக் கொண்டோம். வரும் டெண்டர் SEMI SKILLED பிரிவில் கோரப்படும் என்று கூறினார்.
இந்த நேர் காணலில் மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக் கனி, மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார், மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன், பொறுப்பு மாவட்டச் செயலர் தோழர் ஆ.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment