7 சரிபார்ப்பு தேர்தலில் 6 இல் வெற்றி பெற்று இரட்டை ஹாட்ரிக் வெற்றி பெற்ற மாபெரும் சங்கம் நமது BSNLEU .ஊழியர்கள் ,அதிகாரிகள் அனைவரையும் ஒற்றுமை சங்கிலியால் இணைத்து இந்த நிறுவனத்தை காப்பதற்கு தொடர்ந்து செயல்படும் சங்கம் நமது சங்கம் .நமது சங்கத்தில் immunity வசதியை அனுபவித்து கொண்டே நமது சங்கத்திற்கு எதிராக தொடர்ந்து உளவாளி பணி செய்ததை தனது கடமையாக கொண்ட இந்த நபர் தன் மீது நடவடிக்கை வந்துவிடும் என்று அஞ்சி தனது தாய் சங்கத்தில் இணைந்து விட்டார் .எதற்கு தெரியுமா ? தான் ட்ரான்ஸ்பர் செல்லாமல் தப்பிப்பதற்கு ! தில் இருந்தால் ஓடிப்போன சங்கத்தில் மாவட்ட பொறுப்பு ஏற்காமல் இருந்து பார்க்கட்டும்? இந்த நபர் தப்பிப்பதற்கு பாவம் அந்த சங்கத்தின் அப்பாவி யாரோ பலியாடாவது நிச்சயம். துட்டு கொடுத்து பதவி வாங்கும் இவர்களால் எப்படி ஊழியர்களை பாதுகாக்க முடியும்? எத்தனை கரங்கள் வந்தாலும் அது இணைத்து வந்தாலும், இணையாது வந்தாலும் இந்த ஆதவனை (BSNLEU) மறைக்க எவனாலும் முடியாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் இது போன்ற நபர்களால் நமது மாவட்டத்தில் ஒற்றுமை சிதையும் போக்கு இருப்பதை புரிந்து கொண்டவர்கள் புரிந்தால் சரி.
“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை...
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை” - கலைமாமணி முத்துக்கூத்தன்.
“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை...
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை” - கலைமாமணி முத்துக்கூத்தன்.
விமர்சனம் என்பது ஒரு வழி பாதை அல்ல .
No comments:
Post a Comment